Sunday, 15 March 2015

சுற்றுச்சூழல் பற்றி தமிழில் ஒரு E-Book


சுற்றுச்சூழல் அறிஞர்களின்…


முதல் முறையாக சுற்றுச்சூழல் பற்றி தமிழில் ஒரு E-Book வந்திருக்கிறது. அதில் முப்பத்தி ஐந்து ஆளுமைகள் தங்கள் கருத்துக்களை அள்ளி தெளித்திருக்கிறார்கள். ஆரம்பமே நம்ம டார்வின் தொடங்குகிறார் உயரினங்கள் அனைத்தும் படைக்கப்படவில்லை பரிணாமத்தின் மூலமே உயிர்கள் தோன்றின என்ற கருத்து மிக பெரிய புரட்ச்சியை உண்டு பண்ணியது என்றும், இன்றுள்ள உயிரின அறிஞசர்களால் (99.8 சதவிகதம் பேர்) அவர் கருத்தை ஏற்று கொண்டனர் என்றும் பதிவுசெய்துள்ளனர்.

இந்தியாவில இருந்து ஐந்துக்கும் மேற்ப்பட்டவர்கள் தங்களுடைய கருத்துகளை சொல்லியுள்ளனர் அதில் வீரபத்ரன் ராமநாதன் சுற்றுச்சூழலை பாதுகாக்க சூரிய ஒளியை பயன்படுத்துவதே சிறந்தது என்று சுட்டிக்காட்டியுள்ளார். மரங்களை மாணவர்கள் வளர்த்தால் மதிப்பெண் உண்டு என்று ஒரு பாடமாகவே நடத்த படவேண்டும் என்றும் அழுத்தமாகவே பதிவு செய்துள்ளார் தியடோர் பாஸ்கரன்.

சுற்றுச்சூழலை ஏன் பாதுகாக்க வேண்டும், காட்டுயிர்களை பாதுகாப்பதால் என்ன நன்மை மனிதர்களுக்கு, அரசு ஏன் நிறைய சட்டங்களை போட்டு காடுகளை பாதுகாக்கிறது என்ற கேளிவிகளுக்கு மிக எளிமையான பதில்- புவியில் வாழ மனிதர்களுக்கு எவ்வளவு உரிமை உள்ளதோ அதே போல தான் மற்ற உயிரினங்களுக்கும் உண்டு. மற்றும் மனிதர்கள் இன்றி பறவைகளால் வாழமுடியும் ஆனால் பறவைகள் இன்றி மனிதனால் வாழமுடியாது என்றும் குறிப்பிடுகிறார் சலீம் அலி.  

நாம் நல்லவர்களாக இருந்தால் மட்டும் போதாது எதற்காவது உதவுபவர்களாகவும் இருக்கவேண்டும் என்ற முழக்கத்துடன் தொடங்குகிறார் அமெரிக்காவின் ஹென்றி டேவிட் தோரா.இவர் டார்வினின் உயிரினங்களின் தோற்ற கோட்ப்பாட்டை ஆதரித்தவர். காலை முதல் மாலை வரை வால்டன் குளத்தின் கரையில் அமர்ந்து நீரில் நீந்தி கொண்டிருந்த வாத்துகளை பார்த்துகொண்டிருந்தார் என்று இவரை பற்றி எழுத்தாளர் S.ராமகிருஷ்ணன் விழித்திருப்பவனின் இரவுகள் புத்தகத்தில் விரிவாக எழுதி இருப்பார்.

30ஆண்டுகளில் 3கோடி மரங்களை நட்டு,தாய் நாட்டில் முதல் நோபல் பரிசை பெற்று, நாட்டில் முதல் டாக்டர் பட்டம் என்று தொடர்ச்சியான சாதனைக்கு சொந்தம் ஒரு பெண் –வாங்காரி மாத்தாய்- கென்யா நாடு. பசுமை இணைப்பு இயக்கம் என்ற இயக்கத்தை ஆரம்பித்து இயற்கைக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர்  

இப்படி புத்தகம் முழுவதும் இயற்கையை புரிந்து கொள்ளும் அளவுக்கு செய்திகள் நிறைந்து இருக்கிறது இந்த புத்தகத்தை எழுதி அதை இலவசமாக மின் புத்தகமாக யார் வேண்டுமானாலும் டவுன்லோட் செய்து கொள்ள அனுமதியும் தந்த ஆசிரியர் ஏற்காடு இளங்கோ அவருக்கு மிக்க நன்றி.

http://freetamilebooks.com/ebooks/scientistthoughtsonenvironmental/

                                                                                                                       -செழியன்  
 

No comments:

Post a Comment