Sunday, 16 April 2017

பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு-2017



பத்து வருடங்களுக்கு ஒரு முறை மக்களையும், நான்கு வருடங்களுக்கு ஒரு முறை புலிகளையும் கணக்கெடுக்கபடுகிறது இதை தவிர வேறு எந்த உயிரிணங்களுக்கு கணக்கெடுக்கப்படுகிறது?

Friday, 14 April 2017

முதுமலையில்



பெங்களூர், மைசூர், பந்திப்பூர், முதுமலை இந்த வழியாக மதியம் ஒரு மணியளவில் முதுமலையில் இருந்தேன். ஆரவாரம் அதிகம் இல்லை தனியார் வண்டிகளும் கானுலா அழைத்து செல்வதற்கு, வந்து இறங்கும் அனைவரையும் கூப்பிடுகிறார்கள். அரசும் அழைத்து செல்கிறது. இது போல் செல்லும் உலா நம்மால் பெரியதாக ஒன்றும் பார்க்க முடியாது என்றாலும் அங்கு வருபவர்களுக்கு இது மட்டுமே ஒரே வழி. 

பெரும்பாலும் இந்த கானுலா buffer Zone என்று சொல்லப்படுகிற இடத்தில்தான் நம்மை அழைத்து செல்கிறார்கள். Core Zone செல்லவேண்டும்மென்றால் அதற்கு முறையான அனுமதி பெற்று செல்லவேண்டும். பறவை பார்க்க உதகை செல்லும்பொழுது வழியில் தென்பட்டதால் நின்றுவிட்டேன்.

Sunday, 2 April 2017

கடிதம்



அன்புள்ள செழியன்,

நான் சமீபத்தில் 'பறவை நோக்குதல்' அறிமுக வகுப்பில் கலந்து கொள்ள நேர்ந்தது. எனது முதல் களப்பயிற்சியை Lalbagh-இல் நேற்று தான் முடித்தேன். 'பறவை நோக்குதல்' சம்பந்தமாக தெரிந்து கொள்வதற்காக வலைதளத்தில் தேடுகையில் தங்களுடைய தொடர் கட்டுரையை கண்டடைந்தேன். தெளிவாக, நேர்த்தியுடன் தாங்கள் எழுதியுள்ள கட்டுரைகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிக சிறப்பான பணியை தமிழில் முன்னெடுத்துள்ளீர்கள். தொடந்து தாங்கள் எழுதவிருக்கும் கட்டுரைகளை படிக்க ஆர்வமுடன் உள்ளேன்.

நன்றி,

இ.ஜனார்த்தனன்.

Wipro, Bengaluru.

Friday, 31 March 2017

பறவை நோக்குதல் -10 (பதிவு செய்தல்)



களத்தில் வரைந்து கொள்ளுதல்
உங்க கல்யாண போட்டோவை காட்டுங்கள் என்றால் சில பேர் அதெல்லாம் எங்க இருக்குனு  தெரியவில்லை அல்லது வீடு மாறும் பொழுது தொலைந்து விட்டது என்பார்கள் இன்னும் சிலர் உடனே எடுத்து காண்பிப்பார்கள். ஒரு புகைப்படத்தை காண்பித்து நிறைய விஷயங்களை பேசுவார்கள் இங்கே பாருங்கள் வலது ஓரம் நிற்பவர்தான் என் சித்தப்பா, ஏற்கனேவே என்னுடைய பாட்டியை பற்றி சொல்லி இருக்கிறேனே இவர்தான் அவர் அத்தை பின் நிற்பவர்தான் என் பாட்டி, தொண்ணூற்று ஆறு வயது வரை வாழ்ந்தார். இப்படி ஒத்த போட்டோவை கையில் வைத்து கொண்டு அன்று நடந்த கல்யாணத்தை நேற்று காலை மண்டபத்தில் இருந்து வந்ததுபோல் பேசுவார்கள். இவை மனதுக்கும், வாழ்கை சூழலுக்கும் மிகவும் இனிமையானதாக இருக்கும். இவையெல்லாம் கல்யாணத்தை பதிவு செய்து இன்றுவரை அந்த பொக்கிஷங்களை வைத்து இருப்பதால் மட்டுமே சாத்தியப்பட்டது. 

Friday, 24 March 2017

சென்னையில் சூறைக் குருவிகள் ( Rosy Starling)



தூரத்தில் ஆல  மற்றும் அரச மரம்
பத்து வருடமாக இங்கு போலிஸ் வேலையில்  இருக்கிறேன் ஆனால் இது போல் ஒரு முறையும் பார்த்ததில்லை மனைவி, பிள்ளைகள் மற்றும் தெரிந்தவர்கள் என்று அனைவரையும் அழைத்து வந்து காண்பித்துவிட்டேன் எல்லோரும் ஆச்சரியத்தில் மூழ்கிவிடுகிறார்கள் ஏன் என்னுடைய உயர் அதிகாரி இங்கு தான் நடைபயற்சி செய்வார் இவற்றை பார்த்துவிட்டு யாரும் இங்கு சத்தம் எழுப்ப கூடாது என்று சொல்லிவிட்டார் என்றால் பார்த்து கொள்ளுங்களேன் அந்த அளவுக்கு இந்த பறவைகள் இங்கு வசிக்கும் அனைவரையும் தன் பக்கம் இழுத்து கொண்டது என்றார்.

Monday, 20 March 2017

சிட்டு குருவிகள் தினம் - March 20



Chennai-Besant Nagar
மேல் இருந்து விழுந்த சிட்டு குருவியின் குஞ்சை எடுத்து மீண்டும் அதன் கூட்டில்  விடுவதற்கு பெரியவர்களை தேடிக்கொண்டிருந்தேன் கடைசியில் மாமா வந்தார் குட்டியை அதன் கூட்டில் விட்டு விடுங்கள் என்றேன் சரி என்று அதை எடுத்து கூட்டில் விடும்பொழுது பறவை குஞ்சுகள் கீழே விழுந்து விட்டால் அதன் தாய் மீண்டும் கூட்டில் சேர்க்காது அதனால் இந்த குஞ்சை கீழே தள்ளிவிடும் என்றார். அவை உண்மையா இல்லையா என்று அப்பொழுது தெரியாது மாமா சொன்னபடி மீண்டும் அவை கீழே விழுந்ததா என்றும் நினைவில் இல்லை. இது நடந்தது தொன்னூறு காலகட்டத்தில்.

Sunday, 19 March 2017

சூறைக் குருவிகளின் நடனம் (Rosy starling)


ஆயிரகணக்கான சூறைக் குருவிகள் சென்னை கிண்டியில் நடணம் ஆடும்பொழுது எடுக்கபட்ட வீடியோ.

-செழியன் 

lapwing2010@gmail.com





Tuesday, 28 February 2017

பறவை நோக்குதல்- 9 - Raptors



கருடன்-விக்கிபீடியா
இரைகொல்லிகள்(Raptors) என்றால் ? 

பறவை நோக்குதலில் இரைகொல்லிகள்(Birds of Prey) என்று அழைக்கப்படும் கழுகு, பருந்து, வல்லூறு, ராஜாளி, வைரி, பாறு கழுகுகள், ஆந்தை போன்ற பறவை வகைகளுக்கு என்று தனி பிரிவே உள்ளது. இவை அனைத்தையும் ராப்டர்ஸ் (இரைகொல்லிகள்) என்று பொது பெயரில் ஆங்கிலத்தில் அழைப்பதுண்டு. இவ்வகை பறவைகள் உணவுக்காக மற்ற விலங்குகளை கொன்று சாப்பிடும் பழக்கமுடையது (உதாரணம்: எலி, தவளை, பாம்பு, ஓணான், மீன், சிறு பறவை, பறவை குட்டிகள் போன்றவற்றை சாப்பிடும்). பறவை நோக்குதலில் இவ்வகை பறவைகளை தனித்து கவனிக்கப்படுகிறது. இரைகொல்லிகள் பறவைகளுக்கு என்றே நிறைய ஆங்கில புத்தகங்கள் தனியாக வெளிவந்துள்ளது.

இரைகொல்லிகள் பறவைகளை பார்ப்பதற்கென்றே நிறைய பறவை சங்கங்கள், தனி மனிதர்கள் உண்டு. இவ்வகை பறவைகளை தொடர்ச்சியாக பார்த்து அராய்ச்சி செய்வதற்கு உலகம் முழுவதும் நிறை அமைப்புகள் செயல்படுகிறது. பறவை நோக்குதலில் நாம் இவ்வகை பறவைகள் கண்டிப்பாக எதிர் கொள்வோம். காரணம், நாம் செல்லும் இடங்களில் பருந்து, வல்லூறு, வைரி போன்ற இரைகொல்லிகள் பறவைகளை காணமுடியம். அதனால் இவ்வகை பறவைகளை தெரிந்து கொண்டால்தான் நம்மால் சுலபமாக இனம் காண முடியும்.


Tuesday, 31 January 2017

பறவை நோக்குதல்- 8 (Birds Order - Family)

பறவை புத்தகங்களில் பறவைகள் மற்றும் அதன் தொடர் வகைகள் என்று விவரித்து எழுதியிருப்பார்கள். உதாரணம் Egret எடுத்து கொண்டால் உன்னிகொக்கு(Cattle Egret),சிறிய கொக்கு(Little Egret), நடுத்தர கொக்கு(Intermediate Egret), பெரிய கொக்கு(Large Egret) இதே போல் Heron எடுத்து கொண்டால் மடையான்(Pond Heron), இராகொக்கு(Night Heron), சாம்பல் நாரை(Grey Heron), செந்நாரை(Purple Heron) என்று அதன் தொடர்ச்சியை பார்க்க முடியும் ஆனால் பறவை நோக்குதல் என்ற இந்த தொடரில் பறவை வகைகள் தொடர்ச்சியாக இல்லமால் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாமல் இருப்பதுபோல் காணப்படும்.

காரணம் ஒன்றும் இல்லை. தொடர் எழுதும்பொழுது அந்த தலைப்புக்கு ஏற்ற பறவைகளை சொல்வதால் பறவைகளின் தொடர்ச்சி விடுபடுகிறது. 

ஆரம்பகாலத்தில் பறவைகளை பிடித்து அல்லது கொன்று பாடம் செய்து அதன்பின் ஆராய்ச்சி செய்து கட்டுரைகள் வரும். ஆனால் டிஜிட்டல் மயமான இப்பொழுது பறவைகள துல்லியமாக படம் எடுத்து அவற்றை பின் தொடர்ந்து, காட்டிலேயே தங்கி  கட்டுரைகளை வெளியிடுகிறார்கள். பறவைகளை கொல்வது முற்றிலும் இப்பொழுது இல்லை என்றே சொல்லலாம் எந்த பறவை ஆர்வலரும் பறவைகளை கொல்வது ஏற்றுகொள்ளகூடிய செயல் என்று சொல்லமாட்டார்கள்.