Tuesday, 22 April 2014

CROWS In Your Garden



பறவைகளை பார்க்க நாம் வேறு எங்கும் போக வேண்டாம் , ஆரம்பத்தில் நம்மை சுற்றி வந்து போகும் பறவைகளை பார்த்து இனம் கண்டுகொண்டபிறகு வெளியே சென்று பறவை பார்க்கும் பழக்கத்தை வளர்த்து கொள்ளலாம்.

பொதுவாக பறவைகள் என்றவுடன்  கிளி, பலவண்ணத்தில் இருக்கும் பறவைகள், வெளிநாட்டு பறவைகள் இவைகள்தான் நம் நினைவுக்கு வருகிறது ஆனால் நம்மை சுற்றி இருக்கும் காகம் கூட பறவை தான்.

காகத்தை நாம் பார்ப்பதும் ,கவனிப்பதும் கிடையாது .முதலில் காகத்தை பார்க்க ஆரம்பியுங்கள். 

என் வீட்டு தோட்டத்தில் நிறைய காகங்கள் வந்து போகிறது ஆனால் எதுவும் கூடு கட்டவில்லை , இரண்டு ஜோடி கிளிகள் கூடு கட்டி விளையாடுகிறது ,நிறைய அணில்கள் , மைனா , தவுட்டு குருவி , சிட்டு குருவி, அவ்வபோது புறா , சில நேரம் பாம்புகளும் வந்து போகிறது, இரவில் ஆந்தைகளும் வருகிறது , மொத்தத்தில் ஒரு தோட்டம் இருந்தால் பல உயிரினங்கள் வாழ வழி செய்கிறது.

காகத்தை நாம் கவனிப்பதே காலையில் வீட்டில் கத்தினால் விருந்தாளிகள் யாரோ வர போகிறார்கள் என்று , அப்போதுதான் நாம் காகத்தை கவனிப்போம் அல்லது சாமிக்கு படைத்து விட்டு காகத்துக்கு சோறு வைக்கவேண்டும் என்று காகத்தை தேடுவோம,

 மற்ற நேரதில் அவை எங்கு இருக்கு என்றே நமக்கு தெரியாது , மற்ற நேரதில் அதுக்கு யார் சோறு வைப்பார்கள் என்றும் நினைபதில்லை அல்லது இன்று ஒரு நாள் உணவு வைத்தால் போதும் மீதி நேரம் காகத்திற்கு பசிக்காது என்று நினைத்து விடுகிறோமோ ? 


காகத்தை,நேரம் கிடைக்கும் போதெல்லாம் கவனியுங்கள் அவை மட்டுமே , நம் விருந்தாளிகள் வீட்டுக்கு வருவதை தெரியபடுத்தியது , காகத்தை பார்த்தே வளர்ந்தார்கள் நம் முன்னோர்கள் . 

படைக்கும்பொழுது மட்டும் இல்லாமல் மற்ற நேரத்திலும் அவற்றுக்கு உணவு கொடுங்கள் நாய் மட்டும் நன்றி உள்ளது இல்லை , காகத்துக்கும் உணவு கொடுத்து பாருங்கள் , ஒரு நாள் நீங்கள் வீட்டில் இல்லை என்றாலும் உங்களை தேடும், உங்கள் வீட்டில் முன் அமர்ந்து.......... 

Tuesday, 18 March 2014

OSTRICH



நெருப்பு கோழி அல்லது தீக்கோழி என்று அழைக்கப்படும் இந்த பறவை தான் உலகிலேயே மிக பெரியது .

செங்கழுத்து ,கருங்கழுது , நீலக்கழுது என்று மூன்று வகை உண்டு .

தீக்கோழிக்கும் ஒட்டகத்திற்கும் சில ஒற்றுமை உண்டு இரண்டுமே பாலைவனச் சூழலைத் தாங்கி கொள்ளும் ஆற்றல் படைத்தவை .கண்களிலும் இமைகளிலும் ஒற்றுமை உண்டு .

மூளையை விட கண்கள் மிக பெரியதாக உள்ள ஒரே உயிரினம் தீக்கோழி தான் .


தீக்கோழியின் முட்டை நீளம் 19 செ.மீ , விட்டம் 15 செ.மீ , ஒரு முட்டை 20 கோழி முட்டைக்கு சமம் .


தீக்கோழியின் இறைச்சியில் ப்ரோடீன் அதிகமாக உள்ளது .கொழுப்பு குறைவாக உள்ளது


 ..

Tuesday, 11 March 2014

Vandalur Zoo -Chennai,Tamilnadu



அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா (சென்னை,தமிழ்நாடு )


கிளி , குருவி , காகம் ,பாம்பு ,ஆடு இப்படி சில ஜீவராசிகளை நம் அன்றாட வாழ்கையில் பார்த்து விடுகிறோம் , ஆனால்  சிங்கம், புலி, மான் , ஒட்டக சிவிங்கி , கரடி, முதலைகள் ,வெளிநாட்டு பறவைகள் இவைகளை பார்க்க வேண்டும் என்றால் , அவற்றின் பிரம்மாண்ட உடம்பை  பார்த்து ரசிக்கவேண்டும் என்றால் எல்லோரும் காடுகளுக்கு சென்று தான் பார்க்க வேண்டும் ஆனால் முடியாது , டிஸ்கவரி போன்ற சேனல்களில் பாப்போம், இருந்தாலும் நேரில் பார்க்கும் பரவசம் என்பது சுத்தமாக இருக்காது அதனால் அதை அனுபவிக்க இருக்கவே இருக்கிறது சரணாலயங்கள் .

இந்தியாவில் நிறைய சரணாலயங்கள் உள்ளது. தமிழ் நாட்டில் உள்ள மிக பெரிய சரணாலயம் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா , எல்லோருக்கும் இன்னும் தெரிவது போல் சொலவேண்டும் என்றால் வண்டலூர் ZOO .

பொது மக்கள் பார்வைக்காக 1985வருடம் திறந்து வைக்கபட்டது . 1490 ஹெக்டர் பரப்பளவு கொண்டதாக உள்ளது ..


நுழைவாயில் ரொம்ப அருமையா , ரம்மியமாக உள்ளது. பிளாஸ்டிக் கவர் ,சாப்பாடு எடுத்து செல்ல அனுமதி இல்லை . ஒவ்வொரு பொருளையும் செக்கப்  செய்கிறார்கள். இந்த செக்கப் நல்ல மாறுதலை உண்டுபண்ணுகிறது அதனால் ZOO முழுவதும் சுத்தமாக இருப்பதை பார்க்கமுடிகிறது .




மூன்றுவிதமாக நாம் ZOOவை சுற்றி பார்க்கலாம் :

1. Battery Car
2.  Bicycle
3.  by Foot

வயதானவர்கள் Battery Carல் சுற்றி பார்க்கலாம்.

வேகமாக பார்க்கவேண்டும் என்றால் Bicycleலில் சுற்றி பார்க்கலாம்.

ஆனால் ரசித்து ,அனுபவித்து ,பறவைகளுடனும் ,மிருகங்களுடனும் பேசி , விளையாடி பார்க்கவேண்டும் என்றால் நடந்து பார்ப்பது தான் மிகச் சிறந்தது .

Lion Safari போகவேண்டுமா? அதற்கும் வழி உண்டு. அவர்களே Vanஇல் அழைத்து     செல்கிறார்கள் . 

Lion Safari Vehicle :


Adult (above 12 years)
:
Rs. 30/-
Children (3 to 12 years)
:
Rs. 10/-
Wheel Chair

Rs. 25/-






உள்ளே சென்று இடது பக்கம் திரும்பினால் பறவைகள் நம்மை வரவேற்கிறது ,அப்படியே பார்த்துக்கொண்டே சென்றால் கரடி , சிங்கம் ,புலி, வெள்ளை புலி ,சிறுத்தை , பாம்பு , முதலைகள் , யானைகள் , ஒட்டகசிவிங்கி, வரிசையாக வருகிறது 
.
சிங்கம் , புலி  ரொம்ப துரத்தில் உள்ளதால் பார்க்கமுடியவில்லை ,ஆனால் வெள்ளை புலியை ஈஸியாக பார்க்கலாம், ஐந்து வெள்ளை புலி உள்ளது.

எங்கு பார்த்தாலும் தண்ணிர் தொட்டி இருப்பதால் தண்ணிர் பிரச்சனை சுத்தமாக இல்லை .
மரங்கள் அடர்த்தியாக உள்ளதால் நிழலுக்கும் பஞ்சமில்லை .

சுற்றி வருவதற்க்கு போடப்பட்டுள்ள சாலை நெடுஞ்சாலை போல் அழகாக உள்ளது 

உள்ளேயே ஆவின் பூத் மற்றும் சின்ன கடைகளும் உண்டு அனால் விலை தான் அதிகம் ,ஆவின் விலை ஒரே மாதிரியாகத்தான் உள்ளது .

 Mammals
 Birds
 Reptiles

மேலே உள்ள  உயிரினத்தை பற்றி தெரிந்தது கொள்ளவேண்டும் என்றால் பெயர் மேல் கிளிக் பண்ணுங்கள் .







FOOD CYCLE.


Entrance Fee
Adults (above 12 years)
:
Rs. 30/-
Children (5 to 12 years)
:
Rs. 10/-
Below 5 years
:
Entry Free
Still Camera
:
Rs. 25/-
Handy Cam
:
Rs. 150/-


ZOO MAP



Vehicle Parking Charges :


Bus/Lorry
:
Rs. 75/-
Car/Van/Jeep
:
Rs. 20/-
Bike
:
Rs. 10/-
Cycle
:
Rs. 2/-


மொத்தத்தில் ஒரு புதிய அனுபவமாக இருக்கும் . ஒரு முறை போய் வாருங்கள் ...

சென்னை to வண்டலூர் நேரடியாக பஸ் வசதி உள்ளது .

www.aazoopark.in