புதிய தலைமுறை தொலைக்காட்சியில்
இன்று புதிய
தலைமுறையில் தொலைக்காட்சியில் அருமையான நிகழ்ச்சி ,பறவைகளின் வலசை ,சலீம் அலி
,முகமத் அலி ,பள்ளிகரணை சரணாலயம்,பறவைகள் எதற்கு வலசை வருகிறது , பறவை சரனாலயகள்
எப்படி மனிதார்களால் அழிகபடுகிறது என்பதை பற்றி மிக அருமையாக ஒளிபரபப்பட்டது .
எந்த பறவையும்
மனிதர்கள் போல் தனது இடத்தை விற்பதில்லை , அதற்கு தமது இடத்தை மனிதனால்
அழிகபடுகிறது என்றும் தெரிவது இல்லை. தமது ஒரு மில்லி மீட்டர் இடத்தை கூட விட்டு
தர மனிதன் தயாரில்லாதபோது ,என்ன உரிமையில் பறவைகளின் இடத்தில வீடு கட்டபடுகிறது ?
யானை ஊருக்குள்
வந்துவிட்டது ,சிறுத்தை வந்துவிட்டது என்று நிறைய செய்திகள் படிக்கிறோம் ,உண்மை
அதுவல்ல , நாம் தான் அவற்றின் இடத்தில வீடுகட்ட துவங்கிவிட்டோம்.
யானை ஊருக்குள்
வந்துவிட்டது என்ற செய்தியை அடுத்தமுறை நன்றாக படித்து பாருங்கள் ,சென்னை அண்ணா
சாலையில் வந்திருக்காது , மதுரையில், திருச்சியில் ,கடலூரில் வந்திருக்காது
,மனிதன் அவற்றின் இடத்தில குடியேறிய பகுதிக்கு வந்திருக்கும்.
நம் வீட்டிற்கு
யாரும் சும்மா கூட நுழைவதை விரும்பாமல் தான் வீட்டை சுற்றி பெரிய சுவர் ,காலிங்
பெல் ,பெரிய நாய் , காவலாளி அது மட்டும் இல்லாமல் புதிய தொழில்நுட்பமான CCTV கேமரா ,இதில் எதுவுமே இல்லாத அவற்றின்
இடத்தில நாம் நுழைந்தால் ?
வாழ இடமா இல்லை, திருப்பி சண்டைபோட தெரியாத பறவைகளின் இடத்தில் குடியேறி அதன் குடியை
ஏன் கெடுப்போம் ?
ஹிட்ச்காக்
இயக்கிய THE BIRDS படத்தை பாருங்கள், படத்தில் காகங்கள் மனிதனை
தாக்கும் ,அதேபோல் பறவைகள் நம்மை தாக்க தொடங்காதவரை, நாம் அவற்றின் இடத்தை அழித்து
கொண்டேயிருப்போம்.........
No comments:
Post a Comment