Saturday, 10 May 2014

Birds Show In Puthiya Thalamurai channel



 புதிய தலைமுறை தொலைக்காட்சியில் 

இன்று புதிய தலைமுறையில் தொலைக்காட்சியில் அருமையான நிகழ்ச்சி ,பறவைகளின் வலசை ,சலீம் அலி ,முகமத் அலி ,பள்ளிகரணை சரணாலயம்,பறவைகள் எதற்கு வலசை வருகிறது , பறவை சரனாலயகள் எப்படி மனிதார்களால் அழிகபடுகிறது என்பதை பற்றி மிக அருமையாக ஒளிபரபப்பட்டது .
 

எந்த பறவையும் மனிதர்கள் போல் தனது இடத்தை விற்பதில்லை , அதற்கு தமது இடத்தை மனிதனால் அழிகபடுகிறது என்றும் தெரிவது இல்லை. தமது ஒரு மில்லி மீட்டர் இடத்தை கூட விட்டு தர மனிதன் தயாரில்லாதபோது ,என்ன உரிமையில் பறவைகளின் இடத்தில வீடு கட்டபடுகிறது ? 

யானை ஊருக்குள் வந்துவிட்டது ,சிறுத்தை வந்துவிட்டது என்று நிறைய செய்திகள் படிக்கிறோம் ,உண்மை அதுவல்ல , நாம் தான் அவற்றின் இடத்தில வீடுகட்ட துவங்கிவிட்டோம்.

யானை ஊருக்குள் வந்துவிட்டது என்ற செய்தியை அடுத்தமுறை நன்றாக படித்து பாருங்கள் ,சென்னை அண்ணா சாலையில் வந்திருக்காது , மதுரையில், திருச்சியில் ,கடலூரில் வந்திருக்காது ,மனிதன் அவற்றின் இடத்தில குடியேறிய பகுதிக்கு வந்திருக்கும். 

நம் வீட்டிற்கு யாரும் சும்மா கூட நுழைவதை விரும்பாமல் தான் வீட்டை சுற்றி பெரிய சுவர் ,காலிங் பெல் ,பெரிய நாய் , காவலாளி அது மட்டும் இல்லாமல் புதிய தொழில்நுட்பமான CCTV கேமரா ,இதில் எதுவுமே இல்லாத அவற்றின் இடத்தில நாம் நுழைந்தால் ?  

வாழ இடமா இல்லை, திருப்பி சண்டைபோட தெரியாத பறவைகளின் இடத்தில் குடியேறி அதன் குடியை ஏன் கெடுப்போம் ?

ஹிட்ச்காக் இயக்கிய THE BIRDS படத்தை பாருங்கள், படத்தில் காகங்கள் மனிதனை தாக்கும் ,அதேபோல் பறவைகள் நம்மை தாக்க தொடங்காதவரை, நாம் அவற்றின் இடத்தை அழித்து கொண்டேயிருப்போம்.........
 

Wednesday, 23 April 2014

Bird Books in Tamil


தமிழில் நாம் படிக்கவேண்டிய காட்டுயிர் மற்றும் சுற்றுசூழல் நூல்கள் .


1.நம்மைச் சுற்றி காட்டுயிர் –சு.தியடோர் பாஸ்கரன் , வெளியீடு-பாரதி
 புத்தகாலயம் ,ரூபாய் 25 ,தொலைபேசி -044-24332424, 24332924.

2.மிக அருகில் மிருகம் – டாக்டர் .ஆர்.கோவிந்தராஜ் , வெளியீடு –அம்ருதா,ரூபாய்- 80    ,தொலைபேசி -044-22522277 .

3.இன்னும் பிறக்காத தலைமுறைக்காக - சு.தியடோர் பாஸ்கரன, வெளியீடு - உயிர்மை , ரூபாய் -100 , தொலைபேசி-.044-24993448

4.கானுறை வேங்கை – உல்லாஸ் கரந்த் , தமிழில்- சு.தியடோர் பாஸ்கரன் , வெளியீடு - காலச்சுவடு , ரூபாய் -90 , தொலைபேசி -04652-278525.

5.குமாயுன் புலிகள் –ஜிம் கார்பெட் , தமிழில் –தி.ஜ.ர , வெளியீடு-காலச்சுவடு ,ரூபாய் -125, தொலைபேசி -04652-278525.

6.பூவுலகின் கடைசி காலம் – கிருஷ்ணா டாவின்சி , வெளியீடு - பாரதி புத்தகாலயம் ,ரூபாய்-50 ,தொலைபேசி -044-24332424, 24332924.

7.மழைக்காலமும் குயிலோசையும் – மா.கிருஷ்ணன் , தொகுப்பாசிரியர்-. சு.தியடோர்    பாஸ்கரன் , வெளியீடு - காலச்சுவடு ,ரூபாய் -100 , தொலைபேசி -04652-278525.

8.ஏலகிரியில் சிறுத்தை வேட்டை –கென்னத் அன்டேர்சன் , தம்ழில் –எஸ்.சங்கரன் , வெளியீடு - பாரதி புத்தகாலயம் ,ரூபாய்-80 ,தொலைபேசி -044-24332424, 24332924.

9.அதிசயத் தாவரங்கள்-ஏற்காடு இளங்கோ, வெளியிடு – அறிவியல் வெளியிடு ,ரூபாய்-20 ,முகவரி–245,அவ்வை சண்முகம் சாலை ,கோபாலபுரம் ,சென்னை -86

10.எனது இந்தியா –ஜிம் கார்பெட் , தமிழில் –யுவன் சந்திரசேகர் , வெளியிடு - காலச்சுவடு ,ரூபாய் -125, தொலைபேசி -04652-278525.