Sunday, 31 March 2019

செல்போன் கோபுரங்கள் அழிக்காத சென்னை சிட்டுக்குருவிகள்


இந்தியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவை வகைகள் இருந்தாலும், சில ஆண்டுகளாக சிட்டுக்குருவியைப் பற்றி மட்டுமே அதிகம் பேசப்படுகிறது. குறிப்பாக செல்போன் கதிர்வீச்சால் சிட்டுக்குருவி அழிந்து வருகின்றன என்ற ஆதாரமற்ற தகவல் வேகமாகப் பரவிவருகிறது. உண்மையில் சிட்டுக்குருவியைவிட உருவில் பெரிய பல பறவை வகைகள் இந்தியாவில் வாழ்ந்து வருகின்றன.
சென்னை போன்ற மாநகரங்களில்கூட அந்த பறவைகளைப் பார்க்கலாம். அவை எல்லாம் வாழும்போது சிட்டுக்குருவி மட்டும் அழிந்து வருகிறது என்று கூறப்படுவது உண்மையா என்பதை ஆய்வு நடத்தித் தெரிந்துகொள்ள முற்பட்டோம். அந்த ஆய்வின் முடிவில் சென்னையிலிருந்து சிட்டுக்குருவிகள் அழிந்துவிட்டன அல்லது வெளியேறிவிட்டன என்ற தகவலில் உண்மை இல்லை என்று தெரிந்துகொண்டோம்.

Thursday, 10 January 2019

கெட்டுஅள்ளி-தருமபுரி (Dharmapuri)


தென்னை மரத்திலிருந்த இரைகொல்லி பறவையான வல்லூறு, நீண்ட நேரம் அமர்ந்து இருந்ததைப் பள்ளி மாணவ-மாணவிகளும் நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஒரு மாணவர், தினமும் பள்ளி விட்டுச் செல்லும்பொழுது இந்த பறவையைப் பார்ப்பதாகவும் ஆனால் பெயர் தெரியாது என்று சொன்னார். அவர்களுக்கு அவைதான்  முதல் பறவை பார்த்தால் ஆகும். தருமபுரி மாவட்டத்தில் உள்ள கெட்டுஅள்ளி ஊரில் இருக்கும் அரசு உயர் நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுடன் பறவைகள் பார்த்தபொழுது பேசப்பட்ட வார்த்தைகள் ஆகும்.

Saturday, 20 October 2018

நாமக் கோழியும், குஞ்சுகளும்


Photo by Marianne Taylor, UK,
இருபது வருடங்களுக்கு முன்பு வெளி வந்த “The Life of Birds” by Sir. David Attenborough-வின் ஆவணப் படத்தில் நாமக் கோழி தன் குஞ்சுகளைக் கொல்லுவதைப் பலர் பார்த்திருக்கலாம் அல்லது கேள்விப் பட்டிருக்கலாம். "உணவு பற்றாத காலத்தில் வளருவதற்குச் சக்தியற்ற  குஞ்சுகளைப் பெற்றோர் நாமக்கோழிகள் கொன்று விடுகின்றன" என்று அப்போது நம்பப்பட்டது. "நாமக் கோழி உண்மையாகத் தன் குஞ்சுகளைக் கொல்லுமா?" என்ற கேள்விக்கு விடையை அறிவியல் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் பார்ப்போமா?

Saturday, 1 September 2018

செஞ்சிக்கு வாங்க... சின்னானைப் பாருங்க..

மஞ்சள் தொண்டை சின்னான் (Yellow-throated bulbul), தென் இந்தியாவில் மட்டுமே காணப்படக்கூடிய பறவை. தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத் தொடர்ச்சி மலை, செஞ்சி மலை, வல்லிமலை (வேலூர்), ஜவ்வாது மலை போன்ற பகுதிகளில் பார்க்க முடியும்.

‘இங்கெல்லாம் சென்றால், பார்க்க முடிகிற பறவையா மஞ்சள் தொண்டை சின்னான்?’ என்றால், சிறிது சிரமமே! காரணம் மலை அடிவாரத்தில் பறவையைப் பார்க்க முடிவதில்லை. மலைகளின் மேல் காணப்படக்கூடிய பறவை என்பதால், மலை மேல் சென்று அமைதியாக அமர்ந்துகொண்டால், சிறிது நேரத்தில் பார்க்க முடிகிறது. செஞ்சியில் இதுபோலவே செய்தோம்.

Friday, 24 August 2018

உயிர் இதழ் அறிமுகம் - சூழியலாளர் நக்கீரன்

உயிர் இதழ் வெளியீடு 

உயிர் இதழ் தொடர்ந்து தனது அறிமுகத்தை பரவலாக்கி கொண்டே வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று சூழியல் எழுத்தாளர் திரு.நக்கீரன், உயிர் இதழை புத்ககக் கண்காட்சியில் வெளியிட்டார் இதழை மேடையில் பெற்றுக்கொண்டேன்.

வெள்ளிக்கிழமை மாலைபொழுது, புத்தகக்கண்காட்சியில் சூழியலாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தனர். பேச்சாளர்களாக திரு.நக்கீரன், திரு.நரசிம்மன், திரு.முருகவேல், திரு பகத்சிங் இவர்களுடன் திரு.சண்முகானந்தம், திரு.வள்ளியப்பன், திரு.வினோத்குமார் மற்றும் அடியேனும். என் அழைப்பை ஏற்று வந்திருந்த திரு.மாசிலாமணி, திரு.அரவிந்த்  இன்னும் நிறைய பேர்களுடன் கருத்தரங்கம் தொடங்கியது.

Tuesday, 14 August 2018

அவல நிலையில் பறவைகள்....


வாழிட அழிப்பால், எந்த அளவுக்கு பறவைகளை பாதிக்கிறது என்பதை நிறைய கட்டுரைகளில் படித்துள்ளேன். ஆனால் அந்த அவல  நிலையை நேரடியாக பார்த்தபிறகு, பறவைகளை பிச்சை எடுக்க விட்டுள்ளார்கள் இன்றய நாகரீக மனிதர்கள்.

ஒரு காலைப்பொழுது, நீர்நிலைகளை தவிர்த்து, கட்டடங்கள் நிறைந்து இருக்கும் வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதிகளில் ஒரு செயலுக்காக விஜயகுமார் சார், உமேஷ் சார், சுடர் மற்றும் புவன்யா, யுவன் மற்றும் அடியேனும் சென்றபொழுது, வண்டியை அங்கிருந்த காலிமனை  முன்பு நிறுத்திவிட்டு நடக்க தொடங்கியத்தில், சிறிது தூரத்தில் கோழி ஒன்று,  வீட்டின் முன்பு மேய்வது போல் இருந்தது. உற்று நோக்கியத்தில் அவை தாழைக்கோழி(Moorhen) என்று தெரியவந்தது.

Friday, 3 August 2018

Humming Bird

Humming Bird by Sarguna Packiaraj
உலகத்தில் 330 வகை ஹம்மிங் பறவைகள் உண்டு. இவை வட அமெரிக்காவிலும், தென் அமெரிக்காவிலும் வாழ்கின்றன.  ஹம்மிங் பறவைகளில் ஐந்து சதவிகிதம் மெக்ஸிக்கோவின் வட பகுதியில் காணப்படுகின்றன. வட அமெரிக்காவில் 17 வகைகள்தான் உண்டு. இந்தப் பறவைகள் பறக்கும் போது சிறகுகள் "ஹம்" என்ற ஒலியை எழுப்புவதால் "Hummingbirds” என்ற பெயரைப் பெற்றுள்ளன.

Friday, 27 July 2018

Moth- Field Session



பறவைகளை பார்க்க சரணாலயங்கள், நீர் நிலைகள் நோக்கி, அதேபோல் புலி பார்க்க, முதுமலை, பந்திப்பூர் போன்ற இடங்களுக்கும் செல்ல வேண்டும். ஆனால் பூச்சிகளை நம் இடங்களுக்கே வரவைத்து  பார்க்கலாம்.  அப்படி ஒரு நிகழ்வு மெட்ராஸ் இயற்கை சங்கம்(Madras Naturalist’ Society) ஏற்பாடு செய்திருந்த “  விட்டில் பூச்சி பார்த்தல்” கள அமர்வுக்கு(Moth- Field Session) கலந்துகொண்டதில் நிறைய விஷங்களை தெரிந்துகொண்டேன்.

பறவைகள் போல் பூச்சிகள் அனைவரையும் கவருவதில்லை. ஆனால் பூச்சிகளை நிறைய பேர் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். பறவை விலங்குகள் போன்றே பூச்சிகளையும் கவனிக்க வேண்டும் என்று அழுத்தி சொல்கிறார்கள். ஆரம்பத்தில் நானும் பூச்சிகள் பக்கம் கவனம் செலுத்தியதில்லை. காரணம் மற்றவர்களுக்கு என்ன காரணமோ அதே தான் எனக்கும்.

Thursday, 5 July 2018

மலையேறும் மலைநாடன்


நீலகிரி, குன்னூர் மலைகளின் நடுவில், வாழ்கை மட்டும் இல்லாமல், மலைகள் மீது தீராத காதலும் கொண்டுள்ளதால் மலைநாடன் என்ற பெயர் இவருடன் இணைந்துகொண்டது. எழுத்தாளர்களுக்கு Pen Name என்று எப்படி உள்ளதோ, அதேபோல் இயற்கையாலர்களுக்கு Nature name என்று கூட இதனை சொல்லலாம். இயற்கையாலர்கள் Nature name ஒன்றை வைத்து கொள்ளவேண்டும்.

ஒரு காலைப்பொழுதில்  மலைநாடனை சந்தித்தபொழுது உற்சாகமாக வரவேற்றார். அவரிடம் பேசியதில் நிறைய தகவல்களை தெரிந்துகொள்ள முடிந்தது. குறிப்பாக மலைகள் தொடர்பாக ஒன்றுமே எனக்கு தெரியாது. இப்பொழுது கொஞ்சம் தெரியும் என்று சொல்லுவேன்.
 
மலைநாடனுக்கு, மலை ஏறுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளதால், எந்த ஊருக்கு சென்றாலும் அங்கு மலைகள் இருந்தால், ஏறிவிடுவதை பழக்கமாகவே கொண்டிருக்கிறார். எங்க ஊர் மலையை நான் ஏறவேண்டும் என்று பல வருடங்களாக நினைத்து கொண்டிருந்தபொழுது, பேச்சின் இடையில் சாதாரணமாக சொல்கிறார் உங்கள் ஊர் மலையும் ஏறியுள்ளேன் என்று. இன்னும் நான் ஏறவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.