Sunday, 2 September 2018
Saturday, 1 September 2018
செஞ்சிக்கு வாங்க... சின்னானைப் பாருங்க..
மஞ்சள் தொண்டை சின்னான் (Yellow-throated bulbul), தென் இந்தியாவில்
மட்டுமே காணப்படக்கூடிய பறவை. தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலை,
கிழக்குத் தொடர்ச்சி மலை, செஞ்சி மலை, வல்லிமலை (வேலூர்), ஜவ்வாது மலை
போன்ற பகுதிகளில் பார்க்க முடியும்.
‘இங்கெல்லாம் சென்றால், பார்க்க
முடிகிற பறவையா மஞ்சள் தொண்டை சின்னான்?’ என்றால், சிறிது சிரமமே! காரணம்
மலை அடிவாரத்தில் பறவையைப் பார்க்க முடிவதில்லை. மலைகளின் மேல்
காணப்படக்கூடிய பறவை என்பதால், மலை மேல் சென்று அமைதியாக அமர்ந்துகொண்டால்,
சிறிது நேரத்தில் பார்க்க முடிகிறது. செஞ்சியில் இதுபோலவே செய்தோம்.
Friday, 24 August 2018
உயிர் இதழ் அறிமுகம் - சூழியலாளர் நக்கீரன்
![]() |
| உயிர் இதழ் வெளியீடு |
உயிர் இதழ் தொடர்ந்து தனது அறிமுகத்தை பரவலாக்கி
கொண்டே வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று சூழியல் எழுத்தாளர்
திரு.நக்கீரன், உயிர் இதழை புத்ககக் கண்காட்சியில் வெளியிட்டார் இதழை மேடையில்
பெற்றுக்கொண்டேன்.
வெள்ளிக்கிழமை மாலைபொழுது, புத்தகக்கண்காட்சியில்
சூழியலாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தனர். பேச்சாளர்களாக
திரு.நக்கீரன், திரு.நரசிம்மன், திரு.முருகவேல், திரு பகத்சிங்
இவர்களுடன் திரு.சண்முகானந்தம், திரு.வள்ளியப்பன், திரு.வினோத்குமார்
மற்றும் அடியேனும். என் அழைப்பை ஏற்று வந்திருந்த திரு.மாசிலாமணி, திரு.அரவிந்த் இன்னும் நிறைய பேர்களுடன் கருத்தரங்கம்
தொடங்கியது.
Tuesday, 14 August 2018
அவல நிலையில் பறவைகள்....
வாழிட அழிப்பால், எந்த அளவுக்கு பறவைகளை
பாதிக்கிறது என்பதை நிறைய கட்டுரைகளில் படித்துள்ளேன். ஆனால் அந்த அவல நிலையை நேரடியாக பார்த்தபிறகு, பறவைகளை பிச்சை எடுக்க
விட்டுள்ளார்கள் இன்றய நாகரீக மனிதர்கள்.
ஒரு காலைப்பொழுது, நீர்நிலைகளை தவிர்த்து, கட்டடங்கள் நிறைந்து
இருக்கும் வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதிகளில் ஒரு செயலுக்காக விஜயகுமார் சார், உமேஷ் சார், சுடர் மற்றும் புவன்யா, யுவன் மற்றும் அடியேனும்
சென்றபொழுது, வண்டியை அங்கிருந்த
காலிமனை முன்பு நிறுத்திவிட்டு நடக்க
தொடங்கியத்தில், சிறிது தூரத்தில் கோழி
ஒன்று, வீட்டின் முன்பு மேய்வது போல் இருந்தது. உற்று நோக்கியத்தில் அவை
தாழைக்கோழி(Moorhen) என்று தெரியவந்தது.
Friday, 3 August 2018
Humming Bird
![]() |
| Humming Bird by Sarguna Packiaraj |
உலகத்தில் 330 வகை ஹம்மிங் பறவைகள் உண்டு. இவை வட அமெரிக்காவிலும், தென் அமெரிக்காவிலும் வாழ்கின்றன.
ஹம்மிங் பறவைகளில் ஐந்து சதவிகிதம் மெக்ஸிக்கோவின்
வட பகுதியில் காணப்படுகின்றன. வட அமெரிக்காவில் 17 வகைகள்தான் உண்டு. இந்தப் பறவைகள்
பறக்கும் போது சிறகுகள் "ஹம்" என்ற ஒலியை எழுப்புவதால் "Hummingbirds” என்ற பெயரைப் பெற்றுள்ளன.
Friday, 27 July 2018
Moth- Field Session
பறவைகளை பார்க்க சரணாலயங்கள், நீர் நிலைகள்
நோக்கி, அதேபோல் புலி பார்க்க, முதுமலை, பந்திப்பூர் போன்ற இடங்களுக்கும் செல்ல
வேண்டும். ஆனால் பூச்சிகளை நம் இடங்களுக்கே வரவைத்து பார்க்கலாம். அப்படி ஒரு நிகழ்வு மெட்ராஸ் இயற்கை சங்கம்(Madras Naturalist’ Society) ஏற்பாடு செய்திருந்த
“ விட்டில் பூச்சி பார்த்தல்” கள அமர்வுக்கு(Moth- Field Session) கலந்துகொண்டதில் நிறைய
விஷங்களை தெரிந்துகொண்டேன்.
பறவைகள் போல் பூச்சிகள் அனைவரையும் கவருவதில்லை.
ஆனால் பூச்சிகளை நிறைய பேர் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். பறவை விலங்குகள் போன்றே
பூச்சிகளையும் கவனிக்க வேண்டும் என்று அழுத்தி சொல்கிறார்கள். ஆரம்பத்தில் நானும்
பூச்சிகள் பக்கம் கவனம் செலுத்தியதில்லை. காரணம் மற்றவர்களுக்கு என்ன காரணமோ அதே
தான் எனக்கும்.
Thursday, 5 July 2018
மலையேறும் மலைநாடன்
நீலகிரி, குன்னூர்
மலைகளின் நடுவில், வாழ்கை மட்டும் இல்லாமல், மலைகள் மீது தீராத காதலும் கொண்டுள்ளதால்
மலைநாடன் என்ற பெயர் இவருடன் இணைந்துகொண்டது. எழுத்தாளர்களுக்கு Pen Name என்று எப்படி உள்ளதோ, அதேபோல்
இயற்கையாலர்களுக்கு Nature name என்று கூட இதனை
சொல்லலாம். இயற்கையாலர்கள் Nature name ஒன்றை வைத்து கொள்ளவேண்டும்.
ஒரு காலைப்பொழுதில்
மலைநாடனை சந்தித்தபொழுது உற்சாகமாக வரவேற்றார். அவரிடம் பேசியதில் நிறைய
தகவல்களை தெரிந்துகொள்ள முடிந்தது. குறிப்பாக மலைகள் தொடர்பாக ஒன்றுமே
எனக்கு தெரியாது. இப்பொழுது கொஞ்சம் தெரியும் என்று சொல்லுவேன்.
மலைநாடனுக்கு, மலை ஏறுவதில்
மிகுந்த ஆர்வம் உள்ளதால், எந்த ஊருக்கு சென்றாலும் அங்கு மலைகள் இருந்தால்,
ஏறிவிடுவதை பழக்கமாகவே கொண்டிருக்கிறார். எங்க ஊர் மலையை நான் ஏறவேண்டும் என்று
பல வருடங்களாக நினைத்து கொண்டிருந்தபொழுது, பேச்சின் இடையில் சாதாரணமாக
சொல்கிறார் உங்கள் ஊர் மலையும் ஏறியுள்ளேன் என்று. இன்னும் நான் ஏறவில்லை
என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
Saturday, 30 June 2018
ஏ.சண்முகானந்தம்- Wild Life Photographer
வன விலங்குகளை படம்
எடுப்பது என்பது ஒரு கலை. இந்த துறையில் எந்த அளவுக்கு ஒருவர் சாதிக்க முடியும்.
என்ன வாய்ப்புகள் உள்ளது. ஒருவர் முழுநேரமாக இதில் ஈடுபடலாமா? தமிழகத்தில் காட்டுயிர்
ஒளிப்படக்கலை(Wild Life Photography) பற்றி இந்த
துறையில் மிகுந்த அனுபவமும், நிறைய புத்தகங்களை எழுதியவரும், வனவிலங்குக்கு என்று
உயிர் என்ற பத்திரிக்கை நடத்தி வருபவர் திரு.ஏ.சண்முகானந்தம் அவரிடம் வைல்ட் லைப்
போட்டோகிராபி பற்றிய நேர்காணலில் அவர் கூறியதாவது.
1990ஆம் ஆண்டு கேமரா
பற்றிய ஓர் ஆண்டு பயிற்சியை முடித்து திருமண விழாக்களில் படங்கள் எடுத்து தொடங்கிய
என் பயணம், பிறகு எங்கள் வீட்டை சுற்றி இருந்த நீர் நிலைகளில் காணப்படும் பறவைகள்,
பூச்சிகளை படம் எடுக்க தொடங்கினேன். நாளடைவில் திருமண விழாக்களில் இருந்து
விலகி வனவிலங்குகளை போட்டோ எடுப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. தொடர்ந்து விலங்குகள், பறவைகள், பூச்சிக்கள் எடுபதற்க்கு
பல்வேறு காடுகளில் பயணம் செல்ல தொடங்கினேன்.
நான் தொடங்கிய தொன்னூறாம்
ஆண்டுகளில் இப்போது இருபதுபோல், டிஜிட்டல் முறையில் படம் எடுக்கும் தொழில்நுட்பம்
வரவில்லை. அதனால் பிலிம் ரோல் கொண்டே படங்களை எடுத்து வந்தேன்.
ஒவ்வொரு படமும் எடுத்து அவற்றை கழுவி பிரிண்ட் செய்து பார்த்தபிறகே அதன் தன்மை
தெரியும். சரியாக இல்லையென்றால் மீண்டும் படங்களை எடுக்க முடியாது அதனால் முதல்
முறையிலேயே அதிக கவனத்துடன் படங்களை எடுக்கவேண்டும். அதற்கு என்னுடையை ஒருவருட
பயிற்சியும், அதனை தொடர்ந்து புகைப்படகளை வல்லுனர்களுடன் ஏற்பட்ட நட்பும், அவர்கள்
கொடுத்த குறிப்புகளும் பயன்பட்டன.
Saturday, 5 May 2018
உயிர் இதழ்- அறிமுகக் கூட்டம்
உள்ளே நுழைந்த உடன்,
திரு.சண்முகானந்தம் சார் கைகொடுத்து வரவேற்றார். வலது புறத்தில் திரு.தியடோர் பாஸ்கரன் சார் நாற்காலியில்
அமர்ந்து இருந்தார். அவருக்கு வணக்கம் சொன்னவுடன் எழுந்து நின்று கைகொடுத்து
வணக்கம் சொல்லி அமர்ந்தது, ஆச்சரியமாக இருந்தது. அவர் அருகில் அமர
சொன்னவுடன் சிறிது நேரம் பொதுவான தலைப்புகளை பேசிவிட்டு அடுத்து இருந்த அறையில் உயிர் இதழ் அறிமுக கூட்டம் தொடங்கியது.
சண்முகானந்தம் அவர்கள் அறிமுக உரை நிகழ்த்தினார், இது உயிர் இதழின் முதல் அறிமுகக் கூட்டம். இதுவரை இரண்டு
இதழ்கள் வந்துள்ளன. உங்களின் இதழ் பற்றிய கருத்துகள் குறிப்பாக நிறைகளை விட,
குறைகள் மேலும் இதழை செழுமைபடுத்தும் என்று கூறி
தியடோர் பாஸ்கரன் சாரை பேச
அழைத்தார்.
Thursday, 26 April 2018
புத்தகம் – தமிழகத்தின் பறவைகள் காப்பிடங்கள்
பறவைகள் தொடர்பாக
புத்தகங்கள் சிறிது சிறிதாக அதிகரித்து வரத்தொடங்கி உள்ளது. அப்படி வந்துள்ள ஒரு
புது புத்தகம் “தமிழகத்தின் பறவைகள் காப்பிடங்கள்”- ஆசிரியர் ஏ.சண்முகானந்தம், முனைவர் சா.செயக்குமார். தமிழகதில்
உள்ள அணைத்து பறவை காப்பிடங்கள்(சரணாலயம்) பற்றி மிக விரிவாக தெரிந்துகொள்ள வந்திருக்கும்
முதல் புத்தகம் என்று சொல்லலாம்.
Subscribe to:
Posts (Atom)








