கோடைக் காலம், பசுமையைப் போக்கி வெண்மையைக் கொண்டு
வந்துவிடுகிறது. காப்புக்காடுகள் அதில் தப்பவில்லை. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி
அடுத்து உள்ள பூசிமலைக்குப்பம்
காப்புக்காட்டுக்குக் காலை 6
மணியளவில் சென்றபொழுது பசுமை இல்லா காட்டை
பார்க்க முடிந்தது.
Blue-faced malkoha |
பச்சை வாயன் (Blue-faced malkoha):
முதலில் வரவேற்ற பறவையாகும். கூச்ச சுபாவம் உடைய
இந்த பறவை மிக அருகிலிருந்தபொழுதும் சிறிதும் நகராமல் ஒரு சிறு செடியில்
விளையாடிக் கொண்டிருந்தது. முதன் முதலாக ராஜபாளையத்தில் இந்த பறவையைப்
பார்த்தபொழுது இலைகள் அடர்ந்த மரத்தில் நமக்கு தெரியாதவாறு இருந்தது. இருந்தாலும்
அங்கேயே ஒரு மணிநேரம் அமர்ந்து முடிந்த
அளவு பார்த்துவிட்ட நகர்ந்தோம். ஆனால் அப்படியே இங்கு தலைகீழ். இங்கும் நீண்ட
நேரம் அதன் அருகிலிருந்தே பார்த்து நகர்ந்தோம்.