WOOD SANDPIPER |
குளிர்கால வலசைபறவைகள் இந்த நேரம் அதன் நாட்டிற்கு சென்று
கொண்டிருக்கும் என்ற நினைப்பில் இருந்தேன் அடையார் பாலத்தை கடக்கும் வரை. மிக நீள
அலகுடன் கருவால் மூக்கன் கண்ணில் தென்பட்டது இவை இங்கு என்ன செய்கிறது அதன்
நாட்டிற்கு செல்லாமல் என்ற கேள்வியை கேட்டுக்கொண்டு இன்னும் வேறு என்ன, என்ன வலசை
பறவைகள் அதன் நாட்டிற்கு செல்லாமல் சென்னையில் இருக்கிறது என்று அறிய நண்பர்கள்
மாசிலாமணி, ஷரன், சின்னப்பராஜ் ஆகியோருடன் வலசை செல்ல ஆரம்பித்துவிட்டேன்.