இந்தியாவின் பறவை மனிதன்-3
- சிதம்பரம் ரவிசந்திரன்
மனிதனுக்கு சொந்தப்பெயரும்,குடும்பப்பெயரும்
இருபதுபோல ஒவ்வொரு பறவைக்கும்,விலங்குக்கும் இரண்டு பெயர் இருக்கிறது. இந்தியாவில்
நாட்டுக் காகம் என்றும், காட்டுக்காகம் என்றும் வேறுபட்ட இனங்கள் இருப்பதை
பெர்லார்ட் சலீமுக்கு சொல்லிகொடுத்தார். பெர்லார்டை ஒரு தோழராக பார்த்த சலீம் அலி
தானும் ஒரு பறவை ஆராய்ச்சியாளனாக ஆகவேண்டும் என்று இலட்சியத்தை மனதிற்குள்
விதைதுக்கொண்டார்.
1914ல் சலீம்
பர்மாவுக்கு போனார். சகோதரர் அக்தரும்,அவருடைய குடும்பமும் ரங்ககூனில் வசித்து
வந்தார்கள். பர்மா வாசம் சந்தோஷமாக இருந்தபோதிலும் பறவை ஆராய்ச்சி அத்தனை
திருப்தியாக சலீம்முக்கு இருக்கவில்லை.
புத்தகங்களோ,பைனாக்குலரோ இல்லாமல் பறவைகளை
பார்த்தார். பார்வை குறைவு உள்ள ஒருவர் கண்ணாடி அணியாமல் எழுத்துகளைப்
பார்ப்பதுபோல் இருந்தது அது. பிற பறவை ஆராய்ச்சியாளர்களுடைய தொடர்பும்,Bombay Natural History societyயுடன் இருந்த தொடர்பு மட்டும்தான் சலீம்
அலிக்கு உற்ற துணையாக இருந்தது .
பர்மா செல்வத்திற்கு முன்பு 1913ல் வகுப்புகளுக்கு சரிவர செல்ல முடியாமல்
போனாலும்,பாம்பே பல்கலைகழகும் நடத்திய மெட்ரிகுலேஷன் தேர்வுகளில் ஒரு மாதிரியாக
தேறினார்.1917ல் மாமா
இறந்ததனால் சலீம் பம்பாய்க்கு திரும்பினார். தாதர் கல்லூரியில் அவர் வணிகவியல்
படிக்கத் தொடங்கினார். செயின்ட் சேவியர் கல்லூரியிலும் அவர் விலங்கியல் பிரிவில்
படிக்கத் தொடங்கினார். தாதர் கல்லூரியின் வணிகவியல் பாடங்கள் சலீமை
நெருகிக்கொண்டிருந்தாலும், சலீம் விலங்கியல் படிபதற்காக சேவியர் கல்லூரிக்கு
பரந்து கொண்டீருந்தார்.
காலைபோழுதுகள் தாதர் கலூரியில் வணிகவியல் படிப்பை முடித்து, மதியவேலைகள்
சலீம் சேவியர் கலூரிக்கு விலங்கியல் படிபதற்காக பாய்ந்து சென்று கொண்டிருந்தார்.
சேவியர் கலூரியில் விலங்கியல் துரையின் தலைவராக இருந்த பிளாட்டருடைய பறவைகள்
பற்றிய எல்லா நிபுணத்துவத்தையும் சலிமுக்கு அவர் ஒரு கார்பன் காப்பி எடுப்பதை போல
பகிர்ந்தளித்தார்.
உறுதியான குறிக்கோள் எந்தத் தடைகளையும் தாண்டிச் செல்லும் என்று
சொல்ல்வதுண்டு அல்லவா? அது சலீமுடைய விஷயத்தில் உண்மையானது. கடிதத்தால் வலிக்காத
பறவைகள் போல இனிமையான பறவைப் பற்றிய பாடங்களை அவர் இதயத்தில் நிறைதுகொண்டார்.
பரவைகளூடைய குடும்பம் விவரங்கள், உடல் அமைப்புகள், வாழ்க்கை முறைகள்,
வெளித்தோற்றங்கள், சிறப்பியல்புகள் என்று எல்லாவற்றையும் கற்கத்தொடங்ககிய சலீம்
ஒரு முழு பரவையாளராக மாறத்தொடங்கினார்.
1918
டிசம்பரில்
இயற்கையை நேசிப்பவரும், சாதாரண குடும்ப வாழ்வை வாழ விரும்பும் பெண்மணியான தெஹினாவை
சலீம் திருமணம் செய்துகொண்டார். இயற்கையையும், பறவைகளையும் நேசிக்கும் தெஹமி
சலீமுக்கு நல்ல துணையாக வாழ்ந்தார். குடும்பத்தை நடத்த வேலை ஏதாவது வேண்டுமே?
சலீம் வேலை தேடத் தொடங்கினார். Zoological survey of india இந்திய
விலங்கியல் கழகத்தில் ஒரு பரவையாளார் வேலை காலியாக இருக்கிறது என்று கேள்விப்பட்டு
சலீம் பெருமகிழ்ச்சி அடைந்தார்.
- பறவை பறக்கும்
No comments:
Post a Comment