களத்தில் வரைந்து கொள்ளுதல் |
உங்க கல்யாண போட்டோவை காட்டுங்கள் என்றால்
சில பேர் அதெல்லாம் எங்க இருக்குனு
தெரியவில்லை அல்லது வீடு மாறும் பொழுது தொலைந்து விட்டது என்பார்கள்
இன்னும் சிலர் உடனே எடுத்து காண்பிப்பார்கள். ஒரு புகைப்படத்தை காண்பித்து நிறைய
விஷயங்களை பேசுவார்கள் இங்கே பாருங்கள் வலது ஓரம் நிற்பவர்தான் என் சித்தப்பா, ஏற்கனேவே
என்னுடைய பாட்டியை பற்றி சொல்லி இருக்கிறேனே இவர்தான் அவர் அத்தை பின் நிற்பவர்தான்
என் பாட்டி, தொண்ணூற்று ஆறு வயது வரை வாழ்ந்தார். இப்படி ஒத்த போட்டோவை கையில் வைத்து
கொண்டு அன்று நடந்த கல்யாணத்தை நேற்று காலை மண்டபத்தில் இருந்து வந்ததுபோல் பேசுவார்கள்.
இவை மனதுக்கும், வாழ்கை சூழலுக்கும் மிகவும் இனிமையானதாக இருக்கும். இவையெல்லாம்
கல்யாணத்தை பதிவு செய்து இன்றுவரை அந்த பொக்கிஷங்களை வைத்து இருப்பதால் மட்டுமே சாத்தியப்பட்டது.
இதே போல்தான் பறவை பார்த்தலை உடனக்குடன் பதிவு செய்து வைத்து விட வேண்டும்.
இதெல்லாம் யார் எழுதி கொண்டிருப்பார்கள் என்பவர்கள் மேலே இருக்கும் முதல் வரியை
போன்றவர்கள், சுவாரசியம் இல்லாத மனிதர்கள்.
ஏன் பதிவு செய்யவேண்டும்?
அதானே ஏன் பதிவு செய்யவேண்டும் நான்கு வருடம்
முன்பு முதன் முதலில் பார்த்த ஒரு பறவையை பதிவு நோட்டில் பார்க்கும் பொழுது மனது
அந்த வருடத்திற்கு சென்று அங்கிருந்து அந்த பறவையை அடுத்து எங்கு பார்த்தோம்? சமீபத்தில்
பார்த்து இருக்கிறோமா? வேறு எங்காவது பதிவு செய்து வைத்திருக்கிறோமா? இந்த பறவையை பற்றி
வேறு என்ன விஷயங்கள் தெரிந்து கொண்டோம்? இப்படி எண்ணற்ற கேள்விகளை கேட்டுக்கொண்டே
சென்றால் அந்த பறவையை இன்னும் மிக நுணுக்கமாக தெரிந்து கொள்வதற்கு நம்மை அழைத்து
செல்லும்.
இது மட்டும் இல்லாமல் இன்றைக்கு அந்த
பறவையின் நிலை என்ன? எண்ணிக்கையில் உயர்ந்திருக்கிறதா? இப்படி தகவல்களை தெரிந்து
கொள்வதற்கு நம்மிடம் அதற்கான தகவல் இருக்க வேண்டும் அப்படி இல்லையென்றாலும் வேறு
யாராவது அந்த பறவையை பற்றி பதிவு செய்து வைத்திருந்தால்தான் நம்மால் தெரிந்து
கொள்ளமுடியும். ஆக பதிவு செய்தல் என்பது
மிக மிக அவசியம் என்பது தெரிகிறது.
LIFE LIST |
கிரேக்க தத்துவ அறிஞர் அரிஸ்டாட்டில்-
வருடத்தில் ஒரு சில மாதங்களில் பறவைகள் காணாமல் போவதும் சில மாதங்களுக்கு பிறகு
அவை தென்படுவதாக குறிப்பிட்டுள்ளார். பறவைகள் வலசை செல்வது அப்பொழுது தெரியாது
என்பதால் அப்படி குறிப்பிட்டுள்ளார். இரண்டாயிரம் வருடம் முன்பு அவர் நினைத்ததை
பதிவு செய்ததால் மட்டுமே இன்று என்னால் உதாரணமாக சொல்லமுடிந்தது. ஏனென்றால் வரலாறு
முக்கியம் அமைச்சரே
சரி சரி பதிவு செய்கிறோம் எதெல்லாம் பதிவு
செய்யவேண்டும் என்று கோபமாக கேட்பது தெரிகிறது.........
இரண்டு விதமாக
பதிவு செய்யலாம்:
அ. களத்தில் இருக்கும் பொழுது எடுக்கப்படும்
குறிப்புகள் (சிலர் இதோட விட்டுவிடுவார்கள்)
ஆ. பிறகு வீட்டில் முழுவதும் எழுதிவைத்தல்.
எடுக்கவேண்டிய
குறிப்புகள் :
(அ)
பறவை பார்க்கும் இடம், தேதி, நேரம், காலச்சூழ்நிலை (வெயில், மழை, மேகமூட்டம், பனி)- Place-Date-Time-Weather Condition
(ஆ)
பறவைகளின் பெயர்- Birds
Name
(இ) புதிய பறவைகள் பார்த்தால் அவை பற்றிய
குறிப்பு (பறவை படம் வரைதல்)- New Bird (if watched) Detail & Drawing
(ஈ)
பறவைகளின் எண்ணிக்கை (முடிந்தால்)- Bird
Count (if possible)
பட்டினபாக்கம் பறவை பார்த்தல் குறிப்பு |
எடுக்க பட்ட குறிப்புகளை வீட்டில்
ஒழுங்குபடுத்தி, பார்த்ததில் ஏதாவது ஒரு பறவை அல்லது பல பறவைகள் செய்த செயல்கள்
பற்றி குறிப்பு எழுதி, பறவை பார்த்தலில் உங்களுடைய முக்கிய சம்பவங்கள் பற்றி சில
வரிகள் என்று வீட்டில் எழுதும் பதிவுகள் இருத்தல் வேண்டும். எப்பொழுது பதிவு
புத்தகத்தை எடுத்து பார்த்தாலும் அந்த நாள் சம்பவங்கள் நினைவுக்கு வந்துவிடும்..
அதனால் களத்தில் குறிப்பு எடுத்தால் மட்டுமே
வீட்டில் துல்லியமாக (முழுவதும்) எழுதமுடியும். அதுதான் முழுமையான பதிவு. களத்தில்
குறிப்பு எடுக்காமல் வெறும் நினைவில் இருப்பதை வைத்து வீட்டில் பதிவு செய்தால் அவை
ஐம்பது சதவிகிதம் மட்டுமே சரியாக இருக்கும்.
பேசும்பொழுது, தூங்கும் பொழுது, வேலை
செய்யும்பொழுது சுவாசிபதில்லையா அதேபோல் பறவைகளை பார்த்துக் கொண்டே, ரசித்துக்
கொண்டே, அதை பற்றி பேசிக்கொண்டே குறிப்புகள் எடுக்கலாம் அதற்கெல்லாம் பெரிய
முயற்சியெல்லாம் வேண்டாம் சாதாரணமாகவே ஆரம்பியுங்கள் தனியாக பூஜை எல்லாம் போட்டு
தொடங்கவேண்டாம்.
களத்தில் குறிப்பு எடுக்கும்பொழுது வீட்டில்
எழுதுவது போல் பொறுமையாக செய்யமுடியாது வேகமாக செயல்படவேண்டும் அதனால் எடுக்கும்
குறிப்புகள், வரையும் படங்கள் முன்னும் பின்னுமாக இருக்கும் அதில் தவிறில்லை பிறகு
சரிசெய்து கொள்ளலாம்.
கிண்டி பூங்கா குறிப்புகள் |
தமிழ் பறவையாளர்கள் சந்திப்பு |
உதாரணம்:
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் பற்றிய
குறிப்பு :
இடம்- வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்
தேதி- 05-01-2017
நேரம்- 8.00am to 11.00am
காலநிலை– மிதமான வெய்யில்
பார்த்த பறவைகள்- அரிவாள் மூக்கன்(Black Headed Ibis)(20+), கரண்டிவாயன்(Spoon Bill) (10+), இராகொக்கு(Night Heron) (5), மடையான்(Pond Heron) (12), சிறிய கொக்கு(Little Egret) (30+), மஞ்சள் மூக்கு நாரை(Painted Stork)(50+), நீர்காகம்(Little Cormorant)(50+),உன்னி கொக்கு(Cattle Egret) (20+),புள்ளி ஆந்தை(Spotted Owl)(6), பாம்புதாரா(Darter)(1), ஊசிவால் வாத்து(Northern pintail)(20+),சிகப்பு ஆட்காட்டி (Red Wattled Lapwing)(4) etc.....
களத்தில் குறிப்புகள் |
புதிய பறவை(Lifer) :
ஊசிவால் வாத்து(Northern Pintail) பறவை பார்த்தலில்
ஒவ்வொருமுறையும் புதிய பறவையை பார்க்க முடியாது அதனால் முடியும் போது எழுதிவைத்துவிடுங்கள்.
எண்ணிகையை பறவை பெயர் முடிவில் தெரிவித்து விட்டால்
சுலபமாகிவிடும்.. துல்லியமாக எண்ணியிருந்தால் அப்படியே, எண்ணிக்கை அதிகம்
இருந்தால் ஏறக்குறைய இவ்வளவு இருக்கும் என்று உறுதியாக நினைத்து (+) சேர்த்துவிட்டால்
அந்த எண்ணிக்கையில் இருந்து சிறுது முன்னும் பின்னும் இருக்கலாம்.
இவ்வளவுதாங்க ஒவ்வொருமுறை நீங்கள் பறவை
பார்க்க செல்லும்பொழுது சுலபமாக இவற்றை எழுதிவிடலாம். இதுவரை பறவை பார்த்ததை
தொடர்ச்சியாக எழுதி வைத்து வருவதை இணைத்துள்ளேன் படத்தில் பறவை பெயர் மற்றும் சில விவரங்கள்
மட்டும் உள்ளது அதை தவிர முக்கிய சம்பவங்கள் இல்லையே என்று கேட்பீர்கள்? என்னுடைய பறவை
பார்த்தலை பெரும்பாலும் Blogல் எழுதி
விடுவதால் குறிப்பு புத்தகத்தில் விடுபட்டுள்ளது.
மேலே உள்ளதை அப்படியே செய்ய வேண்டும்
என்பதில்லை செய்தால் சரியான பதிவாக இருக்கும். ஒரு புதிய பறவையை பார்க்கும் பொழுது
அதன் பெயர் தெரியவில்லை என்றால் உடனே நாம் எப்படி குறிப்பு எடுக்கவேண்டும் என்பதை
பறவை நோக்குதல் தொடர்-4ல் பார்த்தோம். புதிய பறவையை முடிந்த அளவு அதன் அலகு நீளம், நிறம், கால்
அளவு மற்றும் நிறம், இறக்கை, கழுத்து, வால், கண் என்று முடிந்த அளவு குறித்து
அல்லது படம் வரைந்து கொண்டால் பறவை கையேடு
வைத்து கண்டுபிடித்துவிடலாம்
பறவை பார்த்தலில்
நாம் ஒரு புதிய பறவையை பார்த்தோம் என்றால் அதனை ஆங்கிலத்தில் Lifer என்று
அழைப்பார்கள்.
மஞ்சள் ஆட்காட்டி(Yellow Wattled lapwing), சோளப்பட்சி(Rosy Starling), சேற்று பூனைப்பருந்து(Marsh Harrier) போன்றவரை முதன் முதலில் திருநெல்வேலியில் பார்த்தபொழுது என் அருகில்
இருந்தவர் Lifer, Lifer என்று என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.
இனிமேல் நீங்களும் ஒரு பறவையை முதன் முதலில் பார்க்கும்பொழுது Liferஎன்று சொல்லிக்கொள்ளுங்கள். அதனால் ஒவ்வொரு பறவையையும் முதன் முதலில் எங்கு பார்த்தோம்
என்று ஓர் பட்டியல் போடுங்கள். Lifer பற்றிய எண்ணிக்கையை தனியாக எழுதி வைத்து பதிவு
செய்துகொண்டே வாருங்கள். பறவைகளை பதிவு செய்வதில் இது ஒரு வகை. என்னுடைய Lifer List
Monthly Birding Planner |
OPTION- முடிந்தால் உங்களுடைய பறவை பார்க்க வேண்டிய
ஊர், இடம் மற்றும் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள், முக்கிய நிகழ்வுகள் பற்றி மாதம்
தோறும் நமக்கு நினைவுபடுத்த Planner ஒன்று இருந்தால் நல்லது. (IMAGE ATTACHED)
பறவைகளின் குரலோசை :
பார்த்த பறவைகளை குறிப்பது ஒரு வித தகவல்
சேகரிப்பு என்றாலும் அதற்கு அடுத்து
பறவைகளின் குரலை கொஞ்சம் கூர்ந்து கவனிக்க வேண்டும். பறவைகளின் குரல் பற்றி
தனி ஒரு பதிவாக எழுதுகிறேன். இப்பொழுது நாம் எவ்வளவு பறவை வகைகளின் குரலோசையை
கேட்டு இருக்கிறோம் என்பதை பதிவு செய்யவேண்டும்.
உதாரணம்:
குயிலை பார்க்க முடியவில்லை என்றாலும் அதன்
ஓசையை நிறைய தடவை கேட்டிருப்போம் அதுபோல், கதிர் குருவி, பச்சைக்கிளி, புள்ளி ஆந்தை என்று இதுவரை கேட்ட பறவைகளின் குரலோசை
எல்லாம் பதிவு செய்துவிடுங்கள்.
மீண்டும் சுருக்கமாக
பார்த்துவிடுவோம்.
1. களத்தில் எடுக்கப்படும் குறிப்புகள்
2. வீட்டில் எழுதும் பதிவுகள் - இடம், நேரம், பார்த்த பறவைகள் பெயர், புதிய
பறவை பெயர் (பார்த்திருந்தால்), உங்களுக்கு பிடித்த பறவைகளின் செய்கைகள்
சுருக்கமாக
3. Lifer List -இதுவரை பார்த்த மொத்த
பறவைகளின் பெயர்கள்.
4. இதுவரை கேட்ட பறவைகளின் குரல் பற்றிய தகவல் பதிவுகள் (Birds Call List)
இவையெல்லாம் உங்களுக்கு உங்களுக்கான தகவல் சேகரிப்பு
என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள் எதிர்காலத்தில் இந்த குறிப்புகள் நிறைய
பயன்தரும். அதனால் ஏன் செய்யவேண்டும் என்பதை விட்டுவிட்டு செய்துவிடுங்கள்
அவ்வளவுதான்.
இந்த காலத்தில் யார் கையில் எல்லாம் எழுதி
வைப்பார்கள் என்று சொல்பவர்களா நீங்கள் ?
அதற்கும் வழி இருக்கு தப்பவே முடியாது.
இந்தாருங்கள் e-bird இதில் கணக்கை
தொடங்கி நாம் பார்க்கும் பறவைகளை தொடர்ச்சியாக பதிவு செய்துவைக்கலாம். பறவையாளர்
பா.ஜெகன்நாதன் அவர்கள் ebird பற்றி தொடர்ந்து எழுதியும், பரப்புரையும்
செய்துவருகிறார். அதனால் அவற்றை பற்றி சுருக்கமாக தெரிந்துகொள்வோம்.
ebird உலகளவில் உள்ள பறவையாலர்கள் பார்த்த பறவைகள்
பட்டியலை உள்ளிடு செய்யக் கூடிய சிறந்த வலைத்தளம் ஆகும். மற்றும் அந்த பறவை
பட்டியல் அனைவரும் பார்க்கும் பொது தளமாக விளங்குகிறது. தொடர்ந்து பறவைகள்
பட்டியலை உள்ளிடு செய்து வந்தால் அந்த பறவைகளின் இன்றைய நிலையை அறிந்து கொள்ளமுடியும்
(எண்ணிக்கை உயர்ந்து உள்ளதா அல்லது குறைந்து வருகிறதா?) e-bird மிக சிறந்த
இணைப்பு பாலமாக பறவைகளுக்கும்-மனிதர்களுக்கும் செயல்படுகிறது.
பறவையாளர்
திரு.ஜெகன்நாதன் அவர்களின் வார்த்தைகளில் ebird :
2014 மார்ச் மாதம் முடிவு செய்தேன். தினமும்
குறைந்தது 15 நிமிடங்கள், நான் எங்கே இருந்தாலும், பறவை பார்ப்பதென முடிவு செய்தேன்.
அப்படிப் பார்க்கப்பட்ட பறவைகளை eBird (www.ebird.org) எனும் இணையத்தில் உள்ளிட ஆரம்பித்தேன்.
மாதங்கள் சில கடந்தவுடன் இந்தியாவில்
அதிக பறவைப் பட்டியல் உள்ளிட்டவர்களில் முதல் 10 இடத்தில் எனது பெயரைக் கண்டவுடன் இந்த ஆண்டு எப்படியாவது
முதலிடத்திற்கு வர முயற்சிக்க வேண்டும்
என எண்ணிக் கொண்டேன்.
நீங்களும் உங்களின் பறவை பட்டியலை தொடர்ந்து
உள்ளிடு செய்யுங்கள் அவை மிக சிறந்த மாற்றத்தை கொண்டுவரும் என்பது நிதர்சனம். தமிழில்
eBird பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள- மின்னஞ்சல் செய்யவும் PDF உள்ளது அனுப்பிவிடுகிறேன்
சந்தேகம் இருப்பின் இருக்கவே இருக்கு
மின்னஞ்சல் : lapwing2010@gmail.com
-செழியன்
I am happy that am learning not only birdwatching but also Tamil names. Very useful info.
ReplyDeleteYour power of expression is superlative. You can influence and initiate minds through your writing skills. I am your fan, Sir. Kind regards, chandru
ReplyDeleteThank you for continues encouraging me sir
Deleteநல்லா இருக்கு அண்ணா நீங்கள் சொல்லும் விதம்
ReplyDeleteநன்றி
விஷனூ ஷங்கர்
மிக்க நன்றி விஷ்னு
Deleteyou are a great motivation. I love your writing.
ReplyDeleteமிக்க நன்றி
DeleteExtremely well written series after "Kalpattu Natarajan" Sir's bird watching episodes.
ReplyDeleteRef: http://www.mazhalaigal.com/management/team/team-001/mglta009nkn_natarajan.php#.WVkQZYSGOM8
Thanks for feedback and mentioned birds website
ReplyDelete