இந்தியாவின் பறவை மனிதன் -5
- சிதம்பரம் ரவிசந்திரன்
சில மாதங்கள்
சலீம் நீலகிரியில் உள்ள கோத்தகிரியில் தங்கினார். கோத்தகிரியில் தங்கியிருந்த K.M.
ஆனந்தன் என்பவருடைய அழைப்பின் பேரில் சலீம் அங்கு சென்றார். ஆனந்தன் முதல் உலகப்
போரின்போது ராணுவத்தில் மருத்துவராக மொசபடோமியாவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்
ஆவார். அதற்குப் பிறகு அவருக்கு லாங்வுட்ஷோலாவில் வசித்து வந்த திருமதி kin loch
மற்றும் அவருடைய மருமகன் R.C.Morris ஆகியவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. சலீம் அலி
பறவைகள் பற்றிய ஆய்வுகளை நடத்த அப்போது இந்தியாவில் பல பாகங்களிலும் சிதறியிருந்த
சிறு சிறு சமஸ்தானங்களுடைய உதவியை நாடினார். இதற்கு அந்தந்த குறுநில மன்னர்களுடைய
ஆதரவும்,நிதி உதவியும் பெறுவது அவசியம் என்பதை அவர் உணர்ந்தார்.
இயற்கையைப் பற்றி
ஆராய்ச்சிகளில் ஆர்வம் கொண்டிருந்த அரசர்களிடம் பறவைகள் மீதும் ஈடுபாடு
ஏற்படும்படி செய்தார் சலீம் அலி. அதற்கு பலனும் கிடைத்தது. ஆச்சிரியப்படும்
வகையில் ஹைதராபாத் நிஜாம் சலீம் அலிக்கு பச்சைக்கொடி காட்டினார். மூன்று மாத கல
ஆய்வுகளுக்காக நிஜாம் சலீம் அலிக்கு ரூபாய் 3000 கொடுத்தார். அன்றைய காலகட்டத்தில்
அது ஒரு பெரிய தொகையாகும். இந்த அருமையான வாய்ப்பைப் பெற்ற மகிழ்ச்சியில் சலீம்
அலி தன்னுடைய மனைவியையும் அழைத்துக்கொண்டு காளை மாட்டு வண்டியில் பயணத்தைத்
தொடங்கினார். பறவைகளுடைய வடிவம், அடை காக்கும் விதம், வாழிடம் போன்ற எல்லா
அம்சங்களையும் பற்றிய அவருடைய ஆய்வு பறவைகள் குறித்து ஆராய்ச்சியில் ஒரு
முன்மாதிரியாகத் திகழ்ந்தது.
இதுவே பின்னாளில்
‘ ஹைதராபாத் சர்வே’ என்ற பெயரில் புகழ் பெற்றது. வெற்றிகரமாக நிறைவு பெற்ற இந்த
ஆய்வுகளுக்குப் பிறகு திருவிதாங்கூர், கொச்சி, போபால், இந்தூர், குவாலியர், தார்,
மைசூர், பஹவல்பூர், குஜராத், பெஸட்டர் ஆகிய இடங்களுக்கும் சிறப்பு விருந்தினராகச்
சென்று சலீம் அலி பறவைகள் பற்றிய ஆராய்சிகளை நடத்தினார். இந்த ஆய்வுகளில் அவருக்கு
பண உதவியும், ஆதரவும் நல்கியவர் Hugh Whistler என்பவர் ஆவார்.
விசிலர் அவர்களே
ஒரு சிறந்த பறவையில் நிபுணராக இருந்தார். இவர்கள் இவருக்கும் இடையே ஏற்பட்ட ஆழ்ந்த
நட்புக்குப் பின்னால் ஒரு சுவாரசியமான கதை உள்ளது. விசிலர் எழுதி இதழொன்றில்
வெளியிட்ட பறவைகள் பற்றிய கட்டுரை ஒன்றில் விசிலர் Greater Racket Tailed Drongo
என்ற பறவையைப் பற்றி தவறாக ஒரு தகவலை வெளியிட்டு இருந்தார்.இதை படித்த சலீம் அலி
இந்தக் தவறை சுட்டிக்காட்டி அந்த இதழுடைய ஆசிரியருக்கு கடிதம் எழுதினார். முதலில்
விசிலர் முன்பின் அறிமுகம் இல்லாத ஒரு இந்தியன் தான் கண்டறிந்ததைப் பற்றிக் குறை
சொல்லி தன் புலமையை குற்றம் சொன்னதில் எரிச்சல் அடைந்தார்.
பிறகு தான்
சேகரித்து வைதிருந்த அந்தப் பறவையின் specimenனை மாதிரியை சோதிதப் பார்த்தபோதுதான்
விசிலருக்கு சலீம் சொன்னது சரி என்றும், தான் எழுதியது தவறு என்றும் தெரியவந்தது.
உடனே விசிலர் தன் தவறுக்கு வருந்தி சலீமுடன் தொடர்பு கொண்டு வருத்தம்
தெரிவித்தார். இதில் விசிலர் சலிமுடைய நெருங்கிய நண்பராக மாறினார்.
இதற்குப் பிறகு
விசிலர் சலீம் அலிக்கு மற்றொரு சிறந்த பறவையியல் ஆய்வாளரான Richard Meinertzhagen
என்பவரை அறிமுகப்படுத்தினார். இருவரும் ஆப்கானிஸ்தானில் பறவை ஆராய்ச்சியில்
ஈடுபட்டிருந்தவர்கள் ஆவார்கள்.
கேரளாவில் சலீம்
அலி வந்தபோது திருவிதாங்கூர், கொச்சி சமஸ்தானங்கள் சலீம் அலிக்கு பறவை ஆய்வுக்கு
ரூபாய் நாற்பத்தைந்து ஆயிரம் வெகுமதியாக தந்தது. தென்னிந்தியவின் அழகொழுகும்
மலைத்தொடர் சலீம் மனதைக் கவர்ந்தது.தன்
சுயசரிதை நூலில் சலீம் அலி இது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். பெரியாறு நதிக்கரையில்
தட்டக்காடு பகுதியின் இயற்கை வனப்பு அவர் மனதைக் கொள்ளை கொண்டது. அவருடைய
பெயராலேயே வழங்கப்படுகிறது. கேரளாவில் அவருடைய பறவைகள் ஆய்வுகள் மக்களிடையே
செல்வாக்கு பெற்றதாக இருந்தது. மக்கள் அவரைப் பார்ப்பதற்காக இன்று இந்த அளவுக்கு
புகழ் பெற்றிருப்பதற்கு சலீம் அலியின் முயற்சிகளால்தான்.
1939ல் சலீம்
அலிக்கு உற்ற துணையாக இருந்துவந்த அவருடைய மனைவி தெஹ்மினா ஒரு சிறு அறுவை
சிகிச்சைக்குப்பின் மரணம் அடைந்தார். இந்தப் பிரிவு சலீம் அலியை மிகவும் பாதித்து.
இதற்குப் பிறகு சலீம் அவருடைய சகோதரி காமூ குடும்பத்தாருடன் வசிக்க ஆரம்பித்தார்.
சலீம் அலி மனைவி
இறந்த பிறகு தன் முழுநேரத்தையும் பறவை ஆராய்ச்சிக்காகவே செலவழித்தார். மலைக்காடை
(Mountain Quail ) என்ற பறவையைப் பற்றி ஆய்வுகளில் சலீம் அலியால் முழுமையாக வெற்றி
காண முடியவில்லை. இன்று வரியும் அந்தப் பரவையைப் பற்றி அதிக விவரங்கள்
அறியப்படவில்லை.
சலீம் பறவைகளைப்
படம் பிடிப்பதில் ஆர்வம் ஏற்ப்பட்டது. ஜிப்சன் என்ற பாம்பே இயற்கை வரலாற்று
நிறுவனத்தின் உறுப்பினர் ஒருவர் மூலம் சிங்கப்பூரில் தொழிலதிபராக இருந்த Loke
Wantho என்பவருடன் இணைந்து பறவைகள் படம் எடுப்பதில் ஈடுப்பட்டார். சலீம் அலிக்கு
பறவைகளை அவற்றின் இயற்கையான சூழ்நிலையிலேயே ஆராய்வதில் ஆர்வம் ஏற்ப்பட்டது.
Lokeடன் சேர்ந்து சலீம் பறவைகள் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டார்.
Loak பறவைகள்
ஆராய்ச்சியில் ஆர்வம் உள்ளவர் என்பதோடு, சலீம் அலிக்கு பாம்பே இயற்கை வரலாற்று
நிறுவனதில் செயல்பட நிதி உதவியும் செய்தார். மொகலாயர்கள் ஆட்சிகாலத்தில் இயற்கை
வரலாறு பற்றியும், இந்தியாவின் இயற்கை வரலாறு பற்றியும் சலீம் ஆர்வம் காட்டினார்.
இன் இந்த விஷயங்களைப் பற்றி பல கட்டுரைகளை ஆராய்தறிந்து எழுதினார்.
1947ல் நிறுவனத்தின்
வெளியிட்டுக்கு ஆசிரியராக சலீம் அலி பொறுப்பேற்றார். அதன் பின்னர் நிறுவனத்தின்
செயலாளராகவும் பணியாற்றினார். அவ்வப்போது இந்தியாவின் பிரதமராக இருந்த பண்டிட்
நேருவுக்கு பாம்பே இயற்கை வரலாற்று நிறுவனத்திற்காக நிதயுதவி கோரி கடிதம்
எழுதினர்.
-பறவை வரும்
No comments:
Post a Comment