பத்து வருடங்களுக்கு ஒரு முறை மக்களையும், நான்கு வருடங்களுக்கு ஒரு
முறை புலிகளையும் கணக்கெடுக்கபடுகிறது இதை தவிர வேறு எந்த உயிரிணங்களுக்கு கணக்கெடுக்கப்படுகிறது?
வேறு உயிரிணங்களுக்கு
எடுக்கபடுகிறதா என்பது முதல் கேள்வியாக இருக்கும் அப்படி எடுக்கபட்டால் மக்களுக்கு
தெரியுமா? என்றால் தெரியாது என்றே சொல்லலாம். காரணம் ஊடகங்களில் அதிகம் வருவதில்லை,
அரசும் அதற்கு முக்கியத்துவம் தருவதில்லை, அரசும் இது போல் கணக்கெடுப்பு செய்வதில்லை
என்றும் சொல்லவேண்டும்.
இதில் பறவைகள் கணக்கெடுப்பு ஒன்று நடக்கிறது என்று யாருக்கு தெரியும்?.
பல பேருக்கு காக்கா, மைனா, குருவி தவிர மற்ற பறவைகளே தெரியாது இதில் கணக்கெடுப்பு
எப்படி தெரியும். இந்தியாவில் சிறிது சிறிதாக கணக்கெடுப்பு நிகழ்வுகள் இப்பொழுது ஆரம்பித்துள்ளது.
வெளிநாட்டில் இவை மிக பழக்கப்பட்ட செயலாகவே இருக்கிறது. கேரளாவில் ஓணம் பண்டிகையை
ஒட்டி பறவைகளை பார்த்து கணக்கெடுக்கப்படுகிறது. தமிழ் நாட்டில் பொங்கல் பாரம்பரியமான
பண்டிகை அதனால் அதனை ஒட்டி (ஜனவரி 15
to 18) பறவைகள் பார்த்து,
ரசித்து பொங்கலை கொண்டாடிகொண்டே கணக்கெடுக்கும் நிகழ்வு சில வருடங்களாக
நடந்துவருகிறது.
Indian Roller by Vinoba |
யார் இந்த செயல்களுக்கு காரணம் ?
நிச்சயம் மத்திய, மாநில அரசுகள் இல்லை சில பறவையாளர்கள் இவற்றை
முன்னெடுக்கிறார்கள் அரசுக்கு புலிகள் மட்டும் போதும் என்று நினைப்பு வந்து பலவருடமாகிவிட்டது. தமிழ் பறவையாளர்கள் அமைப்பு (ஜெகன்நாதன்
சார் மற்றும் சிலர்), Birdcount India இணைந்து ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை ஒட்டி “பொங்கல் பறவைகள்
கணக்கெடுப்பு” என்று நடத்துகிறார்கள் இதில் யார் வேண்டுமென்றாலும் பங்கெடுக்கலாம் ஒரு
நாளைக்கு காலை, மாலை குறைந்தபட்சம் பதினைந்து நிமிடம் பறவைகளை பார்த்து e-birdல் பதிவு செய்யவேண்டும் இவ்வளவுதாங்க மிக சுலபமாக செய்துவிடலாம் செய்யகூடிய
செயலும் ஆகும்.
முடிந்த பொங்கல் பறவை கணக்கெடுப்பு பற்றிய விரிவான தகவல் அடங்கிய PDF
ஒன்று வெளியிட்டிருக்கிறார்கள். மிக கச்சிதமான தகவல் பெட்டகம் என்றே சொல்லலாம்
தமிழகத்தில் தற்போதைய பறவைகளின் நிலையை நம் முன் காண்பித்துவிடுகிறது.
Ashy Drongo by Arvind |
உதாரணம்:
தமிழகத்தின் உள்ளூர்(Resident) Top-10 பறவைகள், வலசை(Migrant)Top-10 பறவைகள், மாவட்டவாரியாக Top-5 பறவைகள், தனிமனித அதிக பறவை பார்த்தல், வலசை பறவை எண்ணிக்கைகள்,
உள்ளூர் பறவை எண்ணிக்கைகள், குழு கணக்கெடுப்பு தகவல்கள் என்று எப்படி அஸ்வினி படம்
பார்த்துவிட்டு வெளியே வந்தால் ஓட வேண்டும் என்று தோன்றுமோ அதே போல் இவற்றை
படிக்கும்பொழுதே அதில் கலந்துகொள்ள வேண்டும் என்று தோன்றும்அளவுக்கு தகவல்கள்,
கட்டுரைகள், படங்கள், வரைபடங்கள், புள்ளிவிவரங்கள் என்று கொட்டி உள்ளார்கள்.
Brown Shrike by Surendhar |
சிறிது தெரிந்து கொள்வோம் :
இன்னும் பெரியவர்களே பறவை பார்த்தலை தொடங்கவில்லை என்னும்பொழுது பள்ளி
பிள்ளைகள் கலந்து கொண்டிருப்பது நிச்சயம் பாரட்டக்கூடிய செயலாகும் சின்கோனா அரசு
உயர்நிலைப் பள்ளி –வால்பாறை நாற்பதற்கும் மேற்ப்பட்ட இந்த பள்ளி பிள்ளைகள் பள்ளி
சீருடையில் கலந்துகொண்டு பறவை கண்கெடுத்திருப்பது சிறந்த முன்மாதிரியாக விளங்கும் மற்ற
பள்ளிகளுக்கு.
அதே போல் நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லுரி-பொள்ளாச்சி மாணவிகள்
கலந்துகொண்டு கல்லுரி வளாகத்தில் பதினைத்து பறவை வகைகளை பார்த்திருப்பது
மாணவிகளுக்கு உற்சாகம் தந்திருக்கும் என்றே நினைக்க தோன்றுகிறது, பெரும்பாலும்
சினிமா, நாடகம், பாட்டு பற்றியே அதிக பேசப்படும் கல்லுரி நாட்களில் இதுபோல் நடக்கும்
நிகழ்வு நல்ல மாறுதலை தரக்கூடியது ஆகும்.
இவற்றை குறிபிட்டே ஆகவேண்டும்
7 மாவட்டங்கள் (நாகை, தஞ்சை, திருச்சி, புதுகோட்டை, சிவகங்கை,
திண்டுகள், மதுரை), 61 இடங்கள், பூம்புகார் தொடங்கி மதுரை வரை 315km பயணம் செய்து மொத்தம் 131
வகை பறவைகளை பார்த்து குழுவாக பதிவு செய்திருப்பது மிக சிறந்த
செயலாகவே கருதப்படுகிறது. பயண வழி Map இணைத்து உள்ளது
நமக்கு சுலபமாக தெரிந்து கொள்ள வழிவகுக்கும்.
இந்த பயணத்தில் மைனா-Myna-(64%), பனை உழவரான்-Asian Palm Swift(49%), கரிச்சான் குருவி-Black Drongo(44%), உண்ணிக் கொக்கு-Cattle Egret(43%), பச்சைக்கிளி-Rose Ringed Parakeet(41%) போன்றவை மிக அதிக எண்ணிக்கையில் இருந்ததாக
குறிபிட்டுள்ளார்கள்.
பறவை பார்த்தவர்களின் கட்டுரைகள் படங்களுடன் வெளியிட்டிருப்பது
அவர்களுக்கு மேலும் உற்ச்சாகம் தரும். நிறை பேர் முதன்முதலில் கலந்துகொண்டு
அவர்களின் பறவை பட்டியல், படங்கள் என்று முழுமையான தொகுப்பாக உள்ளது பொங்கல் பறவை
கணக்கெடுப்பு.
மூன்றாவது ஆண்டாக நடைபெற்ற பொங்கல் கணக்கெடுப்பில் 178பேர் கலந்துகொண்டு, 346
பறவை வகைகளை பார்த்து பதிவு
செய்துள்ளார்கள். வருடம் வருடம் இந்த எண்ணிக்கை உயர்ந்து வருவது மகிழ்ச்சியை
தருகிறது.
தமிழகத்தில் ஏறக்குறைய 525
பறவை வகைகள் இதுவரை பதிவுசெய்திருகிறார்கள்
அதில் 346 பறவை வககைகளை நான்கு நாட்களில் பார்த்திருப்பது
ஆச்சரியத்தை தருகிற செய்தியாகும்.
அதிக எண்ணிகையில் வழங்கிய Top5 மாவட்டங்கள் :
கோயம்புத்தூர், புதுகோட்டை, காஞ்சிபுரம்,
தஞ்சாவூர், திருவண்ணாமலை.
Top 10 உள்ளநாட்டு பறவைகள் (Resident Birds)
Sl. No.
|
Common Name
|
Percentage occurrence
|
|
1
|
வீட்டு காகம் House Crow
|
54%
|
|
2
|
மைனா Common
Myna
|
53%
|
|
3
|
கரிச்சான் Black
Drongo
|
45%
|
|
4
|
அண்டங்காக்கை Large-billed
Crow
|
41%
|
|
5
|
மடையான் Indian
Pond-Heron
|
39%
|
|
7
|
வென்மார்பு மீன்கொத்தி White-throated
Kingfisher
|
33%
|
|
8
|
உழவரான் Asian
Palm-Swift
|
33%
|
|
9
|
புள்ளி புறா Spotted
Dove
|
31%
|
|
10
|
பச்சைக்கிளி
Rose-ringed
Parakeet
|
31%
|
Western Yellow Wagtail by Arvind |
Top 10 வலசை பறவைகள் (Migrant Birds)
Sl. No.
|
Common
name
|
Percentage
occurrence
|
|
1
|
தகைவிலான் Barn
Swallow
|
31%
|
|
2
|
நீல வால் பஞ்சுருட்டான் Blue-tailed
Bee-eater
|
25%
|
|
3
|
கதிர்குருவி Blyth's
Reed-Warbler
|
21%
|
|
4
|
சூறைக் குருவி Rosy
Starling
|
13%
|
|
5
|
சாதா உள்ளான் Common
Sandpiper
|
12%
|
|
6
|
பொறி உள்ளான் Wood
Sandpiper
|
12%
|
|
7
|
மீசை ஆலா Whiskered
Tern
|
10%
|
|
8
|
மஞ்சள் வாலாட்டி Western
Yellow Wagtail
|
9%
|
|
9
|
கரும்சாம்பல் வாலாட்டி Grey
Wagtail
|
9%
|
|
10
|
பழுப்பு கீச்சான் Brown
Shrike
|
9%
|
Top 10 தனிநபர்கள் பறவை பார்த்தல் (individual)
Name
|
No. of Lists
|
Selvaganesh K
|
90
|
Kamalanathan
A
|
88
|
Panchapakesan
Jeganathan
|
86
|
Kalaimani
Ayuthavel
|
74
|
Murugesh
Natesan
|
60
|
Ganeshwar S V
|
59
|
Shanmugam
Kalidass
|
59
|
Surendhar
Boobalan
|
56
|
Aravind
Amirtharaj
|
50
|
Priyatharsini
Rajendran
|
41
|
தமிழ்நாட்டில் உள்ள பறவைகளின் நிலையை மிக
அழகாக, நேர்த்தியாக அட்டவணை மூலம் பிரித்து தந்திருக்கும் இந்த தகவல் பெட்டகம்
நிச்சயம் எதிர்காலத்தில் மிக பயனுள்ளதாக இருக்கும் என்பது மட்டும் நிதர்சனம். பொங்கல்
பறவை கணக்கெடுப்பு பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள மற்றும் தரவிறக்கம்
செய்துகொள்வதற்கு PBC-2017
இந்தமுறை சில மருத்தவ காரனங்களக்காக
முடியாமல் போனது அடுத்த முறை என்னுடைய பங்களிப்பும் இருக்கவேண்டும் என்று
இப்பொழுதே முடிவுசெய்து விட்டேன்.........
அருமையாக இதை ஆரம்பித்து, முடித்து
கொடுத்திருக்கும் திரு.பா.ஜெகன்நாதன் அவர்களுக்கு மிக்க நன்றி.
-செழியன்
Wonderful growth in Bird lists and lessons to children on online recording endemic species. Devika
ReplyDelete