Thursday 5 March 2015

First BirthDaY



Birdsshadow வலைதளத்தை ஆரம்பித்து ஓராண்டு முடிவடைந்து இரண்டாம் ஆண்டு தொடக்கத்தில் நின்று, இது வரை என்ன நடந்தது என்று திரும்பி பார்க்காமல் அப்படியே பார்த்தேன். நிறைய செயல்கள் நடைபெறவில்லையென்றாலும் ஒரு சில முயற்சிகள் நடந்தது.

1.ஒரு மாதம் கூட தவறாமல், தொடர்ச்சியாக பதிவுகளை பதிவிட்டது. இருந்தாலும் ஒரு மாதம் ஒரு பதிவு மட்டுமே பதிவிட முடிந்தது. ஏனென்றால் பதிவு இல்லாத மாதம் இருக்ககூடாது என்றும், நிறைய வேலைகள் இருந்தாலும் ஒரு பதிவாகவாது இருக்கவேண்டும் என்று நினைத்தால் மட்டுமே அது நிறைவேறியது. 

2.தொடர்ச்சியாக இதற்க்கு கட்டுரைகளை அனுப்பிவைத்த திரு.சிதம்பரம் ரவிசந்திரன் அவர்களுக்கு நிறைய நன்றிகள் என்று சொல்லவதை விட வேறு என்ன சொல்லலாம் என்று யோசித்து கொண்டிருக்கிறேன். அதற்க்கு முக்கிய காரணம் அவரால் நம்மை போல் தெளிவாக பார்க்க முடியாது. எனக்கு பேச வேண்டும் என்றாலும் வேறு யாரிடமோ மொபைல் போனை கொடுத்து நம்பர் போட்டு கொடுக்க சொல்லுவார் அப்படி இருந்தும் அவரால் எப்படி கம்ப்யூட்டரில் தட்டச்சு செய்து கட்டுரை அனுப்ப முடிகிறது என்ற ஆச்சரியம் தான் அவருக்கு நிறைய நன்றியை விட வேறு என்ன சொல்லலாம் என்று யோசித்து கொண்டிருக்கிறேன் .

3.ஒருவருடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் Birds shadow தளத்தை பார்வையிட்டிருக்கிறார்கள் அதற்க்கு துணை புரிந்த பூவுலகு நண்பர்கள், மரம் போன்ற முகநூல் நண்பர்களுக்கும், Tamil Birds yahoo group, Madras naturalist society group நண்பர்களுக்கும் இந்த தருணத்தில் மிக்க நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 

4.திரு.தியடோர் பாஸ்கரன் அவர்கள் Birds shadow படித்து அருமையாகவும், தெரிந்து கொள்ளவேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது என்று முகநூலில் தெரிவித்ததற்க்கு மனப்பூர்வமான நன்றி சார். 

பறவை,விலங்குகள்,சுற்றுச்சூழல் என்று நிறையை கட்டுரைகள் இந்த ஒரு வருடத்தில் எழுதி இருந்தாலும் இன்னும் நிறைய பதிவுகள் மற்றும் தமிழில் இருக்கும் சுற்றுச்சூழல் எழுத்தார்களின் கட்டுரைகளும் அவர்களின் பேட்டிகளும் இந்த வருடம் கண்டிப்பாக வரும் என்பதை இந்த தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

சலீம் அலியை பற்றி முழுவதும் உங்களுக்கு தெரியவில்லை என்றாலும் அவரை பற்றி சுருக்குமாக தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்க்காகவே எழுதப்பட்ட கட்டுரை Bird Man of India
 
http://birdsshadow.blogspot.in/2014/05/bird-man-of-india-1.html

நிறைய பறவைகள் அழிவின் விளிம்பில் இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டும் கட்டுரை Red List Birds of India ஆனால் அவைகள் இருட்டில் இருப்பது தான் சோகமே.

http://birdsshadow.blogspot.in/2014/08/red-list-birds-of-india.html

ஆங்கிலத்தில் ஆயிரகனக்காண புத்தகங்கள் சுற்றுச்சூழல் தொடர்பாக இருந்தாலும் நம் கடைகோடி மனிதர்கள் அதை படிப்பது சிரமமே. தமிழில் ஒரு சில புத்தகங்கள் மட்டுமே இருந்தாலும் அவை சிதறி காணப்படுகிறது, அவை எங்கு கிடைக்கும், யார் வெளியிடுகிறார்கள் என்று தெரிவிப்பதே இந்த இரண்டு கட்டுரைகளின் நோக்கம். 



Birds shadow Group என்று FaceBook Group ல் உடனுக்குடன் பதிவுகளை தெரிவித்துவிடுவதால் வாசகர்கள் கட்டுரையை தெரிந்துகொள்வது சுலபமாக இருக்கிறது. இந்த கட்டுரையை படிக்கும் நபர்களும் Group ல் இணைத்து உங்களிடம் இருக்கும் பதிவுகள் மற்றும் படங்கள் அவற்றில் தெரிவியுங்கள் மிகச் சிறந்த பங்களிப்பாக இருக்கும்.


அவ்வப்போது தமிழில் வெளிவரும் பறவை,விலங்கு மற்றும் சுற்றுசூழல் போன்ற பத்திரிக்கைகளை தெரிவித்து கொண்டு வருகிறேன். வரா,மாத பத்திரிகைகளின் மத்தியில் இது போல் இருக்கும் பயனுள்ள பத்திரிகைகள் வருவது சிறந்ததே.

பறவைகள் பார்ப்பதற்கு மிக முக்கியமானது binocular அவற்றை எப்படி தேர்வு செய்யவேண்டும் என்பதை பற்றி சொல்லும் கட்டுரை

இந்த ஆண்டு இன்னும் நிறைய கட்டுரைகள், பேட்டிகள்,வெளி மாநில சரணாலயங்கள், வாசகர் கட்டுரைகள் வெளியிட வேண்டும் என்ற நினைப்போடு முடிக்கிறேன்.  

No comments:

Post a Comment