Monday, 25 December 2017

10th சென்னை பறவை பந்தயம்



பறவை பந்தயம் என்ற வார்த்தை பறவைகளை பந்தயம் விடுவார்கள் என்ற அளவிலேயே இரண்டு வருடம் முன்பு தெரிந்து இருந்தது. ஆனால் அதற்கு நேர் எதிர் செயல் என்று தெரிந்து பிறகு இந்த ஆண்டு அதில் கலந்துகொள்வது என்ற முடிவால் தயாராகிவிட்டேன்.

Thursday, 14 December 2017

புத்தகம்- வேட்டைக்கார ஆந்தையின் தரிசனம்......



பறவை புத்தகங்கள் தமிழில் குறைவு என்பது எப்படி உண்மையோ அதேபோல் நிறைய புதியவர்கள் எழுத வந்து கொண்டிருப்பதும் உண்மையே. அப்படி ஒரு புதிய புத்தகத்தை சமிபத்தில் படிக்க நேர்ந்தது.

“வேட்டைக்கார ஆந்தையின் தரிசனம்” என்ற தலைப்பு, கபாலிடா என்பது போல் உள்ளது. பறவைகளை பார்ப்பது, அவற்றை தெரிந்து கொள்வது, விவாதிப்பது போல், பறவைகளின் வாழிட அழிப்பு அதனால் அவற்றின் எண்ணிக்கை குறைதல் அல்லது முழுவதும் அற்று போதல் போன்றவற்றை  பற்றி புத்தகத்தில் விரிவாக நா.வினோத் குமார் எழுதி உள்ளார். இந்து தமிழ் நாளிதழில் பணிபுரியும் வினோத், உயிர்மூச்சு பகுதியில் எழுதிய கட்டுரைகளை தொகுத்து, புத்தகமாக தந்துள்ளார்.

ஆரம்ப கட்டுரை கான மயில் மற்றும்  புத்தகத்தின் நடுவே ஒரு கானமயில் கட்டுரை உள்ளது. இரண்டு கட்டுரையும் எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்று கானமயிலை பற்றி தெரிந்து கொள்ளமுடிகிறது. அதற்கு முழுகாரணம் மனிதர்கள்தான் என்பது இதில் சோகமே. பறவைகளின் வாழிடங்களை அழிக்காதிர்கள் அப்படி அழிக்காமல் இருந்தால் பறவைகளே தன் வாழ்கையை பார்த்துகொள்ளும் என்று அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.

Thursday, 30 November 2017

கொட்டிகிடக்கும் பறவைகள்........



புதர்சிட்டு 
விவசாய நிலத்தின் ஒரு பகுதியில் காட்டு மைனா, சாதரண மைனா, சிறிது தூரத்தில்  வென்புருவ வாலாட்டி. இவை அனைத்தும் நிலத்தில் இரையை தேடிகொண்டிருந்தது. மறுபுறத்தில் விவசாயி, மாடுகளை கொண்டு நிலத்தை உழுது கொண்டிருந்தார். அவரும், மாடும், பறவைகள் பக்கம் செல்லும்பொழுது அவை நகர்ந்து செல்கிறதே தவிர அங்கிருந்து பறந்து செல்லவில்லை அனைத்தும் மனிதர்கள் அருகில் வாழ பழகி கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது ஏலகிரியில்.

நான்கு கிலோமீட்டர் செல்லவேண்டிய தூரம், பறவைகளை பார்த்து கொண்டே செல்வதற்கு வசதியாக நடந்து செல்வோம் என்று நண்பர் மாசிலாமணியுடன் நடந்தேன். நான்கு கிலோமீட்டர் என்பது இலக்கு இல்லை, போக வேண்டிய தூரம் என்பதால், சென்றோம். என்ன அதிகமாக பறவைகள் இருந்துவிட போகிறது என்ற நினைப்பு ஆரம்பத்தில் வந்தது என்னமோ நிஜம். ஆனால் கொட்டிகிடக்கிறது பறவைகள் ஏலகிரி மலை மேல்.

Friday, 27 October 2017

Tamil Birders Meet- 2017 – Yelagiri


பச்சை சிட்டு 
ஜோலார்பேட்டையில், ஒரு ரிசர்வ் பேங்க் உள்ளது என்று தெரியாமல் இருந்துவிட்டேன். இரயில் நிலையத்தில் அருகில் இருந்த டீ கடையில் அதிகாலை நான்கு நாற்பத்தைந்து மணிக்கு(4.45am) டீ குடித்துவிட்டு, பத்து ரூபாய் காயினை கொடுத்தபொழுது, செல்லாது என்று டீ கடைகாரர் சொல்லிவிட்டார்.

ஒரு கணம் ஆடிபோய்விட்டேன், என்ன அண்ணே அதிகாலையில் இப்படி செல்லாது என்று சொன்னால் என்ன செய்ய முடியும். போனமுறை தமிழ்ப் பறவைகள் சந்திப்புக்கு செல்லும்பொழுதுதான் 1000, 500 ரூபாய் செல்லாது என்று சொல்லிவிட்டார்கள், இதை நம்பி ஊரு விட்டு, வேறு ஊருக்கு வந்து விட்டோம் என்ற சொன்னால், அதெல்லாம் இல்லை இந்த ஊரில் யாரும் வாங்கமாட்டார்கள் என்று அழுத்தமாக திரும்ப திரும்ப சொன்னார். வேறு வழி இல்லாமல்  ரூபாய் நோட்டை கொடுத்து நகர்ந்தோம்.

ஏலகிரி மலை மேல் சென்று, அங்கு எந்த ரூபாயும் செல்லாது என்று சொல்லிவிட்டால் என்ற பயம் வேற வந்துவிட்டது. இனி ரூபாய் நோட்டு தொடர்பாக எந்தவித அறிவிப்போம் இந்த இரண்டு நாளில் வந்தால் அதை சரி செய்கிற முழு பொறுப்பும் ஜெகன்நாதன் சார் தான் என்று முடிவு செய்தே, பஸ்க்கு நின்றிருந்தேன் நண்பர் மாசிலாமணியுடன்.

Monday, 16 October 2017

பறவை நோக்குதல்- 13 (Night Watching)

பகலில் மட்டுமே பறவைகள் பார்ப்பது ஆரம்பத்தில் சரி என்றாலும் அதற்கு அடுத்து இரவிலும் பறவைகளை பார்க்க செல்லவேண்டும். இரவில் தூங்கிகொண்டிருக்கும்  பறவையை பார்த்து  என்ன செய்வது? என்று உடனே கேள்வி கேட்பீர்கள். உங்கள் கேள்வி முற்றிலும் இப்பொழுது சரி என்றாலும், கட்டுரை முடிவில் உங்கள் கேள்விக்கு பதில் கிடைத்து விடும். பறவை உலகில் ஒரு சில பறவைகளுக்கு இரவு உலகம் என்று ஒன்று உண்டு. அவற்றை பற்றி பார்ப்போம்.

மனிதர்கள், பகலில் உழைத்து-இரவில் தூங்குவது பொதுவான ஒன்று. பறவைகளும் அப்படிதான் என்றாலும் சில பறவைகள் இதில் இருந்து விதிவிலக்கு உண்டு. பகலில் உறங்கி இரவில் இரை தேட கிளம்பும்.

இரவு பறவை என்பது ஒன்று உண்டா? என்றால்

உண்டு.

Saturday, 30 September 2017

பறவை நோக்குதல்- 12 (Feeding Methods)

பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் பாடல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
பறவைகள் பலவிதமா ? என்றால்

ஆமாம் என்றே சொல்லத் தோன்றுகிறது அவற்றை நுணுக்கமாக அணுகும்பொழுது

நாம் உணவை கீழே அல்லது நாற்காலியில் அமர்ந்து அல்லது சில நேரம் நின்று கொண்டே சாப்பிடுவோம். ஆனால் பறவைகள்? இதென்ன கேள்வி மரத்தில் இருந்துதான் என்ற பதில் சட்டென்று வரும் அவை சரியென்றாலும் பாதியளவு மட்டுமே உண்மை.

பறவை நோக்குதலில் நாம் ஆரம்பத்தில் மேம்போக்காக பார்த்துக்கொண்டே செல்வோம் மாதங்கள் செல்ல செல்ல நமது பறவை பார்த்தலில் நுனுக்கங்களுடன் பார்க்க வேண்டும். அப்படி பறவை பார்க்கும்பொழுது கீழ் இருக்கும் பறவை வகைகளின் பழக்க வழக்கங்களை பற்றி தெரிந்துகொண்டால் உங்கள் பறவை அறிவு வளர்ந்து கொண்டே செல்லும்.

மயில் 

Saturday, 22 July 2017

Book- Birds of Coimbatore



Birds of coimbatore bookகை பற்றி எழுதிய  கட்டுரை தமிழ் இந்து நாளிதழில் வெளிவந்துள்ளது.

LINK

Article on Birds of coimbatore Book  



Wednesday, 28 June 2017

Tracing the Calls



Adyar-Sangeetha Hotel
மே மாதம் வந்தால் ஒரு பறவையின் குரலை கேட்டுக்கொண்டே வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறேன். இந்த வருடமும் அதே போல் குரல் காதில் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. ஒரு நாள் சாஸ்திரி பவன் சாலையில் செல்லும்பொழுது ஓசை கேட்டது ஆனால் ஓசை வந்த இடத்தை நோக்கி பார்க்க கூட முடியவில்லை அந்த அளவுக்கு வண்டிகள் சாலையில் அதிகம் ஓடியது. உடனே முடிவு செய்தேன் நகரத்தில் வேறு எங்கெல்லாம் இவற்றின் குரல்கள் கேட்க முடிகிறது மற்றும் அந்த பறவையை பார்க்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை குரலை நோக்கிச் செல்வோம், முடிந்தால் பறவையை அல்லது மரங்களை படம் பிடிப்போம் என்று வண்டியை சென்னை நகரம் முழுவதும் ஓட்டி வலம் வந்தேன். எந்த பறவை என்று சொல்லவில்லையே என்பீர்கள் வேறு யாரு நம்ம கறுப்பன் தான், அதாங்க குயில்.

காகத்தை திசை மாற்றி அதன் கூட்டில் முட்டை இடுவதே பெரும் சவாலாக வருடா வருடம்  குயில் செய்துவருகிறது. மனிதனுக்கும்-காகத்திற்கும் உள்ள வித்தியாசம், நம் குட்டி இவை இல்லை என்று தெரிந்த பிறகு காகங்கள் தன் கூட்டில் இருந்து குயில் குட்டியை  வருடா வருடம் வெளியே துரத்தும். இருந்தாலும் அடுத்த வருடம் குயிலின் முட்டையை போற்றி பாதுகாக்கம். நாம் அரசியில்வாதிகளிடம் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வாக்குறுதிகளை நம்பி, தெரிந்தே ஏமாறுவது போல் காகங்கள்  வருடம் வருடம் தெரியாமல் ஏமார்ந்து கொண்டிருக்கும். நாம் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை, காகங்கள் வருடம் ஒரு முறை ஏமாறும், வித்தியாசம் அவ்வளவுதான்.

Tuesday, 20 June 2017

இயற்கையை அழித்தால் ?



(இயற்கையை அழித்தால் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை ஜூன் மாத பாவையர் மலர் இதழில் வெளிவந்துள்ளது.)

உலகில் உயிரினங்கள் தோன்றியபொழுது மனிதன் தோன்றவில்லை, டைனோசர்கள் வாழ்ந்த காலத்திலும் மனிதன் இல்லை. லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ஸாக வருவேன் என்ற வசனத்திற்கு ஏற்ப மனிதன் லேட்டாக பூமியில் தோன்றினான். ஆனால் லேட்டஸ்ஸாக அனைத்து உயிரினங்களையும் தன் காலடியில் கொண்டுவந்துவிட்டான். இன்று மனிதன் நினைத்தால் ஒரே வாரத்தில் உலகில் உள்ள உயிரினங்களை அனைத்தும் கொன்றுவிட முடியும் அந்த அளவுக்கு சர்வ வல்லமை படைத்த நிலைக்கு உயர்ந்துவிட்டான். 

யானை ஊருக்குள் புகுந்தது, சிறுத்தை மனிதனை கொன்றது போன்ற செய்தியை நாம் அடிக்கடி பத்திரிக்கையில் படிப்போம். உடனே யானை மற்றும் சிறுத்தையை கொல்ல, விரட்ட முயற்சிப்போம். இவற்றை நேரடியாக பார்க்கும் பொழுது, சரி என்ற முடிவுக்கு வருவோம். ஆனால் அப்படி வருவதற்கு முன்பு நம் வீட்டுக்குள் நடக்கும் ஒரு நிகழ்வை பார்த்தபிறகு முடிவு செய்வோம்.

Thursday, 8 June 2017

பறவை நோக்குதல்- 11: (Wetland Birds)




பறவைகளை அதிகமாக ஒரே இடத்தில் பார்ப்பதற்கு சிறந்த வழி நீர் நிலை அருகில் பார்க்க செல்வதே அதிகம் சுற்றி அலையை வேண்டியதில்லை. ஆரம்பத்தில் சிறுவர்களை பறவை பார்க்க அழைத்து செல்லும்பொழுது நீர் நிலை அருகில் அழைத்து சென்றால் மகிழ்வார்கள்.
நீர் புலப் பறவைகள் என்றால்?

Monday, 29 May 2017

இயற்கை நடை - IIT Madras



ENTRANCE
630 ஏக்கர் இடம் என்று ஒருவர் சொல்லும்பொழுது பெரியதாக தெரிந்தாலும் அங்கு நடந்து சுற்றும்பொழுது மட்டுமே அதன் பிரம்மாண்டத்தை உணரமுடியும். இந்தியாவில், தமிழ்நாட்டை தவிர வேறு ஒரு மாநிலத்தில் இருந்து ஒருவரை நேரடியாக இங்கு அழைத்து வந்து வெளியே அனுப்பாமல் இரண்டு நாள் தங்கவைத்து, பிறகு அவரிடம் நீங்கள் இருப்பது தென்மாநிலங்களிலேயே உள்ள  மிக பெரிய நகரத்தில் இருக்கிறீர்கள் அதுவும் அமைச்சர்கள் வாழும் பகுதியில் என்று சொன்னால், அவர் நம்மை ஒரு மாதிரியாக பார்ப்பதற்கு வாய்ப்புண்டு. ஆமாம் சென்னை IITயில் நீங்கள் புதியவர்கள் என்றால் இப்படியே உணர்வீர்கள்.


Friday, 5 May 2017

Rosy Starling in MADRAS MUSINGS magazine



My article on Rosy starling is published in MADRAS MUSINGS this month edition, the only magazine covering activities in and around Chennai. The article has come in the first page. I thank MNS Vice President Mr. Vijaya Kumar for getting the article published in the magazine.

Rosy Starling பற்றி எழுதிய கட்டுரை, மிக நீண்ட பயணத்தில் இருக்கும் பத்திரிக்கையான MADRAS MUSINGS ல் இந்த மாதம் பிரசுரித்துள்ளார்கள். மிக அருமையாக முதல் பக்கத்தில் வந்திருக்கிறது. நீண்ட கால பத்திரிக்கையில் வந்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. MNS Vice President Mr.VIJAYA KUMAR சாருக்கு மிக்க நன்றி இவற்றுக்கு உறுதுணையாக இருந்தவர்.


LINK:



- chezheyan

lapwing2010@gmail.com


Sunday, 30 April 2017

இன்னும் ஐரோப்பாவிற்கு செல்லவில்லை



WOOD SANDPIPER
குளிர்கால வலசைபறவைகள் இந்த நேரம் அதன் நாட்டிற்கு சென்று கொண்டிருக்கும் என்ற நினைப்பில் இருந்தேன் அடையார் பாலத்தை கடக்கும் வரை. மிக நீள அலகுடன் கருவால் மூக்கன் கண்ணில் தென்பட்டது இவை இங்கு என்ன செய்கிறது அதன் நாட்டிற்கு செல்லாமல் என்ற கேள்வியை கேட்டுக்கொண்டு இன்னும் வேறு என்ன, என்ன வலசை பறவைகள் அதன் நாட்டிற்கு செல்லாமல் சென்னையில் இருக்கிறது என்று அறிய நண்பர்கள் மாசிலாமணி, ஷரன், சின்னப்பராஜ் ஆகியோருடன் வலசை செல்ல ஆரம்பித்துவிட்டேன்.

Saturday, 29 April 2017

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் வலைத்தளத்தில்



தியடோர் பாஸ்கரன் அவர்களின் சுற்றுச்சூழல் எழுத்துகளை பற்றி, எழுதிய கட்டுரை  BIRDS SHADOW வில் 2016ஆம் ஆண்டு பார்த்தோம். அந்த கட்டுரையை ஜெயமோகன் அவர்களுக்கு அனுப்பியதில் அதை அவர் தனது வலைபக்கத்தில் “தியடோர் பாஸ்கரன்-ஒரு கடிதம்” என்ற பெயரில் பிரசுரித்துள்ளார்.



இணைப்பு:

Wednesday, 26 April 2017

பட்டாம்பூச்சிகள்- (Butterflies)




இன்றைய நாட்களில் எந்த பறவை, பூச்சிகளை வேண்டுமென்றாலும் கேமராவில் படம் எடுத்து சேகரிக்கலாம். ஐம்பது, நூறு வருடங்கள் முன்பு நிலைமை அப்படி இல்லை என்று அனைவரும் அறிவோம். அதே 200 வருடம் முன்பு? அப்பொழுது வாழ்ந்த தஞ்சை மன்னர், தன் நூலகத்தில் வரையப்பட்ட பட்டாம்பூச்சி படங்களை  வைத்திருந்தார். தஞ்சை சரோபாஜி மன்னர் பார்த்த பட்டாம்பூச்சி புத்தகம் இன்று சென்னை அருங்காட்சியத்தில் இருக்கிறது.

மிக தெளிவாக வரையப்பட்ட படங்கள். பொக்கிஷம் என்று சொல்வோமே அது போல் பாதுகாகப்படுகிறது. இரண்டு முறை பட்டாம்பூச்சி பார்பதற்கு சென்றிருந்தாலும், பட்டாம்பூச்சி பற்றி அதிகம் தெரியாது, இருந்தாலும் சேகரித்து வைத்துகொண்டால் தெரிந்த பிறகு பயன்படும் என்று மொபைலில படம் எடுத்துவிட்டேன். 

Monday, 24 April 2017

அடையார் நதி



மணப்பாக்கம் நீர்
 
புதிய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சன் டிவி கனக்க்ஷன் வாங்கியாச்சா என்று ஊர்களில் கேட்பார்கள், கேபிள் இணைப்பு கொடுத்தாச்சா என்பதை இப்படி கேட்பது வழக்கம் அதே போல் தி.நகர் என்றால் சரவணா ஸ்டோர் போனிற்களா, அடையார் என்றால் ஆலமரம் மறந்து ஆனந்தபவன் நினைவுக்கு வரும் அளவுக்கு நம் நினைவுகளை விளம்பரங்களே க்கரமித்து கொண்டுள்ளது. இதில் அடையார் ஆனந்தபவனை தாண்டி அங்கு ஓடும் நதியை பற்றி ஒருவர் படங்கள் வழியாக பேசியிருந்தால் அதை பார்க்காமல் இருக்க முடியுமா?

Friday, 21 April 2017

THE HINDU tamil



ஏப்ரல் மாதம் முதல் வாரம் தோறும் வெள்ளிகிழமை பயண கட்டுரைகளை ஹிந்து தமிழ் நாளிதழில் வெளியிடுகிறார்கள். அதில் இந்த வாரம் வடுவூர் பறவைகள் சரணாலயத்திற்க்கு சென்று வந்ததை பற்றி நான் எழுதிய கட்டுரை வந்துள்ளது. படித்து பாருங்கள் உங்களுடைய கருத்துகளை மின்னஞ்சல் மூலம் தெரிவித்தால் அவை அடுத்த கட்டுரைக்கு பயன்படும்.  








-செழியன்

lapwing2010@gmail.com