பறவை உலகம்
சலீம் அலி எழுதிய Common Birds என்ற புத்தகத்தை தமிழில்
பறவை உலகம் என்ற பெயரில் மொழிபெயர்த்து நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா என்ற
நிறுவனம் 1976ல் வெளியிட்டுள்ளது,விற்பனை-நியூசெஞ்சூரி புக்
ஹவுஸ் .
முதற் பதிப்பு 1976, இரண்டாம்
பதிப்பு 1985, முன்றாம்
பதிப்பு 1991வருடம் வந்திருக்கிறது அதற்கு அடுத்த பதிப்பு
வெளிவந்ததா என்று தெரியவில்லை. ஆனால் பறவை உலகம் புத்தகம் இப்பொழுது PDFல் (ebook) கிடைக்கிறது.
ரொம்ப அருமையான புத்தகம் ,முதலில் பறவை இயலும் பறவை நோக்குதலும் என்ற
தலைப்பு, அடுத்து இனபெருக்கம், இடம் பெயர்தல், பறவைகளின் விளக்கம் என்று பதினெட்டு
பக்கத்திற்கு மேல் செல்கிறது .அதற்கடுத்து ஏறக்குறைய நூறு பறவைகளை பற்றி விரிவாக
சலீம் அலி எழுதி இருக்கிறார்.
முதல் பறவையாக – முக்குளிப்பான்(Little Grebe or Dabchick), சாம்பல்
கூழைக்கடா(Grey Pelican), வழுவாங்கி(Darter or
Snake bird), நீர் காகம்(Little Cormorant), பெருங்க கொக்கு(Grey
Heron), சிறு வெண் கொக்கு(Small Egret), குருட்டு கொக்கு(Pond
Heron or Paddy Bird),கடைசி பறவையாக கருந்தலை காட்டுச் சில்லை(Black headed
Bunting), செந்தலை காட்டுச் சில்லை(Red Headed Bunting) வரை அழகாக எழுதி
உள்ளார் .
மொத்தம் 164 பக்கங்கள் உள்ளது .
பறவை உலகம் புத்தகம் PDFல் (ebook) வேண்டுபவர், Mailலில் தெரிவியுங்கள் (lapwing2010@gmail.com) அனுப்பிவைகப்படும்.
No comments:
Post a Comment