Saturday, 31 May 2014

Bird Man of India - 6


இந்தியாவின் பறவை மனிதன் - 6 

                           -   சிதம்பரம் ரவிசந்திரன்


1971ல் சுந்தர்லால் ஹோரா நினைவு சொற்பொழிவிலும்,1978ல் ஆசாத் நினவு சொற்பொழிவிலும் சலீம் அலி இந்தியாவில் பறவையியல் ஆய்வுகள் பற்றி விரிவாக சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். சலீம் அலி தன் குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களையும் பறவைகள் பற்றி ஆய்வுகளில் ஈடுபாடு கொள்ள செய்தார். அவருடைய உறவினர்களான ஹுமாயுன் அப்துல் அலி மற்றும் லிக்யு ஆகியோர் பறவையியல் பிரிவில் நிபுணத்துவம் பெற்றதோடு, இயற்கை வரலாற்று நிறுவனத்தின் வளர்ச்சியிலும் பெறும்பங்காற்றினார்கள்.

சலீம் அலி பல முதுகலை மாணவர்களையும், பல முனைவர் பட்ட மாணவர்களையும் பறவையியல் பிரிவில் வழிக்காட்டியாக இருந்து சிறந்த முறையில் வழி நடத்தினார். சலீம் அலியின் வழிகாட்டுதலில் முதல் மாணவராக வெளிவந்த விஜயகுமார் அம்பேத்கார் என்ற மாணவர் முனைவர் பட்டத்திற்காக ஆராயிந்து வெளியிட்ட ஆராயிச்சி கட்டுரை சலீம் அலி முன்பொரு சமயம் பறவையியலில் ஈடுபாடு கொள்ள காரணமாக இருந்த மும்பை கடலோரத்தில் கிராமத்தில் ! அவர் கண்ட பாயா தூக்கனாங்குருவி (Baya Weaver bird ) களைப் பற்றியதாக அமைந்தது சிறப்பான ஒரு பொருத்தமாக இருந்தது .

இந்தியவில் பறவை ஆராய்ச்சிகள் வளர்ச்சி அடைய சலீம் அலி பெருமளவில் தொண்டுகள் புரிந்தார். பறவையியல் தொடர்பாக நிதி உதவிகள் கிடைப்பதற்கு காரனகார்த்தாவாக அவர் இருந்தார். ICAR- Indian Council for Agriculture Researchல் பறவையியல் தொடர்பாக பொருளாதாரப் பிரிவு ஒன்றைத் தொடங்க காரணமாக இருந்தார்.

1980களில் சலீம் அலி இந்தியாவில் விமான தளங்களில் பறவைகள் அடிபடுவதை தடுப்பதற்காக ஒரு திட்டம் தொடங்கப்பட முக்கிய காரணமாக இருந்தார்.இந்தியப் பறவைகள் பற்றிய ஆராய்சிகள் வளர்ச்சி அடைய செய்ய சலீம் அலி பெரும்பணி ஆற்றினார். இந்தியா முழுவதும் சிதறிக் கிடந்த பரவையாளர்களை ஒருங்கிணைக்க அது பற்றி வெளியடப்படும் செய்தி இதழின் மூலம் முயற்சிகள் எடுத்தார்.

சுதந்தர இந்தியாவில் பறவைகள் பாதுகாப்பில் சலீம் அலியின் பங்கு மகத்தானது. அப்போது பிரதமர்களாக இருந்த நேரு மற்றும் இந்திரா காந்தி ஆகியோரின் ஆதரவுடன் சலீம் அலி இந்தியாவில் பறவைகள் குறித்து ஆய்வுகளை மேம்படுத்த பணியாற்றினார். இந்திரா காந்தி அவர்களே பறவைகள் பற்றி அறிவதில் ஆர்வம் கொண்டவர். 1942ல் இந்திரா காந்தி நைனிடால் சிறையில் இருக்கும்போது, டோராடுன் சிறையில் இருந்த நேரு சலீம் அலி எழுதிய ‘ இந்திய பறவைகள் ‘ (The Book of Indian Birds ) ன்ற புத்தகத்தை பரிசாக அனுப்பிவைத்தார். 

சலீம் அலி பரத்பூர் பறவைகள் சரணாலயத்தை வடிவமைப்பதிலும், அமைதிப் பள்ளத்தாக்கு தேசீயப் பூங்கா உருவாவதிலும் முத்திரைகள் பதித்தார். டூன் பள்ளிக்கு சலீம் அலி பார்வையாளராக அவ்வப்போது விஜயம் செய்வது வழக்கம்.இதனால் அவருக்கு மிக்க அரிதாக வழங்கப்படும் டூன் பள்ளியின் மாணவர் கௌரவும் வழங்கப்பட்டது. பறவைகள் பாதுகாப்பு பற்றி விழ்ப்புணர்வை அங்கிருந்த மாணவர்களிடம் ஏற்படுத்த சலீம் அலி பாடுபட்டதால் அவருக்கு இந்தப் பெருமை அளிக்கப்பட்டது.

சலீம் அலி மத நம்பிக்கைகள் அறிவியல் குறுக்கிடாக இருக்கக்கூடாது என்று கருதினார். வேடையடுதலைக் கடுமையாக எதிர்த்த சலீம் அலி அதே நேரத்தில் ஆராயிசிக்காக சில பறவைகளை நாம் தியாகம் செய்துதான் ஆகவேண்டும் என்று கருத்து கொண்டிருந்தார்.

1960களில் இந்தியாவின் தேசிய பறவையாக எந்தப் பறவையைத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்து ஆலோசனைகள் நடந்தன. சலீம் அலி ஆபத்தான நிலையில் அழிந்துகொண்டிருந்த கானமயில் (The Great Indian Bustard ) பறவையை தேசியப் பறவையாக வைத்துக்கொள்ளலாம் என்று பரிந்துரை செய்தார். ஆனால் Pea Fowl தேசிய பறவையாக அறிவிக்கப்பட்டது.

அங்கிகாரங்களும், பட்டங்களும் தாமதமாக கிடைத்தாலும், பல பல்கலைகழகங்கள் அவருக்கு டாக்டர் பட்டங்களை கொடுத்து கௌவுரவித்தது. 1953ல் ‘ஜாய் கோபிந்தா லா கோல்டு மெடல் எசியாடிக் சொசைட்டி ஆப் பெங்கள் என்ற அமைப்பால் வழங்கப்பட்டது. இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் சார்பில் 1970ல் சுந்தர்லால் ஹோரா நினைவுப் பதக்கம் வழங்கப்பட்டது. கௌரவ டாக்டர் பட்டங்கள் அலிகார் பல்கலைகழகம் (1958), டெல்லி பல்கலைகழகம்(1973), ஆந்திரா பல்கலைகழகம் (1978) ஆகிய பல்கலைகழகங்களால் வழங்கி பெருமை படுத்தப்பட்டார்.

1967ல் சலீம் அலி The Gold Medal of British Ornithalogist விருது பெற்ற முதல் வெளிநாட்டுக் குடிமகன் ஆவார். அதே வருடம் அவர் ஜெ.பால் கெட்டி வன உயரினங்கள் பாதுகாப்புக்கான பரிசுதொகையப் பெற்றார். இவ்வாறு கிடைத்த 100000 டாலார் பரிசை சலீம் அலி இயற்கை பாதுகாப்பு நிதியம் ஒன்றை அமைத்து வன உயிரினங்கள் மற்றும் பறவைகள் பாதுகாப்புக்காக அளித்தார்.

1969ல் ஜான்.சி.பிலிஸ அமைப்பால் வழங்கப்படும் சர்வதேச இயற்கை மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்பு unionக்கான நினைவு மெடலை பெற்றார்.1973ல் சோவியத் union அசொசியேசன் of Medical science அமைப்பு அவருக்கு பாவ்லாவ் நினைவு மெடல் வழங்கி கௌரவித்தது. அதே வருடம் ‘ ஆர்டர் of தி கோல்டன் ஆர்க் ‘ என்ற விருது வங்கி நெதர்லாந்து அரசால் பெருமைப்படுத்தப்பட்டார். இந்த விருது நெதர்லாந்து  அரசியாக அப்போது இருந்த இளவரசர் பெர்னார்டு அவர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்திய அரசு சலீம் அலியை 1958ல் பத்ம பூஷன் விருது வழங்கியும், 1976ல் பத்ம விபுஷன் வழங்கியும் அலங்கரித்தது. 1985ல் ராஜ்யசபா உறுப்பினராக நியாமிக்கப்பட்டார்.

இந்திய அரசாங்கம் அவருடைய மறைவுக்குப் பின் கோவையில் சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தை (Salim Ali Centre for Ornithology and natural history ) wiruviyathu. பாண்டிச்சேரி பல்கலைகழகம் சலீம் அலி சுற்றுசூழல் மற்றும் சூழல் அறிவியல் பள்ளி (Salim Ali School of ecology and environmental sciences ) நிறுவியுள்ளது. கோவா அரசு சலீம் அலியின் பெயரில் பறவைகள் சரணாலயம் அமைத்துள்ளது. கேரளாவில் வேம்பநாடு பகுதியில் உள்ள தட்டக்காடு பறவைகள் சரணாலயம், அவருடைய பெயராலேயே அழைக்கப்படுகிறது.

பாம்பே இயற்கை வரலாற்று நிறுவனம் மும்பையில் அமைந்துள்ள பகுதிக்கு சலீம் அலி சவுக் என்று பெயரிடப்பட்டுள்ளது.கிட்டி தொங்கலாங்யா என்பவர் பாம்பே இயற்கை வரலாறு நிறுவனத்தில் இருந்த ஒரு அபூர்வமான வௌவாலுடைய மாதிரியைக் கண்டறிந்தார். அதற்குள் அவர் Latidens Salim Ali என்ற பெயரிட்டார். இந்த அபூர்வ வௌவால் இனம் அவ்வகை ஜீன் இனத்திலேயே (Genus latidens ) தற்போது உலகில் இருக்கும் ஒரே மாதிரி வடிவம் ஆகும்.

மறங்க்கொத்திகளில் ஒரு துணை இனத்திற்கு 1972ல் சலீம் அலியின்  நினைவாக Dinopium Benghalense Tehminae என்று விசிலராலும், கின்னோர் என்ற பறவை ஆர்வலராலும் பெயரிடப்பட்டது.சலீம் அலி பாம்பே இயற்கை வரலாறு நிறுவனத்தின் இதழ்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். அவை பறவைகள் பற்றி அறிவை இந்திய மக்களிடம் ஏற்படுத்தியதோடு,விழிப்புணர்வையும் உண்டாகியது.அவர் எழுதிய பல படைப்புகள் இன்னும் அச்சிடப்படாமலேயே உள்ளன.

1930ல் அவர் எழுதிய ‘Stopping by the Woods on a Sunday Morning என்ற கட்டுரை 1984ல் அவருடைய பிறந்தநாளன்று ‘ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் மறுபடியும் வெளியிடப்பட்டது. 


                                  -  பறவை அடுத்து பகுதியுடன் பறந்து போகும் 


No comments:

Post a Comment