குழந்தைகளுக்கு பறவைகள் -1
-----------------------------------------------------
Picture- Wikipedia |
குட்டீஸ் மின் கம்பத்தில் சிட்டுக் குருவியை விட உருவில் சிறியதாக அமர்ந்து பாட்டுப் பாடிக் கொண்டு இருக்கும் இந்த பறவையைப் பார்த்து உள்ளீர்களா?..
என்னது இல்லையா ?......
என்ன நிறத்தில் இருக்கும் என்று சொன்னால்தானே எங்களுக்குத் தெரியும் .
ஆமாம் சொல்லாமல் விட்டேன்…...சரி சரி சொல்லிவிடுகிறேன்
வால் அடியில், இறக்கையில் வெள்ளை நிறத்தில் திட்டு போன்று இருக்கும். இறக்கையை அசைக்கும்பெழுது வெள்ளை நிறம் நன்றாகத் தெரியும்…
நீங்கள் பார்க்கும்பொழுது வெள்ளை திட்டுகளைப் பார்த்துவிடுங்கள்… சரியா?
திட்டுபோன்று என்றால் என்ன ?...... அதை முதலில் சொல்லுங்கள்
உங்கள் உள்ளங்கையில் கருப்பு நிறத்தில் சிறிய வட்டமாக வரைந்து கொண்டால் பார்ப்பதற்கு எப்படித் தெரியும்
பெரிய கையில் சிறிய புள்ளிபோன்று இருக்கும்…
அதேதான் அதைத் திட்டு என்றும் சொல்லலாம்..
இப்போது புரியுது புரியுது..…. அடுத்து சொல்லுங்க….
நமக்குப் பிடித்த இடம் எது?
வீடுதான் எங்களுக்குப் பிடிக்கும்
சரியாக சொன்னீர்கள் குட்டீஸ்
அதேபோல்
புதர்கள்தான் இந்த பறவைக்குப் பிடித்த இடமாம்... அதனால் புதர் சிட்டு என்று பெயர் வைத்துவிட்டார்கள்.
பூச்சிகள் என்றால் கொள்ளை பிரியமாம் புதர் சிட்டுக்கு ..
பூச்சிகள் நம்மைக் கடிக்காமல் இருக்க வேண்டுமென்றால் புதர் சிட்டும் நம்முடன் இருக்க வேண்டும்……..
சரிதானே குட்டீஸ்
உங்கள் வீட்டு அருகில் உள்ள புதர்களிலும் இந்த பறவை விளையாடிக் கொண்டு இருக்கும் உங்களைப் போல்….ஜாலியாக போய் பாருங்கள்.
காணப்படும் இடங்கள்- புதர், வயல்வெளிகள், புதர் அருகில் உள்ள மின் கம்பம் போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள்…..
No comments:
Post a Comment