இந்தியாவின் பறவை மனிதன்- 4
- சிதம்பரம் ரவிசந்திரன்
சலீம் அலிக்கு
மோட்டார் சைக்கிள் என்றால் கொள்ளை பிரியம் இருந்தது. சுவிடன் நாட்டுக்கு
ஒரு பறவையியல் போயிருந்தபோதுகூட தான் ஒரு BMW மோட்டார் சைக்கிளை சொந்தமாக
வைதிருக்க முடியவில்லையே என்று தன் மனைவியிடம் கூறி வருந்தப்பட்டிருக்கிறார் .
பறவைகளைப் பற்றிய
தான் படித்ததை அங்கு வரும் குழந்தைகளுக்கு சொல்லவதில் சலீம் இன்பம்
அடைந்தார்.ஆனாலும் வெகு நாட்களாக அவருக்கு தான் இன்னும் முழுமியாடையவில்லை என்று மனக்குறை
இருந்துகொண்டே இருந்தது. இரண்டு ஆண்டுகளே prince of Whales India மியூசியத்தில்
வேலை பார்த்த சலீம் அலி சோர்வு அடைந்தார்.தனது பதவியைத் துறந்தார்.
பறவையில் பற்றி
முறையாக கற்க வேண்டும் என்ற உந்துதல் அவரை பெர்லின் பல்கலைகழகத்திற்கு
அழைத்துச்சென்றது. Prince of Whales India மியூசியத்தில் சலீம் ஆராயிந்து வந்த
ஸ்டான்போர்ட் என்ற ஜெர்மானியருடய சேகரிப்புகள் மூலம் அவருடைய நட்பு சலீமிற்கு
கிடைத்தது. அவர் மூலம் சலீம் அலி பெர்லின் சென்றார்.
அங்கு பறவைகளை பகுத்தறிந்து
தரம் பிரிக்கும் டாக்சானமி மாணவராக சலீம் சேர்ந்தார்.
பெர்லினில்
இருந்தபோது சலீம் அங்கு இருந்த இந்தியர்களை சந்திக்க நேர்ந்தது. இந்திய விடுதலை
பற்றிய உணர்வை வெளிநாடுகளில் வாழ்ந்த இந்தியர்களுக்கும், வெளிநாட்டவர்களுக்கு
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இழைக்கும் அநீதிகள் பற்றியும் விழிப்புணர்வை
ஏற்படுத்தியவரான செண்பகராமன் பிள்ளையும் சலீம் அலி சந்தித்தார். இந்த சென்பகாராமன்
பிள்ளைதான் நேதாஜியின் படைபிரிவில் கப்பற்படையின் கேப்டனாக இருந்தார் என்பதும்,
முதல் உலக போரின் போது எம்ட்டன் என்ற உலகப்புகழ் பெற்ற ஜெர்மனியின் நீர்மூழ்கிக்கப்லின்
துணைக் கேப்டனாகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடதக்கது.
Stresemann Stanford.
மனிதாபிமானியும், அறிஞருமாக இருந்த Stresemann, இந்தோநேஷியாவில் பறவைகளைப் பற்றி
கற்றுவந்த பெர்னார்டு ரெஷ், உலகப் புகழ்பெற்ற உயிரியல் அறிஞர் ஏனஸ மேயர், ஆஸ்கார்
ஆழ்ந்த ஹைன்த் போன்றோர் சலீம் அலியுடைய நண்பர்களும், வழிகாட்டிகளாகவும்,
ஆசான்களாகவும் ஆயினர். துர்நாற்றம் வீசும் பரிசோதனைக்கூட்டங்களில் இருந்து
டாக்சானமியில் ஆழ்ந்த அறிவு பெற்றார். சிறிய தவறுகளுக்கும் மிகப் மோசமான தண்டனைகள்
கிடைக்கும் என்ற பகுத்தறிவு ஒன்றும் இல்லாத எந்த வசதியும் இல்லாத ஏழைக்குடும்பப்
பின்னணியில் இருந்து வந்த சலீம் அலிக்கு பெர்லின் தந்த அனுபவங்கள் மறக்க
முடியாததாக அமைந்தது.
பறவைகள் பற்றிய
அறிவியல் பிரிவில் மிக முக்கிய பாடங்களான பறவைகளுக்கு வளையம் இடுதல், பட்டை
கட்டுதல் Bird Ring , Bird Banding ஆகிய இரண்டையும் சலீம் அலி
கற்றுக்கொண்டிருந்தது ஜெர்மனியில் இருந்துதான்.
- பறவை வரும்
பறவைகள்
எங்கல்லாம் பறந்துபோகிறது என்பதைப் பற்றியறிய இந்தச் செயல் பறவை
ஆராய்ச்சியாளர்களுக்கு பெரிய அளவில் பயன்படும். பறவைகளைப் பிடித்து அவைகளுடைய
காலில் உலோகத்திலோ அல்லது பிளாஸ்ட்டிக்காளோ ஆன வளையத்தை போடும் முறைக்கு Bird
Ringing என்று பெயர்.
வளையம்
காலில் மாட்டப்பட்ட தேதியும், முகவரியும்
வலயத்திற்குள் எழுதபட்டிருக்கும். பறவையை யாராவது பிடித்தால் வளையத்தைத் திருப்பி
அனுப்பவேண்டும் என்பதே சர்வதேச சட்டம் ஆகும்.சட்டம் இருந்தாலும், அதைப்
பின்பற்றுபரும், கடைபிடிப்பவரும் இருக்கவேண்டும் அல்லவா? ஜெர்மானியர்கள் இதற்கும்
ஒரு தீர்வு கண்டுபிடித்தார்கள். வடகடலில் எலிகோ சதுப்புநில பகுதிக்கு பறவைகள்
வந்து தங்குவதற்கேற்றவாறு ஒரு சரணாலயமாக மாற்றினார்கள்.
அடர்ந்த
செடிகளையும் ,மரங்களையும்
வளர்த்து,குளங்களை உருவாக்கி,அந்தப் பகுதியை பறவையியல் பகுதியாக
மாறினார்கள். அங்கு வரும் பறவைகளைப் பிடித்து கன்னாடிகூடுகளுக்குள் அடைத்து வைத்து
அவற்றின் கால்களில் வளையங்களைப் போட்டு பறக்கவிட்டு விடுவார்கள். இதோடு முதல்
கட்டம் நிறைவு பெறும். அந்தப் பறவையை யாராவது பிடித்து வளையத்தை மட்டும் திருப்பி
அனுப்பும்போதுதான் அடுத்த கட்டம் ஆரம்பமாகும். வலையங்கள் இட்டு பாதுகாக்கும் பணி
ஒருபுறம் நடந்துக்கொண்டிருக்கும் அதே சமயம் பறவைகளை பொறி வைத்து சாகடிக்கும்
செயலும் மற்றறொரு புறம் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
1930ல் பெர்லினில்
இருந்து இந்தியாவுக்கு திரும்பிய சலீம் Prince of Whales மியூசியத்தில் நிதி பற்றாக்குறை காரணமாக
விரிவுரையாளர் பதவி எடுக்கப்பட்டுவிட்டதால் மும்பையில் கடலோர கிராமமான kihim
வசிக்கத் தொடங்கினார். கடலோர கிராம வாசம், இந்தியப் பறவைகள் பற்றிய ஆய்வில் ஒரு
விலை மதிக்க முடியாத பொக்கிஷத்தை உலகிற்குத் தந்தது எனலாம். அந்த கடலோர்ரக் கிராம
வாசம் சலீம் அலிக்கு தூக்கணாங்குருவியைப் (Weaver
bird ) பற்றி விரிவான
ஆய்வுகளுக்கு வழிவகுத்துக் கொடுத்தது.
இந்த ஆராய்ச்சிகள்
தொடங்கியதே ஒரு சுவாரசியமான விஷயமாக இருந்தது. குத்து செடிகள் மண்டிக் கிடந்த ஒரு
பகுதியின் வழியாக நடந்கும்போது, ஒரு தூக்கணாங்குருவியை அலி பார்த்தார். அந்த
குருவி அவரிடம் ஏற்படுத்திய ஆர்வம் அதன் பிறகு ஏராளமான அந்தக் குருவிகளைப் பற்றி
ஆய்வுகளில் ஈடுப்பட வைத்தது.
தூக்கணாங்குருவிகல்
கூடு கட்டுவதை பார்த்து பிரம்மித்துப் போனார் சலீம் அலி. பெண் குருவி ,ஆண்
குருவியை அதனுடைய வடிவ அழகை கொண்டு ஒரு போதும் தேர்ந்தெடுபதில்லை. கூடு கட்டும்
சாமார்த்தியம்தான் கணவனாக வரபோகும் குருவிக்கு தேவையான தகுதி. கூடு, பெண்
குருவிக்கு பிடித்தால் பெண் குருவி அதைக் கட்டிய ஆணை தன்னுடைய துணையாகக் கொள்ள
விருப்பம் என்று தெரிவிக்கும்.
இதில் இன்னொரு
அதிசயம் என்ன என்றால் ஆண் குருவிக்கு ஒரு பெண்டாட்டி போதாது நாலைந்தாவது வேண்டும்.
இதனால் மனைவி கிடைத்தபின்னும், அடுத்த கூடு கட்டுவதில் ஆண் குருவி எப்போதும்
பிசியாகவே இருக்கும். தூக்கணாங்குருவிகளுடைய வாழ்கை முறைகள், உணவு முறைகள், இணை
சேரும் விதம் இவைகளை பற்றி எல்லாம் kihimல் சலீம் வசித்தபோது கண்டறிந்தார்.
அவருடைய பிரபல நூலான . ‘The Book of Indian Birds’ இந்தியப் பறவைகளைப் பற்றிய புத்தகம் என்ற
நூலை எழுத ஆரம்பித்ததும் இந்த சமயத்தில்தான் .
- பறவை வரும்
No comments:
Post a Comment