Monday, 20 March 2017

சிட்டு குருவிகள் தினம் - March 20



Chennai-Besant Nagar
மேல் இருந்து விழுந்த சிட்டு குருவியின் குஞ்சை எடுத்து மீண்டும் அதன் கூட்டில்  விடுவதற்கு பெரியவர்களை தேடிக்கொண்டிருந்தேன் கடைசியில் மாமா வந்தார் குட்டியை அதன் கூட்டில் விட்டு விடுங்கள் என்றேன் சரி என்று அதை எடுத்து கூட்டில் விடும்பொழுது பறவை குஞ்சுகள் கீழே விழுந்து விட்டால் அதன் தாய் மீண்டும் கூட்டில் சேர்க்காது அதனால் இந்த குஞ்சை கீழே தள்ளிவிடும் என்றார். அவை உண்மையா இல்லையா என்று அப்பொழுது தெரியாது மாமா சொன்னபடி மீண்டும் அவை கீழே விழுந்ததா என்றும் நினைவில் இல்லை. இது நடந்தது தொன்னூறு காலகட்டத்தில்.

sparrow day sparrow
அப்பொழுது எங்கள் வீடு ஓடு போட்ட வீடு ஆதலால் குருவிகளுக்கு வசதியாக எங்கள் முற்றத்தில்அதன் கூட்டை அமைத்து கொண்டது. இப்பொழுது இருக்கும் வீட்டிற்கு அருகில் ஆறு சிட்டு குருவிகள் நிரந்தரமாக இருப்பதை பார்த்து வருகிறேன் அதற்கு எதிர் வீடு, பக்கத்து வீடு என்று அங்கு உள்ள அனைவரும் உணவை வைக்கிறார்கள். வீட்டின் முன் உள்ள கொடி மரத்தில் அவற்றின் வாழ்விடம் அமைத்து கொண்டது. சிட்டு குருவிகள் தினத்தில் அவற்றை பார்க்க சென்றேன் அதிக வெய்யில் காரணமாக அவை தென்படவில்லை.

பார்த்தே தீர வேண்டும் என்று மீண்டும் படையெடுத்தேன் படமும் எடுத்துவிட்டேன். நான்கு குண்டு குண்டு சிட்டுக் குருவி ஓயாமல் விளையாடிக் கொண்டிருந்தது. அங்கு இருந்த மனிதரிடம் இன்று சிட்டு குருவி தினம் என்று நான் சொல்வதற்கு முன்பு அவரே சொல்லிவிட்டார் ஆக அந்த அளவுக்கு இந்த வருடம் தெரிந்து இருக்கிறது. பெரும்பாலான பத்திரிக்கையில் கட்டுரை வந்துள்ளது முக்கிய காரணம் ஆகும் மற்றும் செய்தி தொலைகாட்சியிலும் சிட்டு குருவிகள் பற்றிய தொகுப்பு காண்பித்தது சிறப்பு. 

இன்று சிட்டு குருவிகள் தினம் என்பதால்  சென்னையில் எப்படி இதனை அணுகுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள நேற்று காலை பெசன்ட் நகர் கடற்கரையில் விழுப்புணர்வு கூட்டம் நடத்தபடுவதை அறிந்து சென்றேன்.

கிராமத்தில் நடக்கும் தேர் திருவிழா நடக்கும் பொழுது பக்கத்து ஊரில் இருந்தும் மக்கள் வருவார்கள் ஒரே மக்கள் தலைகளாக தெரியும் இதை நான் கிராமத்தில் பார்த்தது அதே போல் ஒரு மக்கள் கூட்டத்தை பெசன்ட் நகர் கடற்கரையில் sunday காலையில் பார்த்தேன் மக்கள், வண்டி செல்லும் சாலையில் அமர்ந்து விளையாடுவதும், குழந்தைகள் செஸ், ஓடுவது என்று மக்கள் சமுத்திரம் என்பது போல் இருந்தது. இதனை car free sunday என்று கொண்டாடுகிறார்கள். 

இதில் எங்கே சிட்டுக்குருவி விழிப்புணர்வு நடக்கிறது என்றே தெரியவில்லை ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக இருக்கிறது.  சுற்றி தேடி கடைசியில் கண்டுபிடித்துவிட்டேன்  விழிப்புணர்வு ஏதோ ஓரத்தில் நடக்கும் இதற்கெல்லாம் யார் வரப்போகிறார்கள் என்ற நினைப்பில் சென்றால் நிறைய குழந்தைகள் கீழே அமர்ந்து படம் வரைந்து கொண்டிருந்தார்கள் கிட்டே சென்று பார்த்தல் அவை அனைத்தும் சிட்டுக் குருவி படங்கள்.

மிக பெரிய அளவில் KFC அருகில் குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரும் அங்கு ஆர்வமாக சிட்டுக் குருவிகள் பற்றி சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தார்கள். விழிப்புணர்வு கூட்டத்தை நடத்துவது MNS மற்றும் ஜனனி அறகட்டளை.

மிக அருமையான விழிப்புணர்வு நிறைய குழந்தைகள் பெரியவர்கள் என்று ஆர்வமாக பங்கெடுத்தார்கள். குழந்தைகளுக்கு ஓவிய போட்டி வைத்து பரிசும் வழங்கினார்கள் உண்மையில் இந்த விழிப்புணர்வு நல்லதொரு விடியலாக சிட்டு குருவிக்கு இருக்கும்.

அங்கு இருந்த ஒருவர் என்னிடம் ஏன் சிட்டு குருவியை பாதுகாக்கவேண்டும் என்று கேட்டார்? 

சரியான கேள்வி ஏன் பாதுக்காக வேண்டும் ?

இப்படியும் நம்மை நாம் கேட்டுக்கொள்ளலாம் நாம் ஏன் உயிர் வாழவேண்டும்?

அறிவியல் பூர்வமாக இதற்கு பதில் சொல்லாமல் எளிமையான வார்த்தைகளில் சிறு உதாரணத்தோட பார்ப்போம் -பெரும் மழை பெய்த 2016வருடம் சென்னையில் இருக்கும் மனிதர்களின் நிலையை உலகமே தொலைக்காட்சியில் பார்த்தது. இந்த மழையில் நிறைய மனிதர்கள் இறந்து விட்டார்கள். தன்னார்வளர்கள், அண்டை மாநிலத்தவர்கள், பிரதமர், முதலமைச்சர், எதிர்கட்சிகள் என்று இறங்கி இங்கு இருக்கும் மனிதர்களுக்கு தேவையான உணவு, உடைகள், உதவிகள் கிடைக்க வழிவகுத்தார்கள்.

நம் வாழ்விடத்தை வேறு யாரும் அழிக்கவில்லை இயற்கையாக வரும் மழையை கூட  நம்மால் தாக்கு பிடிக்க முடியாமல் (பாதுகாப்பாக வீடு இருந்தும்) உயிர் வாழ நிறைய மனிதர்களின் உதவியை எதிர்பார்த்து இருந்தோம். செயற்கையாக மாதம் மாதம் அதே போல் நடந்தால் என்ன செய்வோம் ? 

உதவி செய்த மனிதர்களில் யாராவது இவர்களை நாம் ஏன் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்திருந்தால்? அதனால் பலனை எதிர்பார்க்காமல் சிட்டு குருவிகளை பாதுகாப்போம்.

சென்னையை விட்டு சென்று விடுவோம். அதே நிலை சிட்டுக் குருவிகளுக்கு ஏற்பட்டுள்ளது இயற்கை என்ன செய்தாலும் உயிரினங்களால் எதிர் கொள்ள முடியும் ஆனால் செயற்கையை எதிர்கொள்ள முடியாமல் நகரத்தை விட்டு வெளியேறிவிட்டது. சிலர் நாட்டை விட்டு வெளியேறுகிறேன் என்பார்கள் அது போல் இல்லாமல் நிஜமாகவே சென்னையை விட்டு சென்றுவிட்டது. 

அவற்றின் வாழிடம் முற்றிலும் அழிந்து விட்டது. முழுவதும் கான்கிரிட் வீடு என்பதால் அதனால் கூடு அமைக்க இடம் இல்லாமல் போனது. நமக்கு நிறைய மனிதர்களின் உதவிகள் கிடைத்தது சிட்டுக் குருவிகளுக்கு?
அவற்றின் வாழ்விடத்தை நாம் அழித்து கொண்டிருக்கிறோம் (உதாரணம்: பள்ளிகரணை, பெரும்பாக்கம், கேளம்பாக்கம் சென்று பாருங்கள் பறவைகளின் வாழிடம் எந்தளவுக்கு நம்மால் ஆக்ரமிக்கப் பட்டுள்ளது என்று தெரியும்) இதனால் அந்த பறவைகள் அழிந்து கொண்டிருக்கிறது. பூச்சிகள் பெருகி கொண்டிருக்கிறது.

நம் நினைவிற்கு வராமலே நம்மை சுற்றி இருக்கும் நிறைய உயிரனங்கள் அழிந்து கொண்டிருக்கிறது அதில் ஒன்று சிட்டு குருவி இவை பெரும் அளவில் அழியவில்லை என்றாலும் நகரத்தில் இவற்றை காண்பது அரிதாகிவிட்டது. 

மனிதர்களாகிய நாம் சில முயற்சி எடுத்து அவற்றை மீண்டும் வரவழைக்கலாம். சிறு தட்டு அதில் உணவை வைத்து மாடியில் வைக்கலாம், செயற்கையான கூடுகள் விற்கப்படுகிறது அவற்றை வாங்கி நம் விட்டின் முன் கட்டி தொங்கவிடலாம் இதனால் உடனே சிட்டுக் குருவி வராது சில வாரங்கள் கடந்து சிறுக சிறுக வர ஆரம்பிக்கும் நாளடைவில் நீங்களே எதிர்பார்க்காத அளவுக்கு சிட்டுக்குருவிகள் வருவதை பார்ப்பீர்கள்.     

-செழியன்

lapwing2010@gmail.com


3 comments:

  1. It is our responsibility to save our sparrows so that our survival in this world will be confirmed....

    ReplyDelete
  2. I am still not clear about what caused their disappearance from the cities. I had seem them in such huge numbers in my childhood to the point of considering them as nuisance. Unable to buy the mobile tower logic - why would that affect sparrows alone. Pesticides - mostly the sparrows were found near human residence feeding on food wastes and insects. How do feral pigeons survive in the same conditions and multiply. Wish some day the answer is found. Kind regards, chandru

    ReplyDelete