உயிர் இதழ் வெளியீடு |
உயிர் இதழ் தொடர்ந்து தனது அறிமுகத்தை பரவலாக்கி
கொண்டே வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று சூழியல் எழுத்தாளர்
திரு.நக்கீரன், உயிர் இதழை புத்ககக் கண்காட்சியில் வெளியிட்டார் இதழை மேடையில்
பெற்றுக்கொண்டேன்.
வெள்ளிக்கிழமை மாலைபொழுது, புத்தகக்கண்காட்சியில்
சூழியலாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தனர். பேச்சாளர்களாக
திரு.நக்கீரன், திரு.நரசிம்மன், திரு.முருகவேல், திரு பகத்சிங்
இவர்களுடன் திரு.சண்முகானந்தம், திரு.வள்ளியப்பன், திரு.வினோத்குமார்
மற்றும் அடியேனும். என் அழைப்பை ஏற்று வந்திருந்த திரு.மாசிலாமணி, திரு.அரவிந்த் இன்னும் நிறைய பேர்களுடன் கருத்தரங்கம்
தொடங்கியது.
ஒருவாரம் முன்பு சண்முகானந்தம் சார் என்னிடம்
உயிர் இதழை நக்கீரன் அவர்கள் வெளியிட
நீங்கள் பெற்றுக் கொள்கிறீர்கள்
என்று சொன்னார். சூழியல் பக்கம் சில
வருடங்கள் முன்பே கவனம் செலுத்த ஆரம்பித்து உள்ளதால் அதில் முழுகி நீச்சல் அடித்த
மனிதர்களை சந்தித்து வருகிறேன். அதபோல் புத்தக
கண்காட்சியிலும் நடந்தது.
புத்தக கண்காட்சி அலுவலகத்தில் நக்கீரன் சாரிடம்
சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன். பிறகு உயிர் இதழ் பற்றிய
உள்ளடக்கம், படங்கள் போன்றவை நன்றாக உள்ளதாக தெரிவித்தார். பேச்சின் இடையில்
பெரும்பாலும் சென்னைக்கு வந்தால் அன்று இரவே கிளம்பிவிடுவேன். ஆனால் இன்று தங்கி நாளை
செல்வதாக தீர்மானித்துள்ளேன் என்றார். இரவில் சென்றால் தலைவலி
வருவதாக தெரிவித்தார்.
நா.வினோத்குமார், இந்து தமிழ் நாளிதழில்
தொடராக எழுதிய “வான் மண் பெண்” புத்தகத்தை அரங்கில்
கொடுத்தார். மிக சிறப்பான புத்தகம் என்பதில் மாற்றுக் கருத்துக்களே
இல்லை என்று சொல்லலாம். புத்தகத்தை பற்றி தனி
கட்டுரையே எழுதலாம்.
சூழியல் தொடர்பான கருத்தரங்கம் என்பதால் மேடையில்
சூழியல் நூல்கள், இதழ் அறிமுகங்கள் நடப்பது சிறந்த தொடக்கம் ஆகும். மேடையில் இரண்டு நூல்கள், உயிர் இதழ் அறிமுகப்படுத்தப்பட்டது. நக்கீரன் அவர்கள் உயிர்
இதழை வெளியிட்டு அதனை மேடையில் பெற்றுக் கொண்டேன்.
திரு.வள்ளியப்பன் |
திரு.நக்கீரன் |
திரு.முருகவேல் |
திரு.நரசிம்மன் |
திரு.பகத்சிங் |
- செழியன்.ஜா
lapwing2010@gmail.com
Very nice.
ReplyDelete