இந்தியாவின் பறவை மனிதன் - 7
- சிதம்பரம் ரவிசந்திரன்
சலீம் அலியின் படைப்புகளிலேயே மிகவும் புகழ் பெற்ற புத்தகமான ‘ The Book of
Indian Birds விசிலர் எழுதிய ‘ Popular handbook of birds’ என்ற நூலின் பாணியில்
எழுதப்பட்டது. 1941ல் வெளிவந்த இந்தப் புத்தகம் உடனடியாக 46000 பிரதிகள்
விற்றுத் தீர்ந்ததுடன், பல இந்திய மொழிகளிலும், அயல் நாட்டு மொழிகளிலும்
மொழிபெயர்க்கப்பட்டது.
1964ல் சலீம் அலி எழுதத்தொடங்கி 1974ல் நிறைவு செய்த
பத்து தொகுதிகள் அடங்கிய, பறவைகள் பற்றி அறிவியல் உலகின் பைபிள் என்று
வர்ணிக்கப்படும் The Hand Book of birds of india and Pakistan என்ற புத்தகத்தின்
முதல் பதிப்பு இன்றும் போற்றி பாதுகாக்கப்படுகிறது. இந்த நூலின் இரண்டாம் பதிப்பு
அவருடைய மறைவுக்கு மற்றவர்களால் Edit செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
சலீம் அலி பல பிராந்திய பறவை ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார். அவை ‘The Birds kutch’, “Indian hill birds”
, ‘The birds of kerala’ , “The birds of Sikkim” , “Hand Book of Indian
Birds’ போன்றவை ஆகும்.
இது தவிர சலீம் அலி சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் “ Commom Birds”
என்ற நூலையும் எழுதியுள்ளார். இந்த நூல் இந்தியாவின் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு
பரவலாக வாசிக்கப்பட்ட ஒரு நூல் ஆகும்.
இந்தப் புத்தகம் தேசீய புத்தக நிறுவனத்தால்
National Book Trustடால் வெளியிட்டப்பட்டது. இது போன்ற விலை மலிவான பல நூல்களையும்
எழுதி வெளியிடப்பட்டு உள்ளது.
1985ல் சலீம் அவருடைய தன் வாழ்கை வரலாறு நூலான The Fall of Sparrow நூலை
எழுதினர். இந்தப் புத்தகத்திற்கு அலி இவ்வாறு பெயர் வைத்தது அவருடைய வாழ்வின்
திசையையே மாற்றிவிட்ட காட்டுக்குருவி என்ற மஞ்சள் நிற தொண்டைப்பகுதியுள்ள குருவி (
Yellow Throted Sparrow ) நினைவாக இருக்கலாம்.
பாம்பே இயற்கை வரலாறு நிறுவனத்தின் நெடுநோக்கு பார்வையைப் பற்றியும் அவர்
எழுதியுள்ளார்.அதில் அவர் பறவைகளை வேட்டையாடிக் கொன்ற காலம் சிறுது சிறிதாக மாறி
பறவைகளையும் பாதுகாக்கவேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டு வருவதைப்
பற்றி 1986ல் அந்த
நிறுவனத்தின் வெளியிட்டில் குறிப்பிட்டுள்ளார்.
சலீம் அலி எழுதிய எழுத்துக்கள் மற்றும் கடிதங்களின் தொகுப்பு அவருடைய கடைசி
மாணவர்களில் ஒருவரான தாரா காந்தி என்பவரால் தொகுத்து 2007ல்
வெளியிடப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் அரசு சலீம் அலியை தனது நாட்டின் ‘சுற்றுச்சூழல்
காவலனாக’மதித்துப் போற்றியது. Feburary 19, 1976 உலக ஐம்பது வருடகால
உழைப்பாலும்,பனியாலும் இந்திய மக்களிடையே இயற்கை வளங்களைப் போற்றி
பாதுகாக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களின் மனசாட்சியை தட்டி
எழுப்பி இந்தியாவின் எல்லையற்ற சுற்றுச்சூழலை பாதுகாக்கும் மனப்பக்குவத்தை தோற்றுவித்துள்ளிர்கள்.
பூக்களையும், சரனாளையங்களையும் இந்தியாவின் குறுக்கும், நெடுக்கும் அமைக்க
பெருமுயற்சி எடுத்துள்ளிர்கள். அரசாங்கத்தின் உயர்மட்டம் முதல் இந்தியாவின்
குக்கிராமத்தின் சாதாரண பாமரன்வரை இந்த உணர்வை ஏற்படுத்தியது உங்களின் பெரும்
சாதனையாகும். உங்களுடைய “The Book of Indian Birds” என்ற புத்தகமே ஒரு இயற்கை
வரலாற்றுப் பெட்டகம் ஆகும். உங்கள் இந்தியாவின் நீள, அகலங்களில் எல்லாம் நன்கு
அறியப்படும் ஒரு பெயர் ஆகும்.
பறவை ஆராய்ச்சிக்காகவே தன்னுடைய வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்த சலீம் அலி
என்ற மனிதகுலத்தின் மகத்தான உயிர்ப்பறவை 1987 ஜுன் 20ம் நாள்
சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பூமிக்கூட்டை நிரந்தரமாகப் பறந்துபோனது.
பறவைகள் ஆராய்ச்சியில் உலகத்தின் முன்னால் இந்தியாவை தலை நிமிர்ந்து நிற்கவைத்த
அந்த மாமனிதன் “இந்தியாவின் பறவை மனிதன் “ என்று போற்றப்படுவது பொருத்தமானதே.
ஒரு சிறிய காட்டுக் குருவியின் கண்களில் வீசிய கடைசி நிமிஷ ஒளிபட்டு தன்
வாழ்க்கையே அந்தப் பறவைகளின் உலகத்திற்காக ஒளி உமிழும் மெழுகாக மாற்றிக்கொண்ட அந்த
மனிதனை இந்தியர்களாகிய நாம் விடிகாலையில் நம்மை எழுப்பும் காக்கை குருவிகளில்
இருந்த இரவின் தனிமையில் இருக்கும்போதும் வானில் குரல் எழுப்பிச் செல்லும்
ராத்திரி பறவைகள் வரை ஒவ்வொரு பறவையைப் பார்க்கும்போதும் நன்றியோடு நினைத்துப்
பார்க்கவேண்டும்.
ஒவ்வொரு நவம்பர் 12ம் வாழ்வின் முக்கிய நாள் ஆகும். அன்றுதானே சலீம் அலி
என்ற மனிதப் பறவை சிறகுகள் விரித்து வலசை வரும் பறவை போல விண்ணுலகில் இருந்து
பூமிக்கு இறங்கி வந்தது.
- பறவை பறந்து விட்டது.