காகம்
----- சிதம்பரம் ரவிசந்திரன்
கம்பராமாயணத்தில்
கம்பர் காகத்தை பற்றி ஆரண்ய காண்டத்தில் குறிப்பிட்டுள்ளார். வல்லவனுக்கு புல்லும்
ஆயுதம் என்னும் பழமொழியை நினைவுபடுத்துவதாகவும் உள்ளது இது. இராமர் வனவாசத்தில்
இருந்தபோது சீதாதேவியை பார்த்து ஆசைபட்ட தேவேந்திரனுடைய மகன் ஜெயந்தன் ஒரு காகமாக வடிவம்
எடுத்து சீதாவின் தோள்மீது வந்து உட்கார, இதை கவனித இராமர் அருகில் இருந்த ஒரு
புல்லை எடுத்து தன வில்லில் அதையே தொடுக்க, காகத்தின் மிது பட்டு அதன் ஒரு கண்
பாதிக்கப்படுகிறது. அதனால் உலகில் உள்ள எல்லா காகங்களுக்கும் ஒரு நேரத்தில் ஒரு
கண் மட்டுமே தெரியும் என்றாகிவிட்டது என்கிறார் கம்பர்.
அகத்தியர்
வைத்திருந்த காமன்டலத்துநீரை கொட்டி கவிழ்த்து தான் என்று நம் புராணம் கூறுகிறது.
அதனால் உண்டான நதியே காவேரி? காவேரி உருவான இடமாக கருதப்படும் குடகு மலையில் உள்ள
தலைக்காவேரியில் இப்போதும் அகத்தியருக்கு ஒரு சிறுகோயில் உள்ளது. அங்கு
செல்பவர்கள் இதை பார்க்கலாம்.
18ம் நூறாண்டில் உலகப்புகழ் பெற்ற இயற்கை
அறிவியல் ஆய்வாளரான லினயெஸ எழுதிய System nature என்னும் புத்தகத்தில் காகங்களை பற்றி குறிப்பிட்டுள்ளார். ஐரீஷ்
புரானங்ளின் படி காகங்கள் போர் மற்றும் இறப்பிற்கான “மாரிகின் “ என்ற கடவுளாக
கருதபடுகிறது.ஆஸ்திரேலியாவில் புர்வகுடிமக்களின் கருத்துப்படி காகங்கள்
கலாச்சாரதின் சின்னமாகவும், முதாதையிரின் அம்சமாகவும் கருதபடுகிறது. காகங்களை
பற்றி “கில்காமேஷ் “ நூலில் குறிபிடப்பட்டுள்ளது. கில்காமேஷ் என்பது உலகின்
பழமையான இலக்கியங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தப் புத்தகம் மெசபடோமியா
நாகரீகத்தை பற்றி கூறும் ஐந்து கவிதைகளை கொண்ட இதிகாசமாகும்.
திபெத்திய
கலாச்சாரத்தில், த்ருமபாலா (தருமத்தை பாதுகாப்பவர் ) பூமியில் எடுத்துள்ள
அவதாரங்களில் ஒன்றாக காகம் போற்றப்படுகிறது. பழம் பெரும் இந்து மத வேத தத்துவ
நூலாக கருதப்படும் “ யோக வசிஷிடா”வில் மிக வயதான ஒரு முனிவர் ஒரு காகத்தின்
வடிவில் குறிப்பிடபடுகிறார். நம் இந்து மத நம்பிக்கையின்படி, காகங்கள் முதாதையரின் வடிவமாக கருதப்படுகிறது.
அதனால்தான் விஷேசதினங்களில் அமாவாசை, திதி, திபாவளி போன்ற நாட்களில்
முதலில் காகங்களுக்கு உணவு வைத்துவிட்டு பிறகு நாம் உண்கிறோம்.நம்மில் பலர்
வீடுகளில் தினமும் காகத்திற்கு படைப்பது ஒரு அன்றாட நிகழ்வாக உள்ளது. இப்படிப்பட்ட
சிறப்புகளை கொண்ட காகங்களை பற்றி நாம் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா?
காகங்கள் மட்டும் இல்லாமல் சிட்டுக்குருவிகளும், தவிட்டு குருவிகளும் இங்கு
வருவதாக சொல்ல்கிறார்கள் இந்த மக்கள் மழைகாலங்களில் கொக்குகள் கூட வருவதாக
சொல்கிறார்கள். இப்படிப்பட்ட சிறப்புகளை உடைய ஆரப்பள்ளத்திற்கு நாம் ஒரு முறை போய்
பார்த்துவிட்டு வந்தால்தான் என்ன?
லத்தீன் மொழியில் “கார்வுச்” என்ற சொல்லுக்கு பெரிய உடலமைப்பு கொண்டவை
என்று பொருள். காகங்கள் “கார்விடே” (corvidae) குடும்பத்தை
சேர்ந்தவை.காகங்களில் நாற்பது இனங்கள் உள்ளன. சிறிய புறா சைஸலிருந்து பெரிய “
ஜாக்டா” எனப்படும் இனம்வரை இவற்றில் அடங்கும்.இவைகள் எந்த பருவநிலை உள்ள
கண்டங்களிலும் வாழகூடிய திறன் பெற்றவை.
காகங்களே இல்லாத இடங்கள் எவை தெரியுமா? தென் அமெரிக்கா மற்றும்
சமுத்திரங்களுக்கு அப்பால் காணப்படும் சிறு தீவுகள் தான். அங்கு பேருக்கு ஒரு காகா
கூட இல்லை. காகங்களில் குழுவிற்கு ப்ளாக் (Flock) எனப்படும்.
காகங்கள் இருபது வருடங்கள் வரை உயிர் வாழக்கூடியவை. ஆண்காகங்கள் ஐந்து
வயதில் பருவத்தை அடைந்துவிடுகின்றேன். பென்காகங்கள் முன்று வயதிலேய வயதுக்கு வந்துவிடுகின்றன.
இதுவரை உலகில் அதிககாலம் உயிர் வாழ்ந்த காகமாக கருதப்படுவது அமெரிக்காவில் உள்ள
காடுகளில் வாழ்ந்த அமெரிக்கன் Crow ஆகும். அது முப்பது வருடங்கள் வரை
வாழ்ந்துள்ளது.
காகங்கள் தினமும் காலையில் முடிந்து அம்மா சாதம் வைக்கும் போதுதான் வரும்
என்று உங்களுக்கு தெரியும் ஆனால் அவை உண்மையில் எங்கு தோன்றின என்று தெரியுமா?அறிஞ்சர்கள் கூற்றுப்படி மத்திய ஆசியாவில் தோன்றின என்று கருதப்படுகிறது.
பின்னர் அவை வட அமெரிக்கா , ஆப்ரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கும்
பரவியிருக்கின்றன.
காகங்களை பற்றி நாம் சாதாரணமாக நினைத்துக்கொண்டிருக்கிறோம் ஆனால்
அறிஞ்சர்கள் கருத்துபடி அவைகள் தான் பறவைகளிலே மிக புத்திசாலியானவற்றில் முதலிடம்
பிடித்துள்ளன. அவற்றின் அறிவுத் திறனுக்கு காரணம் அதன் மூலைப் பகுதியில்
அமைந்துள்ள Nidopallium ஆகும். ஜாக்டா எனப்படும் அமெரிக்கா மற்றும் கனடாவில் காணப்படும் இனம்
சிம்பன்சி மற்றும் மனிதனின் மூளைப் பகுதியில் அமைந்துள்ள “நியோகார்டெக்ஸ் “
பகுதிக்கு கிட்டத்தட்ட சமமானதாகவும் கிப்பன்களில் உள்ள நியோகார்டெக்ஸ் பகுதியை விட
பெரியளவிலும் Nidopallium பெற்றிருப்பதே ஆகும். Nidopallium என்பது பறவைகளின்
அறிவுத்திறனுக்கு காரணாமாக உள்ள மூளையின்
செயல்பாட்டு பகுதி ஆகும்.
ஒரு காகம் மற்றொரு காகத்தின் வாயில் தன அலகை வைத்து ஏதோ செய்துகொண்டிருப்பதை
நீங்கள் எப்போதவாது பார்த்திருக்கிறிர்களா ? அதைப்பார்த்து அவை ஒன்றோடு ஒன்று
கொஞ்சிக்கொண்டிருப்பதாக நாம் நினைத்துக்கொள்கிறோம் ஆனால் உண்மையில் அப்போது ஒரு
காகம் மற்றொன்றின் பேன் பார்துக்கொடுக்கிறது.இந்த பேன்கள் கடினமான ஓடு உடையவை.இவை
காகங்களின் அலகு உடல் ஆகிய இடங்களில் காணப்படும். இந்த பேன்களை கடித்து அழிப்பது
காகங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு வேலையாகும்.
இது வரை குரங்குகள் பேன் பார்ப்பது பற்றிதான் நாம் அறிவோம்.ஆனால் இனி காகம்
ஒன்று மற்றொன்றின் வாய்க்குள் அலகை வைத்துக்கொண்டிருந்தால் என்ன நடக்கிறது என்பதை
புரிந்துகொள்ளலாம். இந்த செயல் ஆண் காகங்களுக்கும் பெண் காகங்களுக்கும் இடையேதான்
நடை பெறுகிறது என்பது ஒரு சுவாரசியமான விஷயம்.
சமிபத்தில் காகங்களை குறித்து செயப்பட்ட ஆய்வுகள் அவை முகவடிவமைப்பை கொண்டு
ஒரு மனிதனை மற்றொரு மனிதனிடம் இருந்து வேறுபடுத்தி காணக்கூடிய திறன் பெற்றவை
என்பதை நிரூபிக்கின்றன. கிளிகளை போல காகங்களும் மனிதக்குரலில் பேசும் திறன்
பெற்றவை என்றும் சொல்லப்படுகிறது. இவ்வாறு பேசுவதற்கு பழக்கப்படுத்தப்பட்ட
காகங்கள் கிழக்கு ஆசியாவில் அதிர்ஷடத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.
நியூகலிடோனியா காகம் ( நியூகலிடோனியா என்பது ஒரு தென்மேற்கு பசுபிக் கடலில்
ஆஸ்திரேலியாவில் இருந்து1500 கிலோமீட்டர்
மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு தீவு ஆகும் இது பிரெஞ்சு ஆட்சியின் கீழ் உள்ள ஒரு
பகுதி ஆகும் ) தன் அலகையும் பிற உடல் உறுப்புகளையும் பயன்படுத்தி தன் இரையை மிக
சாமர்த்தியமாக பெறுகிறது. கடினதன்மையுள்ள பற்களையும், இலைகளையும் கத்தி வடிவத்தில்
கத்திரித்து தன் இரையை குதிக்கிழிப்பதற்கு பயன்படுத்துகிறது.
இதன் மற்றொரு வியக்கத்தக்க திறன் என்னவென்றால் போக்குவரத்து நெரிசல் உள்ள
சாலைகளில் கடினமான ஓடு உடையை கொட்டைகளை போட்டுவிட்டு அந்த வழியே வரும் கார்களும்,
பிற வாகனங்களும் அதை உடைகும்வரை காத்திருந்து அவை கொட்டைகளை உடைத்துவிட்டு
சென்றவுடன் அதன் உள்ளே உள்ள பருப்புகளை உணவாக உட்கொள்கிறது.
queens land, ஆஸ்திரேலியாவில் உள்ள காகங்கள் செய்யும் வேலையை கேட்டால் உங்களுக்கு
இன்னும் ஆச்சரியமாக இருக்கும். விஷ தன்மை உள்ள தேரைகளை பிடித்து அவற்றை தங்கள்
அலகால் குத்தி பின்பக்கம் திருப்பி அவற்றின் தொண்டையை கிழித்து, ஏனென்றால் அந்த
தேரைகளுக்கு தொண்டைப்பகுதியில் தான் மெல்லியதாக இருக்கும். தொண்டை பகுதியை
ஆராய்ந்து விஷம் உள்ள பகுதிகளை நீக்கிவிட்டு மற்ற பகுதிகளை உணவாக உட்கொள்கின்றன.
புதிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கருத்துக்களை மனிதவாழ்வின்
மேம்பாட்டுக்காக பரப்பும் நோக்கத்துடன் ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவின் நியூயார்க்
நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் Technology Entertainment
Designing என்ற தொண்டு நிறுவனம் வருடாவருடம் மாநாடுகளை நடத்திவருகிறது இந்த வகையில் கடந்த
2008 ஆண்டு மார்ச் நடைபெற்ற மாநாட்டில் “ ஜோஷா க்லெயின்” என்ற அறிஞர் காகங்களை
நாம் எவ்வாறு சமுகத்திற்கு பயனுள்ளவிததில் பழக்கப்படுத்தலாம் என்பதை குறித்து தான்
நடத்திய ஆய்வின் முடிவுகளை வெளியிட்டார். அதில் அவர் குறிப்பிட்டிருந்த வியப்பை தருவதாக
உள்ளது.
காகங்களை தானியங்கி இயந்திரங்களை கொண்டு நம் ஊர் தெருக்களில் குவிந்துள்ள
குப்பைகளை பொறுக்கவைக்கலாம் என்பதே அது. இயந்திரத்தில் வருமாறு செய்வதாகும்.
அமெரிக்க மீன் மற்றும் வன உயிரினங்கள் சேவை மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி
Hawaiian Crow , Mariana Crow ஆகிய
இனங்கள் உலகில் அழிந்துவிட்ட உயிரினங்களில் வகைகளாக வரிசைபடுத்தப்பட்டுள்ளன.
Hawai தீவுகளில்
வாழ்ந்த வந்த Hawaiian Crow கிபி 2002வரை அங்கு
காணப்பட்டன. ஆபத்தான நிலையில் உள்ளதாக அமெரிக்கன் க்ரோ வகைப்பட்டுள்ளது 1999 ஆண்டு கணக்கின்படி
இந்த இனத்தின் 45% காகங்கள் வெஸ்டினைல்
வைரஸ் என்னும் ஒருவகை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு அழிந்துவிட்டன.
இத்தாலியிலும், கிரிஸ் நாட்டிலும் ஒரு சொல்வழக்கு உள்ளது.ஜாக்டா மவுனமாகும்போது
அன்னம் பேசத்தொடங்குகிறது( The Swan will sing when the jackdaws
are silent) என்பதே அது முட்டாள்கள் மொவுனமாகும் போது அறிவாளிகள் பேசத்தொடங்குகிறார்கள்
என்பதே அதன் பொருள்.
ஆனால் இந்த கூற்றில் உண்மையில்லை என்பது இப்போது நம் எல்லோருக்கும்
தெரியும். பூமியில் ஒவ்வொரு இனமாக அழிந்துவரும் இன்றைய நிலைமையில் நம் வாழ்வோடு
பின்னிப்பினைந்துவிட்ட ஒரு பறவையாக விளங்கும் காகங்களை அழியாமல் பாதுகாக்க வேண்டிய
பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உணர்வோம் ,செயல்படுவோம் வாருங்கள்.
நம்மோடு வாழ்ந்து நம்மோடு வளர்ந்த நாம் தினமும் பார்த்து வந்த சிட்டுக்
குருவிகளும் புறாக்களும் மெல்ல மெல்ல அழிந்து வருகின்றன. சிட்டு குருவிகளை
காப்பாற்ற வருடம் வருடம் மார்ச் 20ம் தேதியை உலக
சிட்டுக் குருவிகள் தினமாக்க கொண்டாடி வருகிறோம். அது போன்ற நிலைமை காகங்களுக்கும்
வந்துவிடகூடாது. உலகின் எல்லா க்லாச்சாரங்க்ளிலும் நம் வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிட்ட
காகங்களை அழியாமல் பாதுகாக்கும் பொறுப்பு நம் எல்லோருக்கும் உண்டு.
உணர்வோம்!!! செயல்படுவோம் !!! வாருங்கள் !!!
No comments:
Post a Comment