களத்தில் வரைந்து கொள்ளுதல் |
உங்க கல்யாண போட்டோவை காட்டுங்கள் என்றால்
சில பேர் அதெல்லாம் எங்க இருக்குனு
தெரியவில்லை அல்லது வீடு மாறும் பொழுது தொலைந்து விட்டது என்பார்கள்
இன்னும் சிலர் உடனே எடுத்து காண்பிப்பார்கள். ஒரு புகைப்படத்தை காண்பித்து நிறைய
விஷயங்களை பேசுவார்கள் இங்கே பாருங்கள் வலது ஓரம் நிற்பவர்தான் என் சித்தப்பா, ஏற்கனேவே
என்னுடைய பாட்டியை பற்றி சொல்லி இருக்கிறேனே இவர்தான் அவர் அத்தை பின் நிற்பவர்தான்
என் பாட்டி, தொண்ணூற்று ஆறு வயது வரை வாழ்ந்தார். இப்படி ஒத்த போட்டோவை கையில் வைத்து
கொண்டு அன்று நடந்த கல்யாணத்தை நேற்று காலை மண்டபத்தில் இருந்து வந்ததுபோல் பேசுவார்கள்.
இவை மனதுக்கும், வாழ்கை சூழலுக்கும் மிகவும் இனிமையானதாக இருக்கும். இவையெல்லாம்
கல்யாணத்தை பதிவு செய்து இன்றுவரை அந்த பொக்கிஷங்களை வைத்து இருப்பதால் மட்டுமே சாத்தியப்பட்டது.