Saturday, 24 May 2014

Brid Man of India - 4



 இந்தியாவின் பறவை மனிதன்- 4

             - சிதம்பரம் ரவிசந்திரன் 
 

சலீம் அலிக்கு மோட்டார் சைக்கிள் என்றால் கொள்ளை பிரியம் இருந்தது. சுவிடன் நாட்டுக்கு ஒரு பறவையியல் போயிருந்தபோதுகூட தான் ஒரு BMW மோட்டார் சைக்கிளை சொந்தமாக வைதிருக்க முடியவில்லையே என்று தன் மனைவியிடம் கூறி வருந்தப்பட்டிருக்கிறார் .

பறவைகளைப் பற்றிய தான் படித்ததை அங்கு வரும் குழந்தைகளுக்கு சொல்லவதில் சலீம் இன்பம் அடைந்தார்.ஆனாலும் வெகு நாட்களாக அவருக்கு தான் இன்னும் முழுமியாடையவில்லை என்று மனக்குறை இருந்துகொண்டே இருந்தது. இரண்டு ஆண்டுகளே prince of Whales India மியூசியத்தில் வேலை பார்த்த சலீம் அலி சோர்வு அடைந்தார்.தனது பதவியைத் துறந்தார்.

பறவையில் பற்றி முறையாக கற்க வேண்டும் என்ற உந்துதல் அவரை பெர்லின் பல்கலைகழகத்திற்கு அழைத்துச்சென்றது. Prince of Whales India மியூசியத்தில் சலீம் ஆராயிந்து வந்த ஸ்டான்போர்ட் என்ற ஜெர்மானியருடய சேகரிப்புகள் மூலம் அவருடைய நட்பு சலீமிற்கு கிடைத்தது. அவர் மூலம் சலீம் அலி பெர்லின் சென்றார்.
அங்கு பறவைகளை பகுத்தறிந்து தரம் பிரிக்கும் டாக்சானமி மாணவராக சலீம் சேர்ந்தார்.

பெர்லினில் இருந்தபோது சலீம் அங்கு இருந்த இந்தியர்களை சந்திக்க நேர்ந்தது. இந்திய விடுதலை பற்றிய உணர்வை வெளிநாடுகளில் வாழ்ந்த இந்தியர்களுக்கும், வெளிநாட்டவர்களுக்கு இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இழைக்கும் அநீதிகள் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தியவரான செண்பகராமன் பிள்ளையும் சலீம் அலி சந்தித்தார். இந்த சென்பகாராமன் பிள்ளைதான் நேதாஜியின் படைபிரிவில் கப்பற்படையின் கேப்டனாக இருந்தார் என்பதும், முதல் உலக போரின் போது எம்ட்டன் என்ற உலகப்புகழ் பெற்ற ஜெர்மனியின் நீர்மூழ்கிக்கப்லின் துணைக் கேப்டனாகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடதக்கது.

Stresemann Stanford. மனிதாபிமானியும், அறிஞருமாக இருந்த Stresemann, இந்தோநேஷியாவில் பறவைகளைப் பற்றி கற்றுவந்த பெர்னார்டு ரெஷ், உலகப் புகழ்பெற்ற உயிரியல் அறிஞர் ஏனஸ மேயர், ஆஸ்கார் ஆழ்ந்த ஹைன்த் போன்றோர் சலீம் அலியுடைய நண்பர்களும், வழிகாட்டிகளாகவும், ஆசான்களாகவும் ஆயினர். துர்நாற்றம் வீசும் பரிசோதனைக்கூட்டங்களில் இருந்து டாக்சானமியில் ஆழ்ந்த அறிவு பெற்றார். சிறிய தவறுகளுக்கும் மிகப் மோசமான தண்டனைகள் கிடைக்கும் என்ற பகுத்தறிவு ஒன்றும் இல்லாத எந்த வசதியும் இல்லாத ஏழைக்குடும்பப் பின்னணியில் இருந்து வந்த சலீம் அலிக்கு பெர்லின் தந்த அனுபவங்கள் மறக்க முடியாததாக அமைந்தது.

பறவைகள் பற்றிய அறிவியல் பிரிவில் மிக முக்கிய பாடங்களான பறவைகளுக்கு வளையம் இடுதல், பட்டை கட்டுதல் Bird Ring , Bird Banding ஆகிய இரண்டையும் சலீம் அலி கற்றுக்கொண்டிருந்தது ஜெர்மனியில் இருந்துதான்.

பறவைகள் எங்கல்லாம் பறந்துபோகிறது என்பதைப் பற்றியறிய இந்தச் செயல் பறவை ஆராய்ச்சியாளர்களுக்கு பெரிய அளவில் பயன்படும். பறவைகளைப் பிடித்து அவைகளுடைய காலில் உலோகத்திலோ அல்லது பிளாஸ்ட்டிக்காளோ ஆன வளையத்தை போடும் முறைக்கு Bird Ringing என்று பெயர்.

வளையம் காலில்  மாட்டப்பட்ட தேதியும், முகவரியும் வலயத்திற்குள் எழுதபட்டிருக்கும். பறவையை யாராவது பிடித்தால் வளையத்தைத் திருப்பி அனுப்பவேண்டும் என்பதே சர்வதேச சட்டம் ஆகும்.சட்டம் இருந்தாலும், அதைப் பின்பற்றுபரும், கடைபிடிப்பவரும் இருக்கவேண்டும் அல்லவா? ஜெர்மானியர்கள் இதற்கும் ஒரு தீர்வு கண்டுபிடித்தார்கள். வடகடலில் எலிகோ சதுப்புநில பகுதிக்கு பறவைகள் வந்து தங்குவதற்கேற்றவாறு ஒரு சரணாலயமாக மாற்றினார்கள். 

அடர்ந்த செடிகளையும் ,மரங்களையும்  வளர்த்து,குளங்களை உருவாக்கி,அந்தப் பகுதியை பறவையியல் பகுதியாக மாறினார்கள். அங்கு வரும் பறவைகளைப் பிடித்து கன்னாடிகூடுகளுக்குள் அடைத்து வைத்து அவற்றின் கால்களில் வளையங்களைப் போட்டு பறக்கவிட்டு விடுவார்கள். இதோடு முதல் கட்டம் நிறைவு பெறும். அந்தப் பறவையை யாராவது பிடித்து வளையத்தை மட்டும் திருப்பி அனுப்பும்போதுதான் அடுத்த கட்டம் ஆரம்பமாகும். வலையங்கள் இட்டு பாதுகாக்கும் பணி ஒருபுறம் நடந்துக்கொண்டிருக்கும் அதே சமயம் பறவைகளை பொறி வைத்து சாகடிக்கும் செயலும் மற்றறொரு புறம் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

1930ல் பெர்லினில் இருந்து இந்தியாவுக்கு திரும்பிய சலீம் Prince of Whales மியூசியத்தில் நிதி பற்றாக்குறை காரணமாக விரிவுரையாளர் பதவி எடுக்கப்பட்டுவிட்டதால் மும்பையில் கடலோர கிராமமான kihim வசிக்கத் தொடங்கினார். கடலோர கிராம வாசம், இந்தியப் பறவைகள் பற்றிய ஆய்வில் ஒரு விலை மதிக்க முடியாத பொக்கிஷத்தை உலகிற்குத் தந்தது எனலாம். அந்த கடலோர்ரக் கிராம வாசம் சலீம் அலிக்கு தூக்கணாங்குருவியைப் (Weaver bird ) பற்றி விரிவான ஆய்வுகளுக்கு  வழிவகுத்துக் கொடுத்தது.

இந்த ஆராய்ச்சிகள் தொடங்கியதே ஒரு சுவாரசியமான விஷயமாக இருந்தது. குத்து செடிகள் மண்டிக் கிடந்த ஒரு பகுதியின் வழியாக நடந்கும்போது, ஒரு தூக்கணாங்குருவியை அலி பார்த்தார். அந்த குருவி அவரிடம் ஏற்படுத்திய ஆர்வம் அதன் பிறகு ஏராளமான அந்தக் குருவிகளைப் பற்றி ஆய்வுகளில் ஈடுப்பட வைத்தது.

தூக்கணாங்குருவிகல் கூடு கட்டுவதை பார்த்து பிரம்மித்துப் போனார் சலீம் அலி. பெண் குருவி ,ஆண் குருவியை அதனுடைய வடிவ அழகை கொண்டு ஒரு போதும் தேர்ந்தெடுபதில்லை. கூடு கட்டும் சாமார்த்தியம்தான் கணவனாக வரபோகும் குருவிக்கு தேவையான தகுதி. கூடு, பெண் குருவிக்கு பிடித்தால் பெண் குருவி அதைக் கட்டிய ஆணை தன்னுடைய துணையாகக் கொள்ள விருப்பம் என்று தெரிவிக்கும்.

இதில் இன்னொரு அதிசயம் என்ன என்றால் ஆண் குருவிக்கு ஒரு பெண்டாட்டி போதாது நாலைந்தாவது வேண்டும். இதனால் மனைவி கிடைத்தபின்னும், அடுத்த கூடு கட்டுவதில் ஆண் குருவி எப்போதும் பிசியாகவே இருக்கும். தூக்கணாங்குருவிகளுடைய வாழ்கை முறைகள், உணவு முறைகள், இணை சேரும் விதம் இவைகளை பற்றி எல்லாம் kihimல் சலீம் வசித்தபோது கண்டறிந்தார். 
அவருடைய பிரபல நூலான . ‘The Book of Indian Birds’ இந்தியப் பறவைகளைப் பற்றிய புத்தகம் என்ற நூலை எழுத ஆரம்பித்ததும் இந்த சமயத்தில்தான் .


                                                             - பறவை வரும் 

Friday, 23 May 2014

Bird Man of India - 3




 இந்தியாவின் பறவை மனிதன்-3 

                - சிதம்பரம் ரவிசந்திரன்
 
                              மனிதனுக்கு சொந்தப்பெயரும்,குடும்பப்பெயரும் இருபதுபோல ஒவ்வொரு பறவைக்கும்,விலங்குக்கும் இரண்டு பெயர் இருக்கிறது. இந்தியாவில் நாட்டுக் காகம் என்றும், காட்டுக்காகம் என்றும் வேறுபட்ட இனங்கள் இருப்பதை பெர்லார்ட் சலீமுக்கு சொல்லிகொடுத்தார். பெர்லார்டை ஒரு தோழராக பார்த்த சலீம் அலி தானும் ஒரு பறவை ஆராய்ச்சியாளனாக ஆகவேண்டும் என்று இலட்சியத்தை மனதிற்குள் விதைதுக்கொண்டார்.

1914ல் சலீம் பர்மாவுக்கு போனார். சகோதரர் அக்தரும்,அவருடைய குடும்பமும் ரங்ககூனில் வசித்து வந்தார்கள். பர்மா வாசம் சந்தோஷமாக இருந்தபோதிலும் பறவை ஆராய்ச்சி அத்தனை திருப்தியாக சலீம்முக்கு இருக்கவில்லை. 

புத்தகங்களோ,பைனாக்குலரோ இல்லாமல் பறவைகளை பார்த்தார். பார்வை குறைவு உள்ள ஒருவர் கண்ணாடி அணியாமல் எழுத்துகளைப் பார்ப்பதுபோல் இருந்தது அது. பிற பறவை ஆராய்ச்சியாளர்களுடைய தொடர்பும்,Bombay Natural History societyயுடன் இருந்த தொடர்பு மட்டும்தான் சலீம் அலிக்கு உற்ற துணையாக இருந்தது .

 


பர்மா  செல்வத்திற்கு முன்பு 1913ல்  வகுப்புகளுக்கு சரிவர செல்ல முடியாமல் போனாலும்,பாம்பே பல்கலைகழகும் நடத்திய மெட்ரிகுலேஷன் தேர்வுகளில் ஒரு மாதிரியாக தேறினார்.1917ல் மாமா இறந்ததனால் சலீம் பம்பாய்க்கு திரும்பினார். தாதர் கல்லூரியில் அவர் வணிகவியல் படிக்கத் தொடங்கினார். செயின்ட் சேவியர் கல்லூரியிலும் அவர் விலங்கியல் பிரிவில் படிக்கத் தொடங்கினார். தாதர் கல்லூரியின் வணிகவியல் பாடங்கள் சலீமை நெருகிக்கொண்டிருந்தாலும், சலீம் விலங்கியல் படிபதற்காக சேவியர் கல்லூரிக்கு பரந்து கொண்டீருந்தார்.

காலைபோழுதுகள் தாதர் கலூரியில் வணிகவியல் படிப்பை முடித்து, மதியவேலைகள் சலீம் சேவியர் கலூரிக்கு விலங்கியல் படிபதற்காக பாய்ந்து சென்று கொண்டிருந்தார். சேவியர் கலூரியில் விலங்கியல் துரையின் தலைவராக இருந்த பிளாட்டருடைய பறவைகள் பற்றிய எல்லா நிபுணத்துவத்தையும் சலிமுக்கு அவர் ஒரு கார்பன் காப்பி எடுப்பதை போல பகிர்ந்தளித்தார்.

உறுதியான குறிக்கோள் எந்தத் தடைகளையும் தாண்டிச் செல்லும் என்று சொல்ல்வதுண்டு அல்லவா? அது சலீமுடைய விஷயத்தில் உண்மையானது. கடிதத்தால் வலிக்காத பறவைகள் போல இனிமையான பறவைப் பற்றிய பாடங்களை அவர் இதயத்தில் நிறைதுகொண்டார். பரவைகளூடைய குடும்பம் விவரங்கள், உடல் அமைப்புகள், வாழ்க்கை முறைகள், வெளித்தோற்றங்கள், சிறப்பியல்புகள் என்று எல்லாவற்றையும் கற்கத்தொடங்ககிய சலீம் ஒரு முழு பரவையாளராக மாறத்தொடங்கினார்.

1918 டிசம்பரில் இயற்கையை நேசிப்பவரும், சாதாரண குடும்ப வாழ்வை வாழ விரும்பும் பெண்மணியான தெஹினாவை சலீம் திருமணம் செய்துகொண்டார். இயற்கையையும், பறவைகளையும் நேசிக்கும் தெஹமி சலீமுக்கு நல்ல துணையாக வாழ்ந்தார். குடும்பத்தை நடத்த வேலை ஏதாவது வேண்டுமே? சலீம் வேலை தேடத் தொடங்கினார். Zoological survey of india இந்திய விலங்கியல் கழகத்தில் ஒரு பரவையாளார் வேலை காலியாக இருக்கிறது என்று கேள்விப்பட்டு சலீம் பெருமகிழ்ச்சி அடைந்தார்.

முறையான பல்கலைகழக பட்டம் எதுவும் அவருக்கு இல்லாததால் அவருக்கு அந்த வேலை கிடைக்கவில்லை. ஆணால் விதி சலீமுக்கு சாதகமாக இருந்தது. பிரின்ஸ் வேல்ஸ மியூசியத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இயற்கை வரலாற்றுப் பிரிவில் Bombay Natural History Societyயின் உறுபினராக இருந்த j.k ஸ்டான்போர்ட் சேகரித்து அனுப்பிய specimenகளை ஆராயும் பனி சலீமுக்கு கிடைத்தது. 


                                                                        - பறவை பறக்கும்  

 

Thursday, 22 May 2014

Bird Man of India - 2



இந்தியாவின் பறவை மனிதன்-2

                                    - சிதம்பரம் ரவிசந்திரன் 

நாம் இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் பார்த்த இந்தியாவின் பறவை மனிதன் உலக புகழ் பெற்ற பறவை ஆரய்சியாளாரான டாகடர் .சலீம் அலி தான் அந்த மனிதர் .

நவம்பர் ம் நாளில் மும்பையில் கேத்வாடியில்தான் அந்த பறவை மனிதரின் பிறப்பு நிகழ்ந்தது .தந்தை மொய்சுதின் ,ஜீனத் என்பதுதான் தாய் பெயர் . நான்கு சகோதர்களும் , நான்கு சகோதரிகளும் கொண்ட குடும்பத்தில் வளர விதி சலீமைஅனுமதிக்கவில்லை . அவருக்கு ஒரு வயது இருக்கும்போது தந்தையும் , மூன்று வயதாக இருக்கும்போது தாயும்  மறைந்தார்கள் . 

மாமாவான அம்ருதின் தய்ப்ஜியுடந்தான் அதன் பின் சலீம்முடைய பிற்கால வாழ்கை . விதி சில சமயங்களில் சில மந்திர செயல்களை செய்வது உண்டு ,சலிம்முடைய வாழ்விலும் அவ்வாறே நடந்தது .காரணம் மாமாவுக்கு குழந்தைகள் யாரும் இல்லாமல் இருந்தது .சலீம் உட்பட ஒன்பது சகோதர் சகோதரிகளை தன் சொந்தக் குழந்தைகளைப் போல மாமாவும் ,மாமியும் வளர்த்தார்கள் .மாமா ஒரு வேட்டையாடும் தொழில் புரிபவராக இருந்தார்.நவாப்களுக்காகவும், ராஜாக்களுக்காகவும் அவர் அடர்ந்த காடுகளில்வேட்டையாடினார்.

மூத்த சகோதரனான ஹமித் வேலை பார்த்த காட்டுப்பகுதியில் சலீம்  அவ்வபோது சென்று வந்தார். இயற்கை ஆராய்ச்சிக்கும், பறவை ஆராய்ச்சிக்கும் ஆரம்பம் இந்த பயணங்களில் நிகழ்ந்தது என்றாலும் சலீமை பறவைகள் உலகின் பக்கம் திருப்பிவிட்டது வீட்டில் சமையல்காரனாக இருந்த நாணுதான். அவர் பழைய சாமான்களை வைத்து ஒரு கிளிக்கூடு கட்டித் தந்தார் . அதில் சலீம், தமையனுடைய மகனும் சேர்ந்து பறவைகளை வளர்க்க ஆரம்பித்தார்கள். இப்படிதான் சலீம் அலி பறவைகளை பற்றி ஆராய்ச்சியில் வீட்டில் முத்தல் பாடம் படிக்கத் தொடங்கினார் .

சிறுவனாக இருந்த சலீமை பறவை ஆய்வாளராக மாற்றியது மற்றொரு கதையும் இருபதாக சொல்ல்வதுண்டு . இன்றைய மும்பையில் நெரிசல் மிகுந்த செம்பூர் அன்று வனப்பகுதியாக இருந்தது வசந்தகால விடுமுறையின்போது மாமா குடும்பத்துடன் அங்கே செல்லவார் . ஆடு, மாடுகளுக்காக வைக்கோல் கட்டுகளை உயரத்தில் வைத்து இருப்பார்கள். அது ஒரு அற்புதம் நிறைந்த காட்சியாக இருந்தது சிறுவன் சலீமுக்கு. அதைவிட அதிசயம் சூரியன் அஸ்தமித்து மாலையாகும்போது, அந்தக் கூடுகளில் வந்து தங்கி இன்னிசை பாடும் குருவிகள். துப்பாக்கி சுடுவதில் திறமைசாலியான சலீம் குருவிகளை எப்போது பார்த்தாலும் துப்பாக்கிக்குண்டுகளுக்கு இரையாக்கி வந்தார். அதில் ஒரு குருவி சுட்டவுடன் நேராக வந்து அவர் கால்களைத் தொட்டு உயிருக்காகக் கெஞ்சிவது போல இருந்தது அவருக்கு. அது மிகவும் வித்தியாசமானதாகப் பட்டது சலீமுக்கு. தொண்டையில் ஒரு மஞ்சள் பட்டை சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்வதற்காக மாமாவிடம் போனார் சலீம்.

தனக்கு தெரியாததால் நேச்சுரல் ஹிஸ்ட்டரி சொசைட்டிக்குப் போகுமாறு மாமா சலிமைத் தூண்டினார். பிரிட்டிஷ்காரர்கள் தான் அன்று Natural History Society என்ற அந்த சங்கத்தை நடத்தி வந்தது. தயங்கித் தயங்கி அங்கு சென்ற சலீமை அங்கு கண்ட காட்சிகள் அசரவைத்தது. ஒன்றிரண்டு இல்லை. ஆயிரக்கணக்கில் பறவைகள் உயிரற்ற வடிவத்தில் சிறுவன் சலீம் பார்த்தார். ஆச்சரியப்பட்டார். சங்கத்தின் பொறுப்பில் இருந்த பெர்லார்ட் துரை அங்கு இருந்த எல்லா பறவைகளையும் சலீமுக்கு சுற்றி காட்டினார். கட்டை விரல் மட்டுமே அளவுள்ள Sun Bird முதல் ஒரு மனிதன் அளவுக்கு இருக்கும் கொக்குகள் வரை பாலிஷ் செய்து மெருகேற்றி வைத்திருந்த ஏராளமான பறவை    மாதிரிகளை சலீம் வியப்புடன் கண் கொட்டாமல் பார்த்தார்.

                                                                               - பறவை மீண்டும் வரும்