தூரத்தில் ஆல மற்றும் அரச மரம் |
பத்து வருடமாக இங்கு போலிஸ் வேலையில் இருக்கிறேன் ஆனால் இது போல் ஒரு முறையும்
பார்த்ததில்லை மனைவி, பிள்ளைகள் மற்றும் தெரிந்தவர்கள் என்று அனைவரையும் அழைத்து
வந்து காண்பித்துவிட்டேன் எல்லோரும் ஆச்சரியத்தில் மூழ்கிவிடுகிறார்கள் ஏன்
என்னுடைய உயர் அதிகாரி இங்கு தான் நடைபயற்சி செய்வார் இவற்றை பார்த்துவிட்டு
யாரும் இங்கு சத்தம் எழுப்ப கூடாது என்று சொல்லிவிட்டார் என்றால் பார்த்து
கொள்ளுங்களேன் அந்த அளவுக்கு இந்த பறவைகள் இங்கு வசிக்கும் அனைவரையும் தன் பக்கம்
இழுத்து கொண்டது என்றார்.
இவர் சொல்லும் பறவை சூறைக் குருவிகள்(Rosy Starling) என்று அழைக்கப்படும் பறவை வகையாகும். ஐரோப்பா
கண்டத்தில் இருந்து இந்தியாவிற்கு வலைசையாக வரும் பறவைகளில் சூறைக் குருவிகளும்
ஒன்று. ஏன் இங்கு வருகிறது? அதன் தாய் நாட்டில் காணப்படும் தட்பவெப்ப நிலையும்
அதனால் உணவு கிடைகாதபோதல் போன்றே சில காரணங்களால் பறவைகள் வேறு நாட்டிற்க்கு
சென்று சில மாதங்கள் தங்கி மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் மீண்டும் அதன் தாய்
நாட்டிற்க்கு சென்று விடும்.
சொந்தங்களுடன் பறக்கிறது |
நானும் இரண்டு மாதமாக மாலை ஐந்து மணிக்கு
மணப்பாக்கம், ராமாவரம் பகுதியில் இருந்து ஒரு கூட்டமாக பறந்து வருவதை தொடர்ச்சியாக
பார்த்து வருகிறேன் ஆனால் இவை எங்கு அமர்கிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை
தொடர்ச்சியான தேடலில் கண்டுபிடித்து விட்டேன். சென்னை-கிண்டி-பட் ரோடு அருகே போலீஸ் ஆபீஸ் ரோடு
செல்லும் சாலையில் மிக பெரிய விளையாட்டு மைதானம் உள்ளது அங்கு ஒரு அரச மற்றும்
ஆலமரம் பார்க்க முடியும். அந்த ஆலமரத்தில் சூறைக் குருவிகள் மிக ஆரவாரத்துடன் இரவை
கழிக்கிறது.
அனேகமாக அடுத்த
மாதம் அங்கு இருந்து கிளம்பலாம் அதனால் சென்னையில் இருப்பவர்கள் முடிந்த வரை
சென்று பார்த்து விடுங்கள்.
Rosy Starling by speakzeasy |
ஒரு நாள் மாலை பார்க்க
சென்றேன் எங்கிருந்தோ மிக சிறிய கூட்டம் ஒன்று வந்தது நேரம்
மரத்தில் அமர செல்கிறது |
இதுவரை சென்னை
கிண்டியில் இவற்றை பார்த்ததில்லை என்று சொன்ன போலீஸ்காரரிடம் எவ்வளவு மாதங்களாக இங்கு பார்க்க முடிகிறது என்ற
என்னுடைய கேள்விக்கு இரண்டு மாதங்களாக இவற்றை பார்த்து வருகிறேன் என்று சொன்னார்.
இரண்டு மாதங்கள் என்றால் ஜனவரி, பிப்ரவரி அப்போ அதற்க்கு முன்பு இந்த பறவைகள்
எங்கு இருந்து ?
இவை சென்னையை சுற்றி
வேறு எங்கோ இருந்திருகிறது டிசம்பர் மாதம் வந்த வர்தா புயலால் இவை அமரந்திருந்த
மரம் விழுந்திருக்கு வேண்டும் அதனால் வேறு இடத்தை தேடி செல்லும் பொழுது இங்கு
அதற்க்கு ஏற்ற இடமாக இருந்ததால் கெட்டியாக பிடித்து கொண்டது என்று நினைக்கிறன்.
இங்கு இருந்து ஸ்ரீபெரும்பத்தூர்
வரை இரைக்காக சென்று திரும்புவதாக போலீஸ்காரர் சொன்னார். இவற்றை சோளப்பட்சி
என்றும் அழைக்கப்படுகிறது. மாலை ஆறு பதினைந்து ஆனபிறகு
விமானத்துடன் சூறைக் குருவிகள் |
சென்னையில் அதிக பரபரப்பாக
வண்டிகள் செல்லும் கிண்டி சாலையில் ஆயிரகணக்கான சூறைக் குருவிகள் மனிதர்களை மறந்து
ஆடி, பாடி கொண்டிருகிறது.
-செழியன்
lapwing2010@gmail.com
Super sir, I was lucky enough to watch their lovely formation daily in evening from Tamarai tech park, Guindy. I could not find the ID due to less light. They could be in thousands I guess. Amazing sight!!!
ReplyDeletewow great news sir and thanks for sharing.
ReplyDeleteநன்றி
ReplyDelete