Saturday, 29 August 2020

இது வண்ணத்துப்பூச்சிகள் காலம் - Hindu Tamil

 

Angled Caster

கரோனா தொற்றுப் பரவல் காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பது ஒருவிதச் சலிப்பை ஏற்படுத்தலாம். இதற்குச் சிறந்த வடிகால், இயற்கையை அவதானிப்பது. சமீப ஆண்டுகளாக பறவைகளை நோக்குவது பரவலான பொழுதுபோக்காக வளர்ந்து வருகிறது. பறவைகள் மட்டுமல்ல, வண்ணத்துப்பூச்சிகளையும் இதேபோல் நோக்கத் தொடங்குவது சிறந்த பொழுதுபோக்காக அமையும்.

இந்தியாவில் பறவை வகைகளைப் போலவே வண்ணத்துப்பூச்சிகளிலும் 1300-க்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. கோடைக் காலம் முடிந்து ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் மழை தொடங்கும்போது தாவரங்களில் மலர்கள் பூத்து குலுங்கும். அப்போது வண்ணத்துப்பூச்சிகளும் ஓயாமல் அவற்றைச் சுற்றிப் பறந்து தேனை உண்கின்றன. வேலூர்-சித்தூர் செல்லும் சாலை காடுகள் சூழ்ந்த பகுதி. காட்பாடியைத் தாண்டினால் காடு தொடங்கிவிடுகிறது. சிறு பாலூட்டிகள், பறவைகள், பூச்சிகள், பலவகைத் தாவரங்கள், மலைகளை உள்ளடக்கிய காடு இது.

Sunday, 5 July 2020

ஒரு பறவையின் கால்களுக்கு இத்தனைப் பலமா? - Secretary Bird



2017ஆம் ஆண்டு, கென்யாவிலுள்ள மாசா மாரா தேசிய பூங்காவிற்குச் (Massa Mara National Park) சென்ற போது, செக்கிரட்டரி பறவையைக் காணச் சந்தர்ப்பம் கிடைத்தது. அதன் மிடுக்கான நடை, அழகிய தோற்றம், பாம்பை விழுங்கின வேகம் மனதிலும், புகைப்படத்திலும் பதிந்து விட்டன. இந்தப் பறவையின் இரை தேடும் திறமையைக் கேட்ட போது மிகவும் வியப்பாக இருந்தது.

ஆப்பிரிக்க நாடுகளில், புல் வெளிகளிலும், வறண்ட நிலப்பகுதிகளிலும் காணப்படும் செக்கிரட்டரி பறவை, பருந்துகள், கழுகுகள் இனத்தைச் சார்ந்த போதிலும், பருந்துகளைப் போல் வானில் பறந்து இரை தேடாமல், நிலத்தில் நடமாடி, இரையைப் பிடிக்கும் தன்மை வாய்ந்தது.  உயரமாகப் பறக்கத் திறமையுடையதாக இருந்த போதிலும், பகல் முழுவதும் நடந்து இரை தேடிய பின், மாலை நேரத்தில் மர உச்சிகளில் அடைகிறது. வலசை போவதில்லை.
           
செக்கிரட்டரி பறவையின், தலைப்பகுதி கழுகைப் போலவும், வளைந்த அலகையும் உடையது. உருவத்தில், பருந்து, கழுகு இனங்களை விட மிகவும் பெரியது. கால்கள் நீண்டு மெலிந்திருக்கும். நன்கு வளர்ச்சியடைந்த செக்கிரட்டரி பறவை, நான்கு அடி உயரமாகவும், ஐந்து முதல் ஒன்பது இராத்தல் எடை பருமனாகவும் இருக்கும். ஆண், பெண் பறவைகள் தோற்றத்தில் ஒன்று போலிருக்கும். இவை இணை பிரியாதவை. அக்கேசியா(Acacia) போன்ற உயர்ந்த மரங்களில் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்கிறது.

Tuesday, 9 June 2020

புதர் சிட்டு (Pied Bush Chat)

குழந்தைகளுக்கு பறவைகள் -1
-----------------------------------------------------

Picture- Wikipedia 

குட்டீஸ் மின் கம்பத்தில் சிட்டுக் குருவியை விட உருவில் சிறியதாக அமர்ந்து பாட்டுப் பாடிக் கொண்டு இருக்கும் இந்த பறவையைப் பார்த்து உள்ளீர்களா?..
என்னது இல்லையா ?......
என்ன நிறத்தில் இருக்கும் என்று சொன்னால்தானே எங்களுக்குத் தெரியும் .
ஆமாம் சொல்லாமல் விட்டேன்…...சரி சரி சொல்லிவிடுகிறேன்
குட்டிஸ், இந்த பறவை உடல், முழுவதும் கருப்பு நிறத்தில் இருக்கும்.. ..

Monday, 25 May 2020

Chithrangudi Bird Sanctuary



ராமநாதபுரத்திலிருந்து 45 கிலோமீட்டர்  சரணாலயம். உள்ளூர் நண்பரிடம் இருசக்கர வண்டி இருப்பது தெரிந்து வாங்கிக்கொண்டோம்.  காலை 6 மணிக்குக் கிளம்பிச் செல்லும் வழியெல்லாம் பறவைகளுக்குக் காலை வணக்கம் சொல்லிக் கொண்டே சென்றோம்.  

காலை வேலையில் பறவைகள் சுறுசுறுப்பாகப் பறந்தும், கிளையில் அமர்ந்தும், சில தரையில் நடந்தும், வயல்வெளிகளில் இரை தேடியும், நிலை குத்தி நின்றும் பார்த்தபொழுது மனிதர்கள் தன் கால்களைப் பயன்படுத்துவதைத் தவிர வாகனத்தில் செல்வதே அதிகம் என்று உணரமுடிந்தது.

எந்த பறவையும் மற்றொரு பறவை மீது சவாரி செய்வது இல்லை. எந்த வாகனமும் பறவைகளுக்கு கிடையாது. இறக்கை உடைந்தாலும் இரையை அதுவே தேடிக் கொள்ளவேண்டும். தன்னார்வலர்கள் என்பது பறவைகள் உலகில் முற்றிலும் கிடையாது.

Thursday, 21 May 2020

என்னைத் தேடி வந்த சிற்றுயிர்கள்- ஆதி வள்ளியப்பன்




விலங்குபறவை அடுத்து பூச்சிகள் நம்மைச் சுற்றி இருக்கும் உயிரினம் ஆகும். உண்மையில் உலகில் மிக அதிகமாக இருக்கும் உயிரினமும் பூச்சிகள் தான்.  நாம் விரும்பாத உயிரினமும் பூச்சிகள் என்று சொல்லலாம்.

பூச்சிகள் குறித்து புத்தகங்கள் தமிழில் மிக மிகக் குறைவாக வருகிறது. சமீபத்தில் வந்துள்ள  புத்தகம்தான் “என்னைத் தேடி வந்த சிற்றுயிர்கள்” -ஆசிரியர் ஆதி வள்ளியப்பன். எதிர் வெளியீடு 

பறவைகள் பார்க்க நாம் எங்கும் செல்லவேண்டாம் நம் வீட்டிற்கு வெளியே  இருந்து தொடங்கலாம். ஆனால் பூச்சிகள் பார்க்க  இன்னும் சுருக்கி நம் வீட்டிற்குள் இருந்தே தொடங்கலாம். 

ஆசிரியர் தன் வீட்டிற்கு உள்ளே-வெளியே பார்த்த பூச்சிகளை மிக எளிமையாக, சரியான தமிழ்ப் பெயர்கள் மற்றும்  அறிவியல் பெயர்களையும் கொண்டு எழுதிச் செல்கிறார்..

Sunday, 3 May 2020

Lockdown



கடைசியாகப் பறவைகளுக்கும் 20 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் முதல் இவை அமுலுக்கு வருகிறது. பறவைகள் மரத்தை விட்டு வேறு எங்கும் செல்லக்கூடாது. மரத்தில் இருக்கும் பழங்கள், அங்கு வரும் பூச்சிகள் போன்றவற்றை உண்ணவேண்டும். உங்கள் மரத்தில் வேறு பறவைகள் வந்தால் தகவல் கொடுக்க வேண்டும்.

இந்த தகவல்களை எப்படி அனைத்து பறவைகளாகும் தெரிவிப்பது என்ற விவாதம் தொடங்கியது. மக்களிடம் இந்த பணியைக் கொடுத்துவிடுவோம் அவர்கள் அவங்க இடத்தில் இருக்கும் மரத்தில் சிறு தாளில் எழுதி ஒட்டிவிடவேண்டும். மரத்தில் இருக்கும் ஒரு மூத்த பறவையை மரத்தின் தலைவனாகக் கொண்டு அந்த பறவையிடம் சொல்லிவிடவேண்டும்.

அனைத்தும் தொலைக்காட்சியிலும் Breaking Newsஆக ஓடிக் கொண்டிருந்தது.

Tuesday, 14 April 2020

Therthangal Bird Sanctuary



“L” வடிவில் தேர்த்தங்கல் சரணாலயம் அமைந்துள்ளது. நாம் சென்று சேரும் இடம் இரண்டு கோடு சந்திக்கும் இடத்தில், ஒரு மத்தியபொழுது அந்த  சந்திப்பில் சென்று இறங்கினோம். சரணாலயம் முழுவதும் நீரால் சூழப்பட்டுள்ளதால் நீர்ப் பறவைகள்-கரையோர பறவைகள் எண்ணிக்கையில் மிகுதியாக இருந்தது.

நண்பர் மாசிலாமணியுடன் தேர்தங்கல் பறவைகள் சரணாலயம் சுற்றிவந்ததில் வறண்ட மாவட்டமான ராமநாதபுரம் இங்கு வந்தபிறகு அப்படித் தெரியவில்லை. நீர் சூழ்ந்த பகுதியில் பறவைகள் கொண்டாடமாக உள்ளது.

சத்தம் எழுப்பாத நத்தைகொத்தி நாரைகள் ஒரு மரத்தில் குவியலாக அமர்ந்து இருந்தது. பறவைகள் எப்பொழுதும்  தங்கள் இருப்பிடங்களைத் தெளிவாகப் பிரித்துக் கொள்கின்றன. இங்கேயும் அப்படியே பிரித்து எல்லைக்கோடுகளை அமைத்து இருந்தது. அனைத்து பறவைகளுக்கும் இந்த நீரில்தான் உணவு என்றாலும் ஒன்றுக்கு ஒன்று சண்டை இடுவதில்லை.

Saturday, 14 March 2020

Asian Openbill Stork (Uyir Magazine)


Openbill Stork
அலகு நீண்ட பறவை வகைகளில் நத்தைக்கொத்தி நாரை தனித்துவம்மிக்கது ஆகும்.  சில நேரம் இப்பறவையை பார்க்கும்பொழுது செங்கால் நாரை(white stork) ஒத்து காணப்படும்.  செங்கால் நாரையின் பிளவு இல்லாத அலகின் சிகப்பு நிறம்  வேறுபடுத்தி காட்டுகிறது. நீர் நிலைப் பறவையான நத்தை குத்திநத்தைக்கொத்தி நாரை, பெயருக்கு ஏற்றாற்போல் நத்தையை முதன்மை உணவாக உண்டு வாழ்கிறது.

இந்தியாவில் வாழக்கூடிய பறவையாகும். நத்தைக்கொத்தி நாரை பொதுவாக இடப்பெயர்ச்சி செய்யாது. தேவைப்படும்பொழுது மட்டும் வலசை செல்லும். நன்கு வளர்ந்த நாரையின் அலகு நடுவில் பிளவு இருப்பதை பார்க்கலாம். வளர்ந்து வரும் இளம்பறவைகளுக்கு இந்த பிளவு இருக்காது.  ஆண்-பெண் இரண்டும் ஒன்று போலவே இருக்கும்.  இனப்பெருக்க காலத்தில் நல்ல வெள்ளை நிறத்தில் இருப்பதை பார்க்க முடியும்.

Tuesday, 9 July 2019

Bird Watching - பறவை நோக்குதல்


குளிர்கால மாதங்களில் சென்னையை சுற்றி பறவைகள் பார்க்கப்பட்ட இடங்கள் மற்றும் பறவை வகைகள் பற்றிய  இந்து தமிழ் நாளிதழில் சென்னையும் ஒரு வேடந்தாங்கள்தான் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை 

இணைப்பு :

https://tamil.thehindu.com/general/environment/article27244351.ece